விஜயகாந்தை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கிய வடிவேலு. தன்னுடைய பிரச்சாரத்தால் திமுக-வுக்கு எந்த பலனும் இல்லை என்ற பிறகு.. எதிர்த்தவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில் கிட்டதட்ட ஓரம்கட்டப்பட்டார். அவருடைய நகைச்சுவை விருந்தை தமிழக ரசிகர்கள் வெகுவாக இழந்து வாடினார்கள்.
தற்போது அடுத்து
அதிரடியாக நான்கு படங்களில் நடிக்கிறார் வடிவேலு. தனது அடுத்தடுத்த
படங்கள் குறித்து அமைதி காத்தவர், இப்போது ஒரு பேட்டியில் அவரே முழு
விவரங்களையும் தெரிவித்துள்ளார். ஏன் இத்தனை பெரிய இடைவெளி.. அடுத்த
படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வடிவேலு, "ஒரு இடைவெளி
விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது.
அதிரடிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன்.
நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட்
2'. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அடுத்தடுத்து,
ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு', யுவராஜோட 'தெனாலிராமன்',
அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்'. எழுதிக்குங்க... வடிவேலு
திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!'', என்று பதிலளித்துள்ளார். வடிவேலு ரசிகர்களுக்கு உண்மையிலேயே நல்ல செய்திதான்!
விஜய் தனது
கெரியரில் எத்தனையோ முடிவு எடுத்துள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 10
ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு முடிவை நினைத்து இன்றும்
வருத்தப்படுகிறார்.
இயக்குனர் தரணி தூள் படத்தின் ஸ்க்ரிப்ட்டை எடுத்துக் கொண்டு முதலில்
விஜயிடம் தான் சென்றுள்ளார். கதையைக் கேட்ட விஜய் இதெல்லாம் ஒத்து வராது
என்று தீர்மானித்து தரணியிடம் ஒரு சாரி சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். உண்மையில் அது தவறான முடிவு என்று விஜய் தற்போது உணர்ந்திருக்கிறார்.
தூள் படம் கிடைக்காத இழப்பை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்வார்களா இருவரும்.. பொருத்திருந்து பார்ப்போம்.
mm ok
ReplyDeleteபார்ப்போம்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி...
tm2
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
உளங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசினிமா தகவல்கள் அருமை! நன்றி!
ReplyDeleteகிளம்பிட்டாய்யா கிளம்பிட்டா......
ReplyDeleteவடிவேலுவை எதிர்பார்த்து இருக்கிறோம்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
வடிவேலு தீபாவளி வெடி வேலுவா வரப்போறார்னு சொல்லுங்க. இம்சை அரசன்?!
ReplyDeleteஅட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவடிவேலு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
Australia Tamil News