பேஸ்புக், டுவிட்டர், இணைய பதிவுகளில் இதுவரை என்னவேண்டுமானாலும் போடலாம்.. யாரை வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அது சமீபகாலமாக ஒரு பயத்தை ஏற்படுத்தி வருகிறது. தவறாக கருத்திட்டாலோ அல்லது அவதூறான கருத்துக்களையோ செய்திகளையோ பரப்பினால் கைது என்ற நிலை தற்போது நிலவுகிறது.
ஒரு தனிமனிதர் மீது, வார்த்தை வசைகள் தொடுப்பது மற்றும் அவர்கள் கருத்துக்கு மறுப்புகருத்து வெளியிடுவது என்ற எண்ணம் தற்போது குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.
தனிமனித தாக்குதல் என்பது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அது சரி யார் மீது தாக்குதல் இருக்க கூடாது.. எவர் ஒருவர் பொது வாழ்வில் ஈடுபடவில்லையோ அவர்கள் மீது கண்டிப்பாக அவதூறுகள் பரப்பக்கூடாது. ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவரைப்பற்றி கண்டிப்பாக விமர்சிக்ககூடிய உரிமை அனைவருக்கும் உண்டு.
அரசியலோ, கலைதுறையோ, அல்லது வேறு ஏதாவது முறையில் பிரபலமானவர் ஒரு கருத்தை சொல்லும் போது அதை எதிர்த்தோ மறுத்தோ கருத்துச்சொல்லக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. அப்படி சொல்வது தவறு என்றால் அந்த நபர் வாயை முடிக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது பொதுவாழ்க்கை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதிர்த்து வழக்கு தொடுப்பது அவர்களை கைது செய்து தன்னுடைய பலத்தை காட்டுவது இதெல்லாம் அயோக்கிய தனம் என்று தான் நான் சொல்லுவேன்.
அதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதூறு அல்லது அவமரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி சொன்னாலும் அதை ஏற்க்கொள்கிற மனபக்குவம் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வரவேன்டும்.
எங்க ஊர் கோயில் மரத்தடியில் உட்கார்ந்து இன்றைக்கு முதல்வர், பிரதமர், என அத்தனை போரையும் கிழிகிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் அதற்காக அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைத்தால் அப்படியே இந்தியாவில் இருக்கும் அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டியிருக்கும்.
தெருவுக்கு தெரு மேடைப்போட்டு அரசியல் கட்சிகளும் அடுத்தவர் பற்றி அவதூறு செய்திகளையும் வன்மையான வார்த்தைகளையும் சொல்லி வசைப்பாடிக்கொண்டிருக்கிறது. அவர்களை பற்றி அவர்களுக்கு எதிராக என்ன செய்துவிட்டார்கள். அந்தந்த கட்சி பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் போன்றோரின் பேச்சுகளை கேட்டால் போதும் அவ்வளவுதான் நம் காதுகள் பாழாகிவிடும்.
பொது ஊடகங்களில் பொதுவாழ்வில் இருப்போர் பற்றி அவர்களின் செயல் பாடுகள் மற்றும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக எதிர்கருத்தை மறுப்பு கருத்தை பதிவுசெய்யக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. கொஞ்சம் சபை நாகரீகம் கருதி செயல்பட்டால் போதும்.
என்பதிவுகளில் சிலபதிவுகளில் சில அரசியல் தலைவர்கள், சில பொது ஊடகங்களை விமர்சித்து அவர்களின் தவறை அல்லது அவர்களின் தவறாக கொள்கையை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு செயல் செய்யும் போது அதை பாராட்டினால் ஏற்றுக்கொள்பவர்கள் அதில் உள்ள குறைகளை சொல்லும்போதுமட்டும் பொங்குவது சரியல்ல.
சும்மா பூச்சாண்டி... இதற்கெல்லாம் அசருவோமா...?
ReplyDelete/// கொஞ்சம் சபை நாகரீகம் கருதி செயல்பட்டால் போதும். ///
நல்ல கருத்துக்களுக்கு நன்றி...
tm2
நல்ல பகிர்வு.
ReplyDeleteநம்ம பக்கம் நியாயமான கருத்துக்கள் இருக்கும்போது தயங்காமல் கூறுவதுதான் நல்லது.
//எங்க ஊர் கோயில் மரத்தடியில் உட்கார்ந்து இன்றைக்கு முதல்வர், பிரதமர், என அத்தனை போரையும் கிழிகிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் அதற்காக அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைத்தால் அப்படியே இந்தியாவில் இருக்கும் அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டியிருக்கும். //
உண்மைதான் நண்பரே.
நல்லது ராஜி...
