கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 November, 2012

அநானமிகளுக்கு ஒரு எச்சரிக்கை...! துவங்கியது களையெடுக்கும் பணி...!


இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. 

அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. 

நடப்பாண்டில் இதுபோல் 596 தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

13 comments:

  1. இணையத்திலும் களையெடுக்கும் பணி சிறப்பு.

    ReplyDelete
  2. விரைவில் வரட்டும்...

    தகவலுக்கு நன்றி...
    tm3

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் ..இப்படிலாம் நடக்குதா????

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  4. //இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.//

    யாராவது ஒருவர் மற்றொருவர் மீது வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கின் ஆதாரத்திற்காக கேட்டுப்பெருவது இந்த தகவல்கள். மற்றபடி, இணையத்தில் கொடுக்கப்படும் எல்லா தகவல்களும் என்றைக்குமே பாதுகாப்பானது இல்லை. மேலும், இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால், உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. (சீனாவில ஏன இல்லை? ஏனென்றால் அங்கு ஜனநாயகம் இல்லை)

    மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படவேண்டியது இது.

    ReplyDelete
  5. சீனு அவர்கள் சொல்வது போல மடியில் கனம் இருப்பவர்கள் பயப்பட வேண்டிய விசயம் இது! நானும் பகிரலாம் என்று நினைத்தேன் தவிர்த்து விட்டேன்!

    ReplyDelete
  6. தேவையான எச்சரிக்கை நண்பா.

    ReplyDelete
  7. நல்ல விஷயமே.., இணையம் மூலமான பல மோசடி குறையும் சகோ!

    ReplyDelete
  8. இது கூடன்குள விவகாரத்தில் முதலில் தொடங்கியது தலைவரே..பாதிப்புக்கு உள்ளானோர் பட்டியலில் நானும் ஒருவன்...

    இப்போது 2G ...கறுப்புப்பணம்...சோனியா..மருமகன்...இப்படி பலவற்றுக்கு எதிராய் குரல்கொடுப்போரை ஒடுக்க....

    ReplyDelete
  9. அனைவருமே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

    ReplyDelete
  10. எதிர்கொள்ளவேண்டிய எச்சரிக்கை...

    ReplyDelete
  11. அன்பின் சௌந்தர் - உண்மை நிலை தெரிவிக்கப் படுவதில் தவறில்லை, தவறு செய்பவர்கள் தான் பயப்பட வேண்டும். நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...