கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 November, 2012

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இணைந்திருப்போம்...


வீறுகொண்ட என் கவிதைகளுக்கு 
கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!

உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த 
அந்த ஒற்றை ரோஜாவை 
வெடுக்கென்று பறித்து சூடிக்கொண்டாய்... 
அதைகண்டு கண்ணீர் வடிக்கிறது 
என் கவிதைகள்..!

சிட்டுக்குருவி சிணுங்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுங்களை
நான் கவிதையாக்க...!

ஒற்றைப் பார்க்கும் அடுத்த பார்வைக்கும் 
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ...
காயப்பட்டு காத்திருக்கிறது 
என் வார்த்தைகள்...!

உன்னால் மட்டும்தான் முடிகிறது
நான் எழுதும் என் கவிதைகளுக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...

ஆயிரம் முறை எழுதிய 
உன்னைப்பற்றிய வர்ணனைகள்
எப்போதும் புதியதாகவே இருக்கிறது ...

அது எப்படி ஒவ்வொறு முறையும் 
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள் 
 உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது...!

இதுவரையில் முடியவில்லை
உன்னையும் காதலையும் கலக்காமல் 
கவிதையை முடிக்க..!

இருதரப்பிலும் எழுகிறது பிரச்சனைகள்
இருந்தாலும் காதலிப்போம்
என் கருவறையில் அவதரிக்கும்
தம் கவிதைகளுக்காக...!

வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி...!

9 comments:

 1. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 2. காதலில் தோய்ந்த கவிதைகள் அத்தனையும் நன்று. எனினும் கடைசி மூன்றில் சுவை கூடுதல்.

  ReplyDelete
 3. ரசித்து உணர்ந்து அனுபவித்து
  எழுதிய கவிதை போலும் .
  அழகு !

  ReplyDelete
 4. இருந்தாலும் காதலிப்போம்
  என் கருவறையில் அவதரிக்கும்
  தம் கவிதைகளுக்காக...!

  கவிதைக்கான காதல் வாழ்க.

  ReplyDelete
 5. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 6. காதல் பொங்குகிறது கவிதையில்

  ReplyDelete
 7. அப்போ கவிதைகளுக்காகத்தான் காதலிக்குறீங்களா?!

  ReplyDelete
 8. ரசிக்க வைக்கும் வரிகள்...

  ReplyDelete
 9. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...