கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label விழிப்புணர்வு கட்டுரை. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு கட்டுரை. Show all posts

12 April, 2018

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்க....!



தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இலவசமாக
கல்வி பயில்வது எப்படி*?

********************************

*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*?


*RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009*


*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?


முடியும்!


என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?


ஆம்.


*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018


*இந்த சட்டம் ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA ) கொண்டு வரப்பட்டது...


*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*?


★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★ தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர், 

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்

இருக்கும் தனியார் பள்ளிகளில் உங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*


*மற்றும் முதல் வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*

*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள் 8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*


இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து கல்வி பயிலலாம்.


*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*

*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*


பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.


*அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீதம் இடங்களை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும்* *குழந்தைகளுக்கு*

*கண்டிப்பாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்*

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம் அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.


*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் சிறுபான்மையினர் பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*


*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை. கட்டணம் செலுத்துங்கள் பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*


*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.


உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர், மெட்ரிக்பள்ளி இயக்குநர், இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.


சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!


*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்*


★ எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின்        கல்வி கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★ கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★ பெயர் தான் இலவசக்கல்வி !

★ இது கேவலம் அல்ல!

★ மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★ கவலை வேண்டாம்!

★ இது கனவல்ல! நிஜம் !



★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*

*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*


தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.



★ *விண்ணப்பம் செய்வது எப்படி*?


★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே விண்ணப்பிக்கலாம் .


1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்


*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்



★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*

1. பிறப்பு சான்று

2. குழந்தையின் புகைப்படம்

3. ஜாதி சான்று

4. வருமான சான்று

5. இருப்பிட சான்று

6. முகவரி ஆதாரம்


*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில் ஒவ்வொரு சான்றுக்கும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.


★ இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.


★தனியார் பள்ளிகளில் L.K.G வகுப்பிற்கான சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.


★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள். இது சட்ட விரோதமான செயலாகும்.



★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.


*இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள் குறிப்பிட்டு 16.04.2018 அன்று* *பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*



*20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*


*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*


*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*


★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.


★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!


★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.


★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.


*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*


★ ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.


★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.


★ 2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★ 2017-2018 ஆம் கல்விஆண்டில் 2,36,000 இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம் காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40,000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.


★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.


*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் இலவச சேரக்கை நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*


*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*


★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 


★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.


★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.



★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை*


*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*


*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*!


பெற்றோர்களே!

நண்பர்களே !

சமூக ஆர்வலர்களே!

சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !


*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*


*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*

*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*


*மேலும் இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்* *தனியார் பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும் .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்* *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அனுகலாம்...


மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 

நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?

அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.


*கவலை வேண்டாம்*!!

*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*


*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*

*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*


*******************************

*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே இலட்சியம்*

20 March, 2018

ஆடை குறைப்பும்.. அடுத்தவர் பார்வையும்...


ஆபாசம் என்பது உடையில் உள்ளதா...? பார்க்கும் பார்வையில் உள்ளதா..? நம் நடவடிக்கைகளில் உள்ளதா? என்பது குறித்து இன்று வரை பல்வேறு விவாதங்கள் நடந்தவண்ணமே உள்ளது.

ஆபாசம் என்பது என்னை பொறுத்தவரையில் ஆடைதான் முக்கியபங்கு வகிக்கிறது என்று கருதுகிறேன்... ஒருவருடைய மனதில் சட்டென மரியாதையையோ.. அல்லது காமத்தையோ உண்டுப்பண்ணுகிற சக்தி ஆடைக்கு உள்ளது.... நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் புத்திதான் சரியில்லை என்று மற்றவர்களை குறைச்சொல்லும் சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

ஆடைச்சுதந்திரம் என்பது நமக்கும் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் எற்படுத்தகூடியதாக இருக்கக்கூடாது. ஆடைதான் ஒருவர் மீது நல்ல அபிப்ராயத்தையும்.. தீய எண்ணத்தையும் ஏற்படுத்துவதான உள்ளது... நம்முடைய சுதந்திரம் நமக்கே பாதிப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்தும் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை நாம் ஏன் அது கிரிடமாக இருந்தால் கூட தூக்கியெறியகூடாது.


உடனே ஒரு கேள்வி எழும்... அது உன் வீட்டில் உள்ள பெண்கள் இப்படி இருந்தால் என்னச்செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் அல்ல... மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி அவர்களின் மகள் சொல்வதை கேளுங்கள்...

முஹம்மது அலி ஒருமுற‌ை தன் மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்....

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். 

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, "ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. 


வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன. 

முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன. 

தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். 

"என்னை உற்று நோக்கியவராக, "உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"....

இதற்குமேல் வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை... ஆடைச்சுதந்திரம் என்பது ஆடையை அழகுப்படுத்துவதில் இருக்கட்டும்... அதை குறைப்பதில் வேண்டாமே...!

02 November, 2011

இதை சொன்னால் வெட்க கேடு.. சொல்லாவிட்டால் மானக்கேடு...


காலை எழுந்து செய்தித்தாளை புரட்டினாலே போதும் ஊழல், விபத்து, லஞ்சம், கைது போன்ற வா‌ர்த்தைகள்தான் அதிகம் ஆட்கொள்கிறது. அதிலும் ஊழலைப்பற்றிய தகவல்கள் வராத நாட்களே இல்லை. சுதந்திரம் அடைந்தபிறகு முதல் இந்திய பட்ஜெட் ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒருவர் பதுக்கியுள்ள பணத்தின் அளவை கேட்டாலே தலை சுற்றுகிறது. செய்தித்தாள்களில் ஊழல்களின் அளவை ரூபாயில் பார்க்கும்போது நம்நாடா ஏழை நாடு என்று என்னத்தோன்றுகிறது.

சுவீஸ் வங்கி நடத்திய ஆய்வில், ஒரு அரிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள், 200 ஆண்டுகளில் கொள்ளையடித்தது, ஒரு லட்சம் கோடிதானாம். ஆனால், சுதந்திரம் அடைந்த இந்த, 65 ஆண்டுகளில், இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்தது, 25 லட்சம் கோடி ரூபாயாம். 

இத்தகவலை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மதுரை மேடையில் வெளியிட்டு, நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். இந்திய அரசியல்வாதிகளின், இவ்வியத்தகு சாதனையை எண்ணும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள், இப்படி நடந்துக் கொள்ள காந்தி வாங்கிய சுதந்திரமே காரணம். அவர் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்காவிட்டால், நாம் இந்த அளவுக்கு கொள்ளையடித்து பேரும், புகழும் பெற்றிருக்க முடியாது. 

கோவையில் செக்கு இழுத்து கஷ்டப்பட்ட சிதம்பரனாரும், தூக்கு கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கும், சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று ஆனந்தமாகப் பாடிய பாரதியாரும், இன்று நம்மிடையே இல்லை என்பது தான், பெரிய குறையாகத் தெரிகிறது. அவர்கள் இச்சாதனையை கேட்டிருந்தால், நிச்சயம் மகிழ்ந்திருப்பர். உச்சி குளிர்ந்திருப்பார்கள்.

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு அதன் மூலம் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை. சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகள் கழித்தும், இந்தியர்கள் எப்படி இருப்பர் என்பதைக் காட்டத்தான், அன்றே காந்திஜி, பாதி உடை மட்டும் அணிந்தார் போலும்....!

அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தை போல், எத்தனை போராட்டம் நடத்தினாலும், ஊழலை ஒழிக்க முடியாது. தனிமனிதன் என்று தன்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு தம்தாய் நாட்டிற்காக பாடுபடுகிறார்களோ அப்போதுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.

தன்னுடைய பணத்தாசையின் விளைவாக இந்த அரசியல்வாதிகள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்து இந்தியாவின் வளங்களை அன்னியநாட்டில் குவிந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கும்போது அந்த நபரை கைது செய்தால் மட்டும் போதாது அவருடைய அத்‌தனை சொத்தையும் பறிமுதல் செய்ததோடு அந்த ஊழல் பணம் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இறுதியாய் இந்தியா பணக்கார நாடாக ஆகாவிட்டால் கூட பராவயில்லை. ஊழல் நாடு என்று எதிர்காலத்தில் உலக அரங்கில் பெயர் எடுக்காமல் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.

01 August, 2011

ஏய்... என்னஇது! தயவுசெய்து வாயை மூடுங்க...


“டாக்டர்..! ஒரு முக்கியமான பிரச்சனை... அதான் உங்ககிட்டே வந்தேன்...”

“என்கிட்டே வந்துட்டீங்கள்லே... இனி‌மே எதுக்கும் பயப்பட வேண்டாம்... ‌சொல்லுங்க... என்ன பிரச்சனை?”

“எனக்குத் தொடர்ந்து கொட்டாவி வந்துகிட்டே இருக்கு டாக்டர்...!” (ஏன்... மனோ பதிவை படிச்சாரா)

“அப்படியா...? வந்து இப்படி இந்த நாற்காலியிலே சாய்ஞ்சு உக்காருங்க.. பார்க்கலாம்..!”

“ஏன் டாக்டர்... மனிதன் மட்டும்தான் இப்படி கொட்டாவி விடறானா..?”

“அப்படி இல்லே... பறவைகள், மிருகங்கள், மீன்கள் கூட கொட்டாவி விடறதுண்டு..!”

“ஓ... அப்படியா..?”

“ஆனா ஒரு வித்தியாசம்..?”

“என்னது?”

“நாமெல்லாம் கொட்டாலி விட்டா... ஒண்ணு தூக்கம் வருது.... அல்லது விஷயம் ரொம்ப போர் அடிக்குதுன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஆனா மிருகங்கள் விஷயத்துலே அப்படி இல்லே..!”

“வேறே எப்படி?”
 
“‌அதற்கெல்லாம் வேறே வேறே காரணங்கள்... உதாரணத்துக்கு, ஒரு நீர் யானை கொட்டாவி விட்டா அது ஓர் எளிய சண்டைக்குத் தயாராகுது-ன்னு அர்த்தம்.!” (மாப்ள தமிழ்வாசி பிரகாஷ் கொட்டாவி விட்டா அதுக்கு அர்த்தமே வேற.... அட.. ‌நைட் டூயுட்டின்னு அர்த்தங்க...)

“ஆச்சரியமா இருக்கே..!”

“ஆச்சரியப்பட்டு ஏன் இவ்வளவு அகலமா வாயைத்திறக்கறீங்க.. மருந்து விட்டுட்டேன்.. மூடுங்க! ஏன்? மறுபடியும் கொட்டாவி வருதா..?”

“இப்ப நான் வாயைத் திறக்கறது கொட்டாவியினாலே இல்லே டாக்டர்...”

“வேறே எதனாலே?”

“உங்கக் கையிலே இருக்கிற, “பில்”லைப்பார்த்ததுனாலே..!”

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.

அலுப்பு , உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. 

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. 

  • கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
  • நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
    மூளை குளிர்வடைகிறது.
  •  நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது. 
  • மூளை குளிர்வடைகிறது.
    கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
  • குருதியில் கரிமவாயு-உயிர்வவாயு நிலைப்பாடு மாறுபடுதல்.
  • ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
  • அயர்வு
  • அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
  • மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்
கடைசியா ஒரு நகைச்சுவை


"தலைவரே! நீங்க இப்ப சொன்னது
நூத்துக்கு நூறு உண்மை...!''

''சரியான ஜால்ராய்யா நீ!
இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''
 



இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன் ஏன்னா அப்புறம் நீங்க கொட்டாவி விடப்போறீங்க....
 
கருத்து பரவுலுக்காக தங்களுடைய வாக்குகளையும் கருத்துக்களையும்
பதிவுச் செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

14 June, 2011

காதல் கடிதம்.... (இதை ரகசியமா வச்சிக்கங்க..)



“இந்தக் கல்லூரியிலே எவ்வளவோ பெண்கள் இருக்காங்க... இருந்தாலும் உங்களைத்தான் நான் விரும்பறேன்... இது நான் உங்களுக்காக எழுதின முதல்  காதல் கடிதம்...!”

“உங்களுக்குத் தெரியுமா... காதல் கடிதம் எழுதினதுலே ஓர் உலக சாதனை...!”

“தெரியாதே!”

“கனான் பில் குக் - அப்படின்னு ஒருத்தார். இங்கிலாந்து ராணுவத்திலே இருந்தார். இவர் ஹெலன் - என்கிற பெண்ணைக் காதலிச்சார். கொஞ்ச நாள்‌லே யுத்தம் ஆரம்பமாயிட்டுது... இவர் போர்முனைக்குப் போயிட்டார். சுமாரா நாலரை ஆண்டுகள் காதலியைப் பிரிஞ்சி இருந்தார். போர் முடிஞ்சி திரும்ப வந்ததும் திருமணம் அமோகமா நடந்துதாம். ‌அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுதாம்... பிரிவுக் காலத்துலே அவங்க எழுதிக்கிட்ட காதல் கடிதங்கள் மொத்தம் ஆறாயிரம்! இது ஒரு கின்னஸ் சாதனை!”

“இந்த முதல் கடிதத்தை நீங்க மறுக்காமே வாங்கிக்கிட்டா... என்னதலேயும் அதுமாதிரி ஒரு சாதனை நிகழ்த்த முடியும்!”

“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு!”

“எதுவா இருந்தாலும் ‌கேளுங்க... சொல்றேன்!”

“இவ்வளவு பெண்கள் இருக்கிற இந்தக் கல்லூரியிலே நீங்க என்னை விரும்பறத்துக்கு என்ன காரணம்?”

“எனக்கு மனைவியா வருகிற பெண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்... அதனாலே தான்?”

“சாரி.. நான் உங்க காதலை ஏத்துக்க முடியாத நிலை...”

“என்ன காரணம்?”

“எனக்குக் கணவனா வருகிற ஆண் அழகா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்.. அதனாலே தான்....!” (நன்றி வாரம் ஒரு தகவல்)
பொதுவாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தான் பெண் அழகாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும், சொந்தங்கள் குறைவாக இருக்கவேண்டும், வரதட்சணை அதிகம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பரிமாண வளர்ச்சிக்கு பிறகுதான் ஒரு பெண் மணமேடை ஏறுகிறாள். ஆனால் காதல் திருமணங்களில் பொதுவாக பார்க்கப்படுவது அழகு மட்டுமே. ஒரு பெண் அழகாக இருந்துவிட்டால் போதும் அவளுக்கு இளைஞர்களின் காதல் பார்வைகள் பல்வேறு கோணங்களில் இருந்து அம்புகளாய் வந்து விடும். ஆனால் கொஞ்சம் அ‌ழகு குறைவாக இருக்கும் பெண்களுக்கு காதல் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் கைக்கூடுகிறது.

இன்றைய இளைஞர் கூட்டம் அ‌ழகு பெண்களை தேடியே தன் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அவர்களுக்கு தன்னைப்பற்றி கவலையில்லை தன் நிலையைப்பற்றி கவலையில்லை ஆனால் காதலி மட்டும் அழகாக இருந்து விடவேண்டும். அப்படியென்றால் அழகே இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அ‌ழகு மட்டுமே வாழ்க்கையை நடத்திவிட கைகொடுத்து விடாது. நல்ல மனது மட்டும்தான் ஒரு வாழ்க்கையை வசந்தக்காலமாக்கும்.


அழகை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் கண்டிப்பாக ஏராளமாக இருக்கிறார்கள் ஆகையால் பெண்ணின் மனதுக்கு மரியாதை தாருங்கள், அழகு அடுத்த இடத்தில் வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் கருத்திட்டு வாக்குகளை பதிவுச் செய்யுங்கள்...
தங்கள் வருகைக்கு நன்றி..!
Related Posts Plugin for WordPress, Blogger...