கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 March, 2018

ஆடை குறைப்பும்.. அடுத்தவர் பார்வையும்...


ஆபாசம் என்பது உடையில் உள்ளதா...? பார்க்கும் பார்வையில் உள்ளதா..? நம் நடவடிக்கைகளில் உள்ளதா? என்பது குறித்து இன்று வரை பல்வேறு விவாதங்கள் நடந்தவண்ணமே உள்ளது.

ஆபாசம் என்பது என்னை பொறுத்தவரையில் ஆடைதான் முக்கியபங்கு வகிக்கிறது என்று கருதுகிறேன்... ஒருவருடைய மனதில் சட்டென மரியாதையையோ.. அல்லது காமத்தையோ உண்டுப்பண்ணுகிற சக்தி ஆடைக்கு உள்ளது.... நாகரீகம் என்ற பெயரில் ஆடையை குறைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் புத்திதான் சரியில்லை என்று மற்றவர்களை குறைச்சொல்லும் சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

ஆடைச்சுதந்திரம் என்பது நமக்கும் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் எற்படுத்தகூடியதாக இருக்கக்கூடாது. ஆடைதான் ஒருவர் மீது நல்ல அபிப்ராயத்தையும்.. தீய எண்ணத்தையும் ஏற்படுத்துவதான உள்ளது... நம்முடைய சுதந்திரம் நமக்கே பாதிப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்தும் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை நாம் ஏன் அது கிரிடமாக இருந்தால் கூட தூக்கியெறியகூடாது.


உடனே ஒரு கேள்வி எழும்... அது உன் வீட்டில் உள்ள பெண்கள் இப்படி இருந்தால் என்னச்செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் அல்ல... மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி அவர்களின் மகள் சொல்வதை கேளுங்கள்...

முஹம்மது அலி ஒருமுற‌ை தன் மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்....

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். 

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, "ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. 


வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன. 

முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன. 

தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். 

"என்னை உற்று நோக்கியவராக, "உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"....

இதற்குமேல் வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை... ஆடைச்சுதந்திரம் என்பது ஆடையை அழகுப்படுத்துவதில் இருக்கட்டும்... அதை குறைப்பதில் வேண்டாமே...!

1 comment:

  1. மிகச் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...