ஒரு முறை கல்லூரியில் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள் பேச வேண்டியிருந்தது. அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது என் காரணத்தினால் தன் உதவியாளரிடத்தில் பதினைந்து நிமிட ஆங்கிலப் பேச்சை எழுதித் தருமாறு சொன்னார்...
கூட்டத்தில் அதை அரை மணி நேரம் படித்தார் அவர்..
பிறகு தன் உதவியாளரிடம், “ கால் மணி நேரப் பேச்சு தயாரிக்கச் சொன்னால், நீ ஏன் அரை மணிநேரப் பேச்சைத் தயார் செய்தாய் ”? என்று கோவத்துடன் கேட்டார் ஆபிஷர் அவர்கள்.
”ஐயா..! நான் கால் மணி நேரப் பேச்சுத்தான் தயாரித்தேன். நீங்கள் தான் அதன் நகலையும் சேர்த்து படித்து விட்டீர்கள்..” என்றார் உதவியாளர்.
*********************************
வீடு சுரேஷ்குமார் ஒரு பெரிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.
நிறைய ஆட்கள் வேலைக்குத் தேவைப்பட்டபர்கள். “திருமணமானவர்களுக்கு மட்டும் வேலை...” என்று விளம்பரம் செய்தார் சுரேஷ்குமார்.
இதைப்பார்த்த அவரது நண்பர் தமிழ் பேரண்ட்ஸ் சம்பத், “ உன் விளம்பரம் வேடிக்கையா இருக்கு.. எதற்காக இப்படி விளம்பரம் தந்தாய்?” என்று கேட்டார்.
“திருமணமானவர்கள் தான் எப்பொழுதும் எதிர்த்து பேச மாட்டார்கள்..., வீட்டில் இருக்கிற மாதிரி பணிவாக இருப்பார்கள்” என்று பதில் தந்தார்... சுரேஷ்... (எனக்கு புரிஞ்சிடிச்சி...)
*********************************
ராஜபாட்டை ராஜா மாணவன் ராமுவை அழைத்து.. நீ சோமுவின் விடைத்தாளை பார்த்துதானே எழுதினாய் என கேட்டார்..
சார் அப்படி நான் யாரைப்பார்த்தும் காப்பி அடிக்கல சார் என்றான் ராமு...
ஏன் இப்படி பொய் சொல்ற என்று மிரட்டினார் ராஜா...
சார்! நான் காப்பி அடித்தாகவே வைத்துக் கொள்ளுங்கள் அதை நீங்கள் எப்படி கண்டு பிடிச்சிங்க என கேட்டான் ராமு.
சோமு தன் விடைத்தாளில் ஒரு கேள்விக்குத் தெரியாது என்று பதில் தந்திருந்தான். அந்த கேள்விக்கு நீ.. “எனக்கும் தெரியாது“ அப்படின்னு பதில் எழுதியிருக்கிற.... என விளக்க கொடுத்தார் ராஜபாட்டை ராஜா...
*****************************************
டிஸ்கி : இங்கு பிரபல பதிவர்கள் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்...
இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!
தொடரும்....
இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!
தொடரும்....
மன்னிக்கவும் இதில் பதிவர் ராமு மற்றும் பதிவர் சோமுவை தவிர யாரையுமே தெரியவில்லையே.. யாரவங்க?
ReplyDeleteகேளுங்க என்று ஒரு தளம் இருக்கு, அங்கே "கேளுங்க!"
Delete:) :) :)
எல்லாம் சரிதான். அது என்ன தலைப்பில் 'பிரா'பல.
ReplyDeleteநல்லது... தொடருங்கள் தலைவரே...
ReplyDeleteமலரும் நினைவுகள்..
ReplyDeleteசுரேஸ், சம்பத், பிரகாஷ் ஆகியோரை மீண்டும் பார்த்தது போன்ற நிறைவு.
நல்லாவே இருக்குங்க தொடருங்க.
ReplyDeleteஎல்லாமே நல்லா இருந்தது சகோ.!
ReplyDeleteஐயோ!, ஐயோ! சௌந்தர் இவங்களையெல்லாம் கலாய்ச்சுட்டாராம்.
ReplyDeleteகல(லாய்)க்கல் நல்லா இருக்கு!
ReplyDeleteசுவாரஸ்யமான பதிவு
ReplyDeleteநல்ல வேளை
பிரபலப் பதிவராயில்லை
ஓ இதுக்குப் பேர்தான் கலாய்ப்பா.....
ReplyDeleteதெரியாமப் போச்சே ....... கல்லத் தூக்காதீங்க எஸ் கேப்
ok ok
ReplyDeleteகலாய்த்தல் தொடர(?/) வாழ்த்துக்கள்.
ReplyDeleteகலாய்த்தல் பதிவுனு சொல்லிட்டு சும்மா ஜோக்ஸ் சொன்னா எப்படி.... எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு முதல்லஏர்ந்து ஆரம்பிங்கப்பா.....
ReplyDeleteஇந்த தடவை கலாய்க்கனும், ஜோக்ஸ் சொல்லக்கூடாது :-)))
வீடுசுரேஷ் = முரட்டுப்பங்காளி(எருமைமாடுனும் சொல்லலாம்)
பிரகாஷ் = தொப்பைகொண்டான்
\\நீ.. “எனக்கும் தெரியாது“ அப்படின்னு பதில் எழுதியிருக்கிற.\\ ஈயடிச்சான் காப்பியடிக்காமல் படிச்சதை புரிஞ்சிசிகிட்டு சுயமா சிந்திச்சு எழுதியிருக்கார். பாராட்டப் பட வேண்டியவர்!!
ReplyDeletePirabala jokesa pirabala pathivar perodu pottuta athuku peru kaalaikiratha?
ReplyDeleteதொடருமா? இன்னும் யார் யார் எல்லாம் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்
ReplyDeleteஅட - இப்படியும் கலாய்க்கலாமா - சூப்பர்யா - எனக்கும் தெரியாது சூப்பர் - குணா பிரகாஷ் சம்பத் சுரேஷ் குமார் - படம் எல்லாம் போட்டு கலாய்ச்சது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete