கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 July, 2012

ஆடி மாச அனுபவங்கள்..! நீங்களும் தெரிஞ்சிக்கங்க...

தமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந்து பக்தியோடு,  கூழ் ஊற்றுதல், அம்மன் தரிசனம் என இம்மாதமே விழா கோலத்தோடு இருக்கும். 

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருக்கின்ற அனைத்து அம்மன் ‌கோயில்களுக்கும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். அப்படி ஆடி மாதத்தின் சிறப்புகளோடு என் அனுபவங்களையும் நான் தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்.

ஆடிமாதம் பிறந்தவுடன் எங்க ஊரில் ஒவ்‌வொறு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரார் பலர் தங்களுடைய வீடுகளில் கூழ் ஊற்றுவார்கள் அதோடு வெள்ளம் கலந்த ‌ அரிசி மாவு, சோற்று உருண்டை, போன்றவைகள் தருவார்கள். படிக்கும் காலத்தில் இதை விரும்பி வாங்கி உண்ணுவோம். அரிசிமாவுக்கு ஒரே ஆர்ப்பாட்டம் நடக்கும். இது போன்றே ஒவ்வொறு ஞாயிறும் அமர்களப்படும்.

ஆடிமாதம் என்றால் அம்மன் கோயில்கள் களைகட்டும். மாதம் பிறந்தது முதல் கிட்டடதட்ட 15 வாரங்கள் எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் மிக சிறப்பான வழிபாடுகளை கொண்டிருக்கும் ஒவ்வொறு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோயிலை வழிபட வருவார்கள். 

சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்து மாட்டுவண்டி கட்டிக்கொண்டு சென்று வருவோம். தரிசனம் முடித்து விட்டு வரும் வழியில் ஆடு வெட்டி விருந்து சமைத்து குடும்பத்தோடு மரத்தடியில் அமர்ந்து உண்ணுவோம். குடும்பத்துடன் சென்று தனி ஒரு இடத்தில் சமைத்து சாப்பிடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. (தற்போது எங்கள் கிராமத்தில் இருந்து யாரும் மாட்டுவண்டிப்பயணம் செய்வதில்லை).

ஆடி முதல் வார ஞாயிறு அன்று கீழ் பெரியப்பாளையம் என்று அழைக்கப்படும் தாமரைப்பாக்கம் அணைகட்டில் அம்மன் விழா மிகச்சிறப்பாக  நடைப்பெறும் ஒரு திருவிழாவுக்குண்டான அனைத்து சிறப்புகளும் இந்த திருவிழாவில் காணலாம் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்த விழாவிற்கு வந்து செல்வார்கள்.

சிறு வயதில் நானும் என் கூட்டாளிகளுடன் காலையில் வந்து விடுவோம் (எங்க ஊரான வெள்ளியூரில் இருந்து 2 கி.மீட்டர் தூரம்தான்) அங்கு விளாங்காய், மற்றும் நாகப்பழம் அதிக அளவில் இருக்கும் அதை சேகரித்து கொண்டும், ராட்டிணம் சுற்றுதல், வேடிக்கை பார்த்தல், அன்னதான சாப்பாடு வாங்கி உண்ணுதல் மற்றும் இருக்கும் காசுக்கு ஏற்றவாறு பொருட்கள் வாங்கிக்கொண்டு மாலைதான் வீடு வருவோம். 


 
ஒவ்வொறு வருடமும் இத்திருவிழாவில் பாயாசம் சாப்பிட மறந்ததில்லை. இந்த திருவிழாக்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகளான இருந்து வருகிறது. (ஆனால் தற்போது பாதுகாப்பு பணிக்காக மட்டும்தான் இந்த விழாவுக்கு செல்லவேண்டியிருக்கிறது).

திருவள்ளுர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் பகுதியில் குசல்தலை ஆற்று அணைக்கட்டு பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. அதனால் இதை அணைக்கட்டு திருவிழா என்று அழைக்கப்படுகிறது. 


குற்றால முனிவர் என்பவரால் 100 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த கோயில் வழிபாடு தற்போது 40 ஆண்டுகளாய் மிகவும் விஷேசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் முதலில் தாலிகயிறு வழங்கி, பெரியபாளையம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யும் ஆலயமாகத்தான் இருந்தது. தற்போது அதுவே விழாவாக மாறிவிட்டது. 

ஆடி மாதம் பிரிந்து விடும் புதுமணதம்பதிகள் இந்த திருவிழாவில் அதிகமாக காணலாம் அவர்களுக்கும் ஆலயம் வரும் அனைத்து சுமங்கலிகளுக்கும் தாலிக்கயிறு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. 

அரசமரத்தடியில் அமைந்திருக்கு விநாயகருக்கு படையலிட்டு அதே நேரத்தில் மூன்று பரமஏழைக்கும் படையலிட்டு விழா தொடங்குகிறது. அதன் பிறகு அனைவருக்கும் அன்னதானமும் தாலி வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 


படித்தகாலத்து நண்பர்கள் மற்றும் மற்ற கிராமத்து தெரிந்தவர்கள் சொந்தங்கள் என வெகுநாட்களுக்கு பிறகு இங்கு சந்தித்து மகிழ்ச்சியுறுவோம்.


முடிந்தால் அடுத்த வருடம் ஆடி மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் வந்து இந்த விழாவில் கலந்துக்கொள்ளுங்கள்.
 

அணைக்கட்டு ஆடி முதல்வார திருவிழாவில் சில காட்சிகள்...

 
கோயிலுக்கு வெளியே அம்மன் தரிசனம்...

திருவிழாவில் பக்தர்கள் கூட்டம்


திருவிழாவில் மருதாணி போட்டுக்கொள்ளும் சிறுமி

ராட்டிணத்தில் உற்சாமாய் மக்கள்...

கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்த தாய்குலங்கள்...

திருவிழாவில் ஸ்பெஷலாக விற்கப்படும் ஈசல் வருவல்...

திருவிழாவில் விற்கப்பட்ட பீங்கான் புத்தர் சிலைகள்...

அரசமர விநாயகருக்கு படையல்..


விநாயருக்கு எதிரே அவரைப்போல் மூன்று ஏழைகளுக்கு படையல்

திருவிழாவுக்கு வந்த மகளிருக்கு தாலிக்கயிறு வழங்குதல்..
திருவிழாவுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்குதல்

நரிக்குறவர்களால் இது போன்று 100க்கணக்கான கடைகள் இங்கு அமைக்கப்பட்டிருந்தது.

வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்படுகிறது.

சுதந்திரம் பறிபோய்விட்ட ஏக்கத்தோடு பாதுகாப்பு பணியில் நான்...

48 comments:

  1. அணைக்கட்டு ஆடி முதல்வார திருவிழா -அருமையான தொகுப்பு .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நிறைய புகைப்படங்கள்..நிறைய தகவல்கள்!

    நீங்கள் காவல் துறையிலா பணியாற்றுகிறீர்கள்? தற்போதே அறிகிறேன்! மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே...

      காவல் துறையிலும் இருக்கிறேன்...

      Delete
  3. நல்லதொரு தொகுப்பு...

    இனிய ஆடித் திருவிழா அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    அட்டகாசமான படங்களும், அதனின் கலக்கல் கருத்துக்களும் சிறப்பு.

    நன்றி... (த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தலைவரே...

      Delete
  4. என்னாது ஈசல் வருவலா...? எலேய் நீ சாப்புட்டியாய்யா....?

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷம் தாங்க சாப்பிடல...

      ஒவ்வொறு வருஷமும் சாப்பிடுவேன்..

      ஈசலை பிடித்து அதனை பதப்படுத்தி சிறகுகளை நீக்கி நன்றாக வருத்து அதனுடன் மிளகாள் பொடி பொறி கலந்து கொடுப்பார்கள்...

      அதை உண்ணும்போது தனி சுவை தனிசுகம்...

      நான் கண்டிப்பாக இந்த வாரம் சாப்பிட்டுவேன்...

      Delete
  5. பதிவர் ஒருவர் பொதுமக்களுக்கு காவல் வேளையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. புகைப்படங்கள் மற்றும் செய்திகள் நன்று. ஆடி மாத விழா குறித்து பெரிதும் அறியாத எனக்கு இப்பகிர்வு சிறப்பு.

    ReplyDelete
  6. //விநாயருக்கு எதிரே அவரைப்போல் மூன்று ஏழைகளுக்கு படையல்//

    இந்நிகழ்வு குறித்து சற்று விளக்குங்கள் சௌந்தர்.

    ReplyDelete
  7. பொதுவாக கடவுளுக்கு படையல் வைத்து விட்டு பூஜைகள் முடிந்த பிறகு தான் மற்றவர்களுக்கு தருவார்கள். இங்கு சாமிக்கு படையல் வைக்கும் போதே மூன்று பெரியவர்களுக்கு படையல் வைப்பார்கள் கடவுளுக்கு என்னஎன்ன படைக்கிறார்களோ அதை அப்படிளே இவர்களுக்கு படைப்பார்கள்.

    படையல் முடிந்தபிறது இவர்களுக்கு தட்சணைவைத்த, பரிவட்டம் கட்டி அதன்பிறகு சாமிக்கும் இவர்களுக்கும் ஆரத்திகாட்டி தேங்காய் உடைத்து முதல் இவர்ளை சாப்பிட சொல்லுவார்கள் அதன்பிறகு பொதுமக்கள் அன்னதானம் ஆரம்பிக்கும். இங்கு ஏழைகளும் கடவுளும் ஒன்று என்றவகையில் இந்த நடைமுறை செய்யப்பட்டு வருகிறது.

    ReplyDelete
  8. முடிந்தால் அடுத்த வருடம் ஆடி மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் வந்து இந்த விழாவில் கலந்துக்கொள்ளுங்கள்.
    >>>
    நீங்க முன்கூட்டியே பதிவு போட்டிருந்தால் நாங்க வந்திருப்போம்ல. காலம்கடந்து பதிவு போட்டுட்டு, அடுத்த வருசம் வாங்கன்னு அழைப்பு வேற. மறந்துடுவோம்ன்னு நினைச்சுக்கிட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அடுத்த வருடம் முன்கூட்டியே கூப்பிடுறேங்க...

      Delete
    2. முன்கூட்டியே பதிவு போட்டிருந்தா ஸ்வாரிசம் இருக்காதுங்க...

      அதனால்தான் விழா முடிந்த பிறகு புகைப்படங்களுடன் அனுபவபதிவாக பகிர்ந்திருக்கிறேன்...

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  9. நிறைய நல்ல தகவல்கள்
    காக்கி உடையில் கம்பீரம்

    ReplyDelete
  10. நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது திருத்தணியில குடி இருந்தோம். அப்போ சில முறை பெரியப்பாளையம் கோவிலுக்கு வந்திருக்கேன். நாவற்பழம், அசைவ உனவு, பக்தர்கள் வேப்பிலை ஆடை சுத்திக்கிட்டு தீச்சாட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவது மட்டுமே நினைவில் இருக்கு. சிறு வயது நினைவுகளை மீட்டெடுத்தது உங்க பதிவு, பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. கண்டுரசிக்கிற சுகமும் தனியே...

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  11. நீங்க காவல்துறை என்றால் நானு எல்லை பாதுகாப்புபடை.ஆனா எனக்கும் கோவிலுக்கும் ரொம்ப தூரம்....முடிந்தால் படிங்க..இணைந்திருப்போம்.http://tamilmottu.blogspot.com/2012/07/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. நல்லது நண்பரே...
      இணைந்திருப்போம்...

      Delete
  12. திரு விழாவினில்னேரடியாகக் கலந்து கொள்வது போலிருந்தது
    படங்களும் விளக்கங்க்களும் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஆடிமாத சிறப்பை அருமையா சொல்லி இருக்கீங்க நண்பரே..

    ReplyDelete
  14. //திருவிழாவில் விற்றகப்பட்ட பீங்கான் புத்தர் செலவுகள்///

    யோவ்.... நல்லாப் பாரும் வோய்..... அது... குபேரன் செலைன்னு நெனைக்குறேன்....

    #யோவ்.... குந்தானியக் காட்டி குஷ்புனு சொன்னா, கேட்டுட்டுப் போவ நாங்கெல்லாம் இளிச்சவாயா? ஆங்....

    :-)

    ReplyDelete
    Replies
    1. என்னது அது புத்தர் இல்லையா...?

      ஆஹா...

      ஏமாத்திபுட்டாங்களே....

      Delete
  15. திருவிழா பற்றிய செய்திகளும், படங்களும் அருமை நண்பா. எங்க ஊரில் ஆடியை விட புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களிலேயே ஊர் அமர்க்களப்படும். நன்றி

    ReplyDelete
  16. அருமையான தொகுப்புங்க...

    ReplyDelete
  17. ஆடி ஸ்பெஷல்...அருமை!

    ReplyDelete
  18. புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததா?பதிவிற்கு அழகு சேர்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இது எல்லாம் நான் எடுத்த புகைப்படம்தாங்க.

      வருகைக்கு நன்றி மதி சார்...

      Delete
  19. ஊர்த்திருவிழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  20. ஆடிமாத திருவிழா செய்திகள் படங்கள் அற்புதம்! பக்கத்தில் இருந்தாலும் இதுவரை அறியாத தகவல்களை உங்கள்பதிவு மூலம் அறிந்து கொண்டேன்! நீங்கள் வெள்ளீயூர் என்றும் காவல்துறையில் பணிபுரிவதையும் கூடுதலாக அறிந்து ஆச்சர்யம் அடைந்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  21. திருவிழா பற்றிய செய்திகளும், படங்களும் அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  22. நிறைய செய்திகள் , நிறைந்த படங்கள்...
    என் நன்றிகள் .

    அசப்புல அப்புடியே நம்ம கேப்டன் மாதிரியே இருக்கீங்க தலைவரே ..
    சும்மா தமாசு தமாசு ...

    ReplyDelete
    Replies
    1. எங்க நாங்க ரியல் கமாண்டர்ங்க...

      கேப்டன் ரீல் கமாண்டர்ங்க...

      Delete
  23. கடைசி படத்தில் இருப்பவர் சகலகலாவல்லவரோ ?

    ReplyDelete
  24. இன்று ஆடி வந்தாலே குடும்பத்துடன் ஜவுளி எடுக்கபோய் விடுகிறார்கள்.இதுதான் ஆடி திருவ்விழாவாக உருமாற்றிக்காட்டபட்டுள்லஹ்டு இந்த consumer சொசைட்டியில்/

    ReplyDelete
  25. ஆடிமாத அனுபவங்கள் அனைத்தும் பக்தி மனம் கமழும் பதிவாய். நல்லாருக்கு சார்.

    ReplyDelete
  26. அம்மன் திருவிழா என்றாலே கிராமத்தில் பெரிசுகள் முதல் சிறிசுகள் வரை கொண்டாட்டம்தான். பதிவிலுள்ள படங்கள் நல்ல ஆவணங்கள். நடிகர் பாக்கியராஜ் ஸ்டைலில் படத்திற்கு உங்கள் ” போஸ் ”. அருமை.

    ReplyDelete
  27. கொண்டாட்டமோ,கொண்டாட்டம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...