தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவித்த சலுகைகளில் மாணவர்களுக்கு உண்மையில் வரபிரசாதமாக இருக்கும் ஒரு விஷயம் இலவச பேருந்து பயண அட்டை தான். இந்த சலுகை வந்தப்பிறகு படிக்கும் மாணவர்களுக்கு தூரம் என்பது ஒரு தடையாக இல்லாமல் இருந்தது. இதை வைத்துக்கொண்டு தன் பகுதியில் மட்டுமே படித்துக்கொண்டிருந்து மாணவர்கள் தொலைவில் உள்ள நல்ல பள்ளிகளை நாடி செல்ல ஆரம்பித்தார்கள்.
கடந்த பலவருடமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்திய இத்திட்டம் அடுத்த வந்த அதிமுக ஆட்சியும் அதை அமுல் படுத்திவந்தது. பொதுமக்கள் மத்தியிலும் நல்லவரவேற்பை பெற்ற இத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுவிட்டாதா என்று எண்ணத்தோன்றுகிறது.
ஒவ்வொறு வருடமும் பள்ளித்திறந்த உடன் அப்பகுதியில் உள்ள பனிமணை கிளை மேளாலர்களால் விண்ணப்பபடிவங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு, பள்ளி திறந்த முதல் வாரத்திற்குள் மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற தகவல்கள் திரட்டப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்குள் இலவச பயண அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும்.
ஒவ்வொறு வருடமும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இச்செயல் முடிந்து விடும். பள்ளி திறந்த 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு இந்த சலுகைகிடைத்துவிடும். தற்போது மாணவர்கள் 5 கி.மீ முதல் 30 கி.மீ தூரைவம் வரை சென்று படிக்கிறார்கள் அதற்கான கட்டனம் ரூ. 10 முதல் 40 வரை இருக்கும்.
அந்த கட்டண சுமையை போக்குவதற்க்கு மாறாக இந்த வருடம் புறநகர் மற்றும் திருவள்ளுமாவட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்னும் மாணவர்களுக்கு இச்சலுகை கிடைக்ககில்லை. (தமிழகம் முழுவதும் இந்நிலைதான்) பள்ளி திறந்த முதல் வாரத்திலே விண்ணப்பபடிவங்கள் பள்ளிகள் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.
ஆனாலும் இதுவரையில் கிட்டதட்ட இரண்டு மாதம் ஆன நிலையிலும் மாணவர்களுக்கு இலவச பயண சீட்டு இன்னும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் பெற்றோர்கள் பலஅதிகாரிகளிடம் முறையிட்டும் மௌனமே மிஞ்சுகிறது என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.
தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச பயண அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் தயாராகிறது அதனால் இந்த தாமதம் என்று தெரிவித்திருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதும் நேற்று முதல் (23-07-2012) அடையாள அட்டை இல்லாவிடிலும் பரவாயில்லை மாணவர்களை இலவசமாக அழைத்துச்செல்லுங்கள் என்று போக்குவரத்து துறைக்கு தமிழக அரசு ஆணை ஒன்று பிரப்பித்துள்ளது.
நேற்று பெரும்பாலான பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி அழைத்துச்செல்லப்பட்டார்கள். ஆனால் ஒருசில பேருந்துகளில் அப்படி ஏதும் இல்லை என்று மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தார்கள்.
இன்றும் பெரும்பாலான பேருந்துகளில் அப்படி ஏதும் எங்களுக்கு தகவல்இல்லை என்று கட்டணம் வசூலித்தார்கள். மேலும் டிக்கெட் வசூலிக்க சிரமப்படும் நடத்துனர்கள் (இன்று நான் வந்த கும்மிடிப்பூண்டி-திருவள்ளுர் 172 பேருந்து உள்பட) வண்டி காலியாக இருந்தும் பல நிறுத்தங்களில் நிறுத்தாமல் வந்துவிட்டார்கள் கேட்டதற்கு எல்லாம் எங்களுக்கு தெரியும் என்ற அரசு ஊழியர் என்ற அகங்கார பதில் வேறு....
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இலவசபயண அட்டை விஷயத்தில் விரைந்து முடிவெடுத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் நலனை காக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.
இதுபோன்ற விஷயங்களையும் ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசின் கவணத்திற்கு கொண்டு சென்றால் மாணவர்கள் பயன்அடைய மிகவும் வாய்ப்பாக இருக்கும். என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயம்... (த.ம. 1)
ReplyDeleteஉண்மையில் அரசு கவனிக்கபட வேண்டிய விஷயம் நானும் தினமும் பார்க்கிறேன் பிள்ளைகள் பேருந்தின் பின்பு ஓடும் நிலையை.
ReplyDeleteசரியான வேண்டுகோள்.
ReplyDeleteஉண்மைதான்! ஒவ்வொரு வருடமும் ஜீன் மாத இறுதிக்குள் இலவச பாஸ் வழங்கப்படும்! இந்தமுறை அது தாமதப்படுவது அரசுக்கு பணம் சேர்க்கவே என்று எண்ணத்தோன்றுகிறது! இந்த கண்டக்டர்கள் தொல்லையை கேக்கவே வேணாம்.
ReplyDeleteசரியான வேண்டுகோள்.//repeat
ReplyDeletetamil manam 7
ReplyDeleteஅதிகாரிகளின் மெத்தனப்போக்கு வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது (TM 8)
ReplyDeleteஉடனடி நடவடிக்கை தேவைதான்.சமயத்தில் வந்த பதிவு
ReplyDeleteஅரசு தான் ஆவன செய்ய வேண்டும்
ReplyDelete