ஒரு சமயம் நெப்போலியனின் வீரத்தைச் சோதிக்க விரும்பிய ஜரோப்பிய தலைவர்கள் ஒரு சோதனை செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் ஒரே நேரத்தில் தேநீரை எடுத்து அருந்துவார்கள். அவ்வாறு அருந்த முற்படும்போது வெளியே காதைச் செவிடாக்கக்கூடிய பலத்த சப்தத்துடன் பீரங்கியை வெடிப்பதென முடிவு செய்தார்கள்.
அதே போல் அனைவரும் கூடியிருந்து தேநீர் அருந்தும்போது திடீரென பலத்த ஓசையுடன் பீரங்கியை வெடித்தார்கள். சப்தம் கேட்டு நடுங்கிப்போன அனைவரும் கோப்பையை கீழே போட்டு விட்டார்கள்.
ஆனால் நெப்போலியன் மட்டும் எதற்கும், அஞ்சாதவராய் மெல்ல தேநீரை அருந்தியவாறே என்ன சத்தம் அங்கே? என்று கேட்டார்.
அவருக்கு சோதனை வைத்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லையாம்.
ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் அடிக்கிற கூத்து இருக்கிறதே.. அப்பப்பா...
இவர் சரியில்லை என்று அவரை மாற்றினால், அவரும் சரியில்லையென்று இவரைமாற்றுவோம் என, இப்படித்தான் 30 ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாற்றிமாற்றி வைத்துவிட்டு, தற்போதைய தமிழகத்திற்கு மாற்றுக்கு ஒரு தைரியமானத் தலைவர் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.
ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதைவிடுத்து மக்கள்தான் அரசை காப்பாற்ற வேண்டும் என்ற அறிக்கை, கேட்பதற்கே வித்தியாசமாய் இருக்கிறது. விலையேற்றம், வரிச்சுமைகளை அதிகரித்துவிட்டு மக்கள்தான் அரசை காப்பற்ற வேண்டும் என்றால் அப்போது இவர்கள் எதற்கு..? ஆட்சியாளர்கள் என்று அந்தஸ்த்து மட்டுதானா.
தலைமைபொருப்பில் இருப்பவர்கள் மக்களுக்கு எந்த இழப்பும், எந்த கஷ்டமும் இல்லாமல் பார்த்து கொண்டு தைரியத்துடன் ஆட்சியை நடத்தவேண்டும். அதைவிடுத்து மக்கள் தான் அரசுக்கு உதவவேண்டும் என்று சொல்வது கொஞ்சம்கூட நியாயம் இல்லாதது.
இனிவரும் காலங்களிலாவது மக்களின் பிரச்சனையில் அதிகம் அக்கறை எடுத்து நடுத்தர மற்றும், சாமானிய மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் எரிபொருட்கள், பேருந்து, பால், மின்சாரம், காய்கறிகள் போன்றவற்றின் விலைகளை அரசு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசின் வருவாயை உயர்த்த ஆயிரம் வழிகள் இருக்கிறது. அதை முறையான பொருளாதர வள்ளுநர்களை அனுகி அவர்களிடம் அறிவுரைப்பெற்று அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைக்கு அரசு திவாலாகும் நிலைவந்தாலும் கலங்காது இருந்து, மக்களை காக்கும், தைரியமான ஒரு அரசு வரும் என்று நம்பிக்கையை எதிர்நோக்கி காத்திருப்போம்.