Deleteவிடுங்க பாஸ்...இவங்க எப்பவுமே இப்படித்தான்..ஆ..ஊ னா பிடிச்சி உள்ளே போட்டிருவேணு சொல்லுவாங்க.
ReplyDeleteஅதற்காக நாமும் எல்லை மீறக்கூடாது சிவா...
Deleteதங்கள் கருத்துக்கு நன்றி...!
கருத்து சுதந்திரம் தேவைதான்.எல்லை மீறாமல் இருத்தல் நலம்.
ReplyDeleteஇதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்..
Deleteநன்றி நண்பரே...
பொது வாழ்வில் இருப்போரின் குறைகளை சுட்டிக்காட்டுவதும், கலாய்ப்பதும் தவறில்லை. ஆனா, அளவுக்கு மீறி வரம்பு மீறினால்!!?? சட்டம் பாய்வதில் தவறில்லை.
ReplyDeleteஅதுக்காக, என்னை அடிச்சுட்டான், கிள்ளிட்டான்னு ஸ்கூல் பிள்ளைங்க போல கம்ப்ளைன்ட் செய்யுறதும் தப்பு...,
உண்மைதாங்க...
Deleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
ராஜியின் வார்த்தைகள்தான் என் வார்த்தைகளும். அருமையாச் சொன்னம்மா தங்கச்சி.
ReplyDeleteநல்லது தலைவரே...
Delete\\
ReplyDeleteஅரசியலோ, கலைதுறையோ, அல்லது வேறு ஏதாவது முறையில் பிரபலமானவர் ஒரு கருத்தை சொல்லும் போது அதை எதிர்த்தோ மறுத்தோ கருத்துச்சொல்லக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. அப்படி சொல்வது தவறு என்றால் அந்த நபர் வாயை முடிக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது பொதுவாழ்க்கை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதிர்த்து வழக்கு தொடுப்பது அவர்களை கைது செய்து தன்னுடைய பலத்தை காட்டுவது இதெல்லாம் அயோக்கிய தனம் என்று தான் நான் சொல்லுவேன்.\\
இந்த மாதிரி எதிர் கருத்து சொல்பவர்களின் மீது வழக்கு தொடுக்க எதற்காக சட்டத்தில் அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது? அதைத்தானே நீங்கள் எதிர்க்க வேண்டும்?
சட்டம் இருப்பதால் தான் இது நடக்கிறது நண்பரே...
Deleteஇந்த கருத்து சட்டத்தையும் குறைச்சொல்லித்தான்..
இப்படி இருந்தால் நாளை வாயைத்திறந்தால் கூட குறை என்று சொல்லிவிடுவார்கள்...
சட்டமோ நடைமுறையோ தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக இருக்க கூடாது அதுதான் என்னுடைய வாதம்...
நன்றி
சரியா தான் சொல்லி இருக்கீங்க.. அவைய்ங்களும் நாம சொல்றத கேட்க போறதில்ல நாமளும் அவைய்ங்க சொல்றத கேட்க போறதில்ல..
ReplyDelete//
என்னது...! கருத்து சொன்னா போலீஸ்ல புடிக்கிறாங்களா...!//
இந்த பதிவு கூட கிட்ட தட்ட கருத்து சுதந்திர பதிவு தான்
வாழ்த்துக்கள் அண்ணா
நல்லது ஹாரி...
Deleteநல்ல கருத்துக்கள்! என்னை பொறுத்தவரை டிவிட்டர் பேஸ்புக் இதெல்லாம் நம்ம ஊர் டீக்கடை போல! இதில் அரட்டை அடிப்பதற்கு எல்லாம் கைது கொஞ்சம் ஓவர்தான்! ஆனால் அநாகரிகமாக பேசக்கூடாது! நல்ல பகிர்வு!
ReplyDeleteஇப்பல்லாம் எதையும் எழுதும் முன் நாலு தடவை யோசிச்சுத்தான் எழுதணும் ஆசிரியரே!
ReplyDeleteத.ம.8
கருத்துச் சொல்லும்போது கூட கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது சௌந்தர்.
ReplyDeleteஇன்றைக்கு எதிர்மறையான கருத்துக்களை
ReplyDeleteதாங்கிக் கொள்ளும் பக்குவம் குறைந்துவிட்டதோ என்னவோ...
அப்படி நினைப்பவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லவா....
புகழுரைகளுக்கு வசியப்படும் பொது
தம்மால் நடந்த தகாத செயல்களுக்கு
இகழுரைகள் வரும்பொழுதும்
ஏற்றுக்கொள்ள வேண்டும்...
அந்தப் பக்குவத்தை முதலில் அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்...
அன்பின் சௌந்தர் - பதிவு நன்று - மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete