ஒரு மருத்துவமனை :
அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண். சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலி அதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும் மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்கு அழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ் இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.
மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்று நினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.
அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது.
அந்த நேரத்தில்...
ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.
பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...
அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...
அவரும் ஆவலுடன் அந்த குழந்தையை பார்த்தார்..
அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து... “இங்கு கரண்ட் இருக்கா...” என்று கேட்டது...
அதற்கு மருத்துவர் “இல்லை” என்று பதிலளித்தார்..
“அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..”
என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...
அதற்கு டாக்டர்... “கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்” என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...
இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
நன்றி..! வணக்கம்...!
மிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி
நல்லது...
Deleteஉங்களை பத்தி தெரிஞ்சும் இங்க வந்து இதை படிச்சேன் பாருங்க..., என்னை மீண்டும் கடவுள் தமிழ்நாட்டுலதான் பொறக்க வைக்க போறார்
ReplyDeleteநாட்டுல இன்னைக்கு இருக்கிற பிரச்சனை எழுதுறேன்...
Deleteஅது அப்படியே இப்படி வந்துடுது...
எனக்குத் தெரியும் இப்படிதான் முடியும்ன்னு..இருந்தாலும் பரபரப்பு பரபரப்புதான்..
ReplyDeleteநல்லது தலைவரே...
Deleteஎன்ன ஒரு டெரர் பதிவு... ஹா... ஹா.. ஹா..
ReplyDeleteநட்புடன் மணிகண்டவேல்
ஏதோ நம்மாள முடிஞ்சது..
Deleteஹா... ஹா... ஹா...
ReplyDeleteநடந்தாலும் நடக்கும்...
நல்லது தலைவரே...
Deleteஹா...ஹா....
ReplyDeleteநாம் படும் பாடு என்னவெல்லாம் யோசிக்க வைக்கிறது...!
ReplyDeleteநல்ல புனைவு. நடந்தாலும் நடக்கும்.. நன்றி
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - அருமையான கற்பனை - நட்க்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் - நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹ..ஹ..ஹ..ஹ..ஹா..
ReplyDeleteஎதார்த்தமான உண்மை.
குழ்ந்தை இப்போ உங்கள பார்த்து கேட்க போகுது. "என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே"னு.
ReplyDeleteதமிழ் நாட்டில் இப்படிப் பேச வாய்ப்புகள் அதிகம்
ReplyDelete“இங்கு கரண்ட் இருக்கா...” என்று கேட்டது...
ReplyDeleteஎந்த மொழியில்? அந்த குழந்தையிடம் சொல்லுங்கள்..
இன்னும் மின்சாரம் இல்லாத பல ஊர்கள் உலகில் (ஏன் இந்தியாவிலேயே கூட) உண்டு..
உலகூங்கும் சுமார் 140 கோடி மக்கள் இதுவரை மின்சாரத்தைப் பயன்படுத்தியதில்லை