கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 November, 2013

நிறங்களுக்கு முதலிடமா..? இது முற்றிலும் உண்மை..!வண்ணமயமான பலூன்களை விற்றுப்பிழைக்கும் ஒருவன் புதியதாக வேறு ஒரு ஊருக்கு வந்தான்.

பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பலூன்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. 

அவன் புதியதாக ஒரு விளம்பரம் செய்ய விரும்பினான். அதன்படி வண்ண வண்ண பலூன்களை ஹீலியம் வாயுவால் நிரப்பி மக்கள் கூட்டமாக இருக்கக்கூடிய இடங்களில் பறக்கவிடுவான். 

வானில் பறக்கின்ற விந்தையான பலூன்களை 'எனக்கு வேண்டும் ..உனக்கு வேண்டும்' என சிறார்களும் - ஏன் வயதானவர்களும்கூட வாங்கி வாங்கி மகிழ்ந்தனர்.

எப்போதெல்லாம் வியாபாரம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் 'பறக்கும் பலூன்கள்' மூலம் புதிய உற்சாகமான விளம்பரத்தைக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்தான். 
அவன் தனது வியாபாரத்தைச் செவ்வனே செய்துவந்தான்.

சில நாட்களுக்குப்பிறகு ஒரு கருப்பினச்சிறுமி, அவனிடம் கேட்டாள். "அண்ணே. அண்ணே..எல்லா வண்ணங்களிலும் பலூன்களைப் பறக்கவிடுரீங்க.. ஆனால் கருப்புக்கலர் பலூன் பறந்து நான் பார்க்கவே இல்லை. கருப்புவண்ணப் பலூன் பறக்குமா? பறக்காதா? என் சந்தேகத்துக்கு விடையளியுங்கள்" என்றாள்.

"அன்புக்குழந்தையே!.. கருப்பு நிறப்பலூன் என்றாலும் - அதனுள்ளே - ஹீலியம் வாயுவை அடைத்துப் பறக்கவிட்டால் பறந்தே தீரும். பலூன் வானில் பறக்கக்காரணம் அதன் வண்ணமன்று.. அதனுள்ளே அடைத்து வைக்கப்படும் வாயுவால்தான் அது பறக்கிறது. 

கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும், என்ன வண்ணமாக இருந்தாலும் அது பறந்தே தீரும். இது சத்தியம்" என்றான்.

நீதி : உன் நிறம் கருப்பாக இருப்பதை ஒரு பொருட்டாக எண்ணாதே!.. உனக்குள் இருக்கும் எண்ணங்களை உலகறியச் செய். சரித்திரத்தில் உன் பெயர் நிச்சயம்.

குழந்தைகளின் மனதில் பிரிவினைகளை விதைப்பதை தவிர்த்து இந்த உலகில் தன்னம்பிக்கையோடும் வாழும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்போம்...  "Sharavin SirukathaigaL" என்ற நூலிலிருந்து*********************************

இந்த குழந்தைகள் தினத்தில் நாமும் 
குழந்தைகளோடு குழந்தைகளாவோம்..

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...!

3 comments:

  1. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உண்மை தான் நல்ல விடயம் சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...