தமிழக சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி என்றால் எதாவது ஒரு பரபரப்பு இருந்துக்கொண்டே இருக்கும். மந்திரி சபையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் காலை எழுந்து தொலைக்காட்சியை பார்த்துதான் நாம் இன்னும் அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதை உறுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு சூழல் அம்மா ஆட்சியில் இருக்கும்.
கடந்த ஆண்டு தொடர்மழையினால் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை கவனிக்க நவம்பர் முதல் வாரத்தில் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதை ஏற்று அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
அந்த சமயத்தில், செந்தமிழன், என்.ஆர்.சிவபதி, எஸ்.பி. சண்முகநாதன், உதயகுமார், புத்தி சந்திரன், சண்முகவேலு, ஆகிய 6 அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.
மாற்றப்பட்ட இவர்களுக்கு பதிலாக மாதவரம் மூர்த்தி, பரமக்குடி சுந்தர்ராஜன், கிணத்துக்கடவு தாமோதரன், சிவகாசி ராஜேந்திர பாலாஜி, நன்னிலம் காமராஜ், திருச்சி மேற்கு பரஞ்சோதி ஆகிய ஆறுபேரை அமைச்சரவையில் சேர்த்தார்.
ஆட்சி அமைத்த 6 மாதத்தில் அமைச்சரவையை 3 முறை ஜெயலலிதா மாற்றியமைத்தார். அமைச்சரவையில் இடம் பெற்று இருந்துபோன மரியம் பிச்சை விபத்தில் இறந்தார். அவருக்கு பதிலாக முகமது ஜான் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பிறகு சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா திடீரென்று நீக்கப்பட்டார். அமைச்சர் கருப்பசாமி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது இலாகா மாற்றம் நடந்தது.
பின்பு வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், தகவல் தொழில் நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டார்.
எம்.சி.சம்பத் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையில் இருந்து ஊரக தொழில் துறைக்கும், சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னையா கால்நடைத்துறைக்கும், கைத்தறித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணன் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றப்பட்டனர். சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் இருந்த சத்துணவு திட்டம் மட்டும் சம்பத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
பரஞ்சோதி உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் பதவி ஏற்று ஒரு மாதம்தான் ஆகிய நிலையில் பரஞ்சோதி, செல்விராமஜெயம் ஆகியோர் தங்களுடைய பதவியை இழந்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவியில் இருந்து கூட நீக்கப்பட்டிருக்கிறார்.
யாரெல்லம் மாற்றப்படுவார் என்று யாருக்கும் தெரியாது. மாற்றப்பட்டதற்க்காக காரணம் பிண்ணனி மற்றும் உண்மை அந்த நபருக்கு கூட தெரியாமல் மறைக்கப்படும்.
என் இப்படி அடிக்கடி மாற்றுகிறார்கள் என்பதற்கான காரணம் ஒரு வேளை இப்படியிருக்குமோ என்று ஆய்ந்ததில் கிடைத்த தகவல்கள்..,
1. ஒரு அமைச்சர் குறைந்தது மாதம் ஒரு முறை மட்டுமே பேட்டி அளிக்க வேண்டும். அதுவும் ஜெயா டிவிக்கு மட்டும்தான் பேட்டி கொடுக்க வேண்டும். குறிப்பாக சன் டிவிக்கு பேட்டி கெர்டுத்தால் உடனே நடவடிக்கைதான்.
2. அமைச்சர் கலந்துக்கொள்ளும் விழாக்களில் அவரை விட அம்மாவுக்குதான் அதிக கட்-அவுட்டுக்கள் வைக்க வேண்டும். அதையும் மீறி அவருடைய பெயரில் அதிக கட்-அவுட்டுகள் வைக்க கூடாது.
3. அம்மா கலந்துக்கொள்ளும் கூட்டங்களில், விழாக்களில் அம்மா சொல்ல கூடிய நேரத்தில்தான் வரவேண்டும். அப்படி முன்னதாகவோ அல்லது தாமதமாகவே வந்தால் மாற்றப்படலாம்.
4. விழாக்களில் பேசும்போது அம்மாவின் பார்வைக்கு சென்று வந்த நகல்களைத்தான் வாசிக்க வேண்டும். வேறு ஏதாவது வார்த்தை கூடுதலாக கலந்து பேசினால் கண்டிப்பாக நடவடிக்கைதான்.
5. இலாக வாரியாக மாதாமாதம் வந்து சேரவேண்டி மாமூல் கண்டிப்பாக சொன்ன தேதி, நேரத்திற்குள் போயஸ் கார்டனுக்கோ, கொடநாடு பங்ளாவுக்கோ வந்து சேரவேண்டும் அப்படி சேரவில்லையென்றால் இலாகா மாற்றப்படும் அல்லது அமைச்சர் பதவியில் இருந்தே தூக்கப்படும்.
6. சட்டசபைக்குள் அம்மா அவர்கள் பார்த்தவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும், அவர்கள் திரும்பி பார்த்வுடன் முடித்துவிடவேண்டும்.
7. அம்மா அவர்கள் சட்டசபையில் பேசும்போது தேவையில்லாமல் கைதட்டகூடாது. அவர்கள் பேச்சை நிறுத்தி ஒரு நிமிடம் திரும்பி பார்ப்பார்கள் அப்பேர்து ஆரம்பித்து அவர்கள் போதும் என்று மறுபடியும் திரும்புவரை கைதட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
8. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் இலாகாவில் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் யார் இருந்தார்கள் என்று பார்த்து அவர்கள் ஏதாவது ஊழல் செய்தார்களா என்று கண்டறிந்து அவர்ளை சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்படி குறைந்தது மாவட்டத்துக்கு 20 பேரையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும் இந்த வேளையை செய்யாத அமைச்சர் கண்டிப்பாக மாற்றப்படலாம்.
9. எப்போதும் இதற்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசுதான் காரணம் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
10. அம்மாவை வாழ்த்தி அடிக்கடி தன் பகுதிகளில் விளம்பரங்கள், விழாக்கள் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளில் ஒன்றில் இருந்துகூட யாராவது விலகினால் கண்டிப்பாக அந்த அமைச்சர் மாற்றப்பட்டு வேறு ஒருத்த நியமிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆகையால் அமைச்சர்களே பார்த்து நடந்துக்கங்க....
அடுத்த பதவிப்பறிப்பு யாருடையது என்று பொருத்திருந்து பார்ப்போம்....
அம்மாவுக்கு இதெல்லாம் டைம் பாஸ் மாதிரி....
ReplyDeleteஅப்படித்தாங்க தெரியுது...
Deleteசசிகலா நீக்கி விட்டு மீண்டும் இணைத்துக்கொண்டதும் ஒரு நாடகம்தானே...
இன்று இந்த மாற்றம்... நாளை எப்படியோ... ?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 3)
ரொம்ப யோசிக்குறீங்களே. இது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சா?! உங்க நிலமை?
ReplyDeleteநான் அவன் இல்லை...
Deleteதங்கள் துணிவு பாராட்டுக்குரியது .
ReplyDeleteஇருடி... உன்னை தூக்க ஆளை அனுப்பறேன்...
ReplyDeleteரூல்ஸ் பொடறியா ரூல்ஸ்???
யாரப்பா நீ...
Deleteமுன்னாள் பதிவரா...?
YAARU??? Muthalvarai Paarthaa???
Deleteஇருடி... உன்னை தூக்க ஆளை அனுப்பறேன்...Enga Kodanaatukkaa???
ரூல்ஸ் பொடறியா ரூல்ஸ்???
Paarthu SOOTHAANAMAA Nadanthukkunga!
ஆகையால் அமைச்சர்களே பார்த்து நடந்துக்கங்க....
ReplyDeleteநல்லா சொன்னனீங்க தோழரே..
நன்றி தலைவரே....
Deleteஹா ஹா.....
ReplyDeleteசீரியசாவே அப்புடித்தேன் இருக்கும்யா!!!
சீட்டு விளையாடுபவர்கள் அடிக்கடி சீட்டுக் கட்டை கலைத்து, கலைத்துப் போடுவார்கள். சிலர் கொலு வைத்தால் கடைசி வரை பொம்மைகளை மாற்றி, மாற்றி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த இடத்தில் அவர்கள் ராச்சியம். நமக்கென்ன கவலை!
ReplyDeleteகவிதைவீதி To அரசியல் வீதி. ஒரு மினி பஸ் ட்ரிப். ஓகே!
கூடல் பாலாவின் கூற்றே என் கூற்றாகும்!
ReplyDeleteசா இராமாநுசம்
ரைட்டு.
ReplyDeleteநல்ல அலசல்...
ReplyDeleteஆங்..,ஒரு சின்ன டவுட்டு நீங்க தமிழ் நாட்டுலையா இருக்கீங்க :)
அரசியல் ஆய்வறிக்கை... அருமை..
ReplyDeleteஇது எல்லாம் சாதரணமாக நடைபெறுவது. இது எல்லாம் கரக்டாக நடக்கிறது. அம்மா வேறு ஒரு காரணம் வைத்துள்ளர்கள். எப்படியும் ஐந்து வருடத்தில் அதிமுக எம் எல் ஏ கள் அனைவரும் மந்திரியாக வேண்டும் என்பதே அம்மாவின் லட்சியம். எப்புடி !!!!
ReplyDeleteநன்றி
செய்யது
துபாய்
ஒரு அமைச்சர் நீண்ட காலமாக ஒரே பதவியில் இருப்பது ஊழல் செய்ய பெரிதும் உதவும் ஆபத்திருக்கிறது.அதே நேரத்தில் நல்ல நிர்வாக திறன் அமைச்சர் மாற்றப்படுவதால் அந்த துறையின் செயல்பாட்டுக்கு இழப்பும் உருவாகலாம்.
ReplyDeleteஅ.தி.மு.க மந்திரிகள் கூன் விழ ஒரு வாகனத்தை கும்பிடும் காட்சியை காண நேரிட்டது.பாவம் ஜனநாயக அடிமைகள்.
நல்லா அலசி பிழிஞ்சி போட்டுட்டீங்க!
ReplyDeleteநண்பரே நீங்கள் காமெடிக்கு எழுதி இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் இவை உண்மையாகவும் இருக்கலாம் :)
ReplyDelete