அடுக்கடுக்காய் தவறுகள் செய்துவிட்டு
அதையும் சரி என்று நியாயப்படுத்தும்
ஆறறிவு அற்பர்களை கண்டு மனம் கொதிக்கிறீர்களா..?
வகுத்து வைத்த விதிகள் எதையும்
சட்டைசெய்யாதவரின் சட்டையை பிடித்து
இரு கன்னத்திலும் அறைய நினைக்கீறீர்களா..?
பாதியில் மரணமென்று தெரிந்தும்
பேருந்தில் படிக்கட்டில் பயணிக்கும் வம்பர்களை
வீதியில் வைத்து தண்டிக்க துடிக்கிறீர்களா...?
கால்கடுக்க முறையாய் வரிசையில் நிற்போரிருக்க
அத்துமீறி குறுக்குவழியில் நுழைவோரை
பொருத்துக்கொள்ள சகியாமல் சபிக்கிறீர்களா...?
தன்கடமை செய்யவே லஞ்சம் கேட்கும்
கயவர்களைக்கண்டு விட்டுவிடத்தோணாமல்
அவர்களை அப்படியே சுட்டுவிடத் தோன்றுகிறதா....?
நவநாகரீகம் என்ற போர்வையில்
தினம் நாட்டை பாழ்படுத்தும் பதர்களை
பார்க்க சகிக்காமல் மனவேதனை அடைகிறீர்களா..?
காவிநிறம் பூண்டு பக்தி என்ற வேடத்தில்
கடவுள்களையும் மீறி எழுச்சிப்பெறும்
இழிவானவர்களை கண்டு உமிழ்கிறீர்களா...?
புனிதம் நிறைந்த அரசியலை கலங்கடித்து
நல்லர்களாய் காட்டிக்கொள்ளும் நயவஞ்சகர்களை
வாய்ப்பு கிடைத்தால் சாக்கடையில் போட நினைக்கிறீர்களா...?
மனிதர்களாய் பிறந்துவிட்டதை மறந்து
பகுத்தறிவு வழியில் பயணிக்காத யாவரையும்
விலங்கினும் கீழானவர்கள் என்று நினைக்கிறீர்களா..!
சந்தேகம் வேண்டாம்.. தோழரே...
நீங்களும் நானும்
ஓர் இனம்தான்....
கவிதையின் வேர்... :
அநியாயங்களையும், அக்கிரமங்களையும்
கண்டு உன் மனம் கொதித்தால்
நீயும் என் தோழனே!
–சேகுவேரா.
சந்தேகம் வேண்டாம்.. தோழரே...
ReplyDeleteநீங்களும் நானும்
ஓர் இனம்தான்....
உண்மை தான்.
வாங்க சசிகலா..
Deleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
அனைத்தும் அருமையான வரிகள் தோழரே நானும் உங்கள் (சேகுவேராவின்) இனம்தான்.
ReplyDeleteநல்லது நண்பரே...
Deleteநீங்களும் நானும்
ReplyDeleteஓர் இனம்தான்....
நல்ல வரிகள்...
ReplyDeleteபடிக்கும் போதே புத்துணர்ச்சி வருகிறது...
எல்லாரும் ஓர் இனம் தான் என்று எல்லோரும் நினைக்கும் காலம் வர வேண்டும்... நன்றி... (த.ம. 3)
மிக அருமையான கவிதை! சிறப்பு!
ReplyDeleteசே வின் புகழ் ஓங்குக... அருமையான பதிவு நண்பரே.. இங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்தால் இன்னொரு சே நமக்க தேவை.
ReplyDeleteதங்களுக்கே உரித்தான பாணியில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்....
ReplyDeleteமிக நல்ல கவிதை. என்ன நண்பரே திடீர்னு?
ReplyDeleteஎனக்கு சேகுவராவின் அந்த கூற்று மிகவும் பிடிக்கும் அதை மூலப் கருவாக வைத்து அருமையான கவிதை சூப்பர்
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே.., வாழ்த்துக்கள் (TM 6)
ReplyDeleteஎன் உயிரைகாட்டிலும் நான் மிக நேசிக்கும் உன்னதமானவர்.. நான் அதிகமுறை படித்த புத்தகம் இவருடையது.. மோட்டார் சைக்கிள் டைரி, இவரது வாழ்க்கை வரலாறு, இவர் பற்றிய திரைப்படம், ஒலிநாடா என தேடி தேடி பிடித்து வைத்திருப்பவன் நான். மிக சோர்ந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கை அளித்து போராட்ட குணத்தை வளர்த்தெடுத்தது இவரே..
ReplyDeleteகவிதை துடிப்பில்
ReplyDelete''சே''
இந்த
நவ சமூகத்தில்
''சே'' விற்கு
ரசிகர்கள் அதிகம்
தோழர்கள் (போராளி) குறைவு
நல்லனவற்றைப் போற்றி, நல்லோருடன் நட்புக் கொள்ளத் தூண்டும் நல்ல கவிதை இது.
ReplyDeleteநெஞ்சு நிறைந்த பாராட்டுகள்.
மிக அருமையான கவிதை.
ReplyDeleteபெருகட்டும் நம் இனம்
ReplyDeleteகவிதை அருமை!
ReplyDeleteஅற்புதமான படைப்பு... பாராட்டுகள்...
ReplyDeleteமுறுக்கேற்றும் வரிகள்
ReplyDeleteவாசிப்பவர்களை ஒரே இனமாக மாற்றக் கூடிய வரிகள்
ReplyDeleteநானும் அதில் ஓரினம்!
ReplyDeleteaamaam !
ReplyDeletenalla kavithaigal!
thodarven!
அன்பின் சௌந்தர் - சேகுவாராவின் பொன் மொழிகளை அடிப்படையாக் கோண்டு ஆக்கப் பட்ட அருங்கவிதை நன்று- ஒத்த சிந்தனை உடைய அனைவரும் ஓரினம்தான் = ஐயமே இல்லை. நல்ல சிந்தனை சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete