கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label மின்தடை. Show all posts
Showing posts with label மின்தடை. Show all posts

17 October, 2012

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா, வேடிக்கை பார்க்கும் திமுக ,!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பல்வோறு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மின்வெட்டு என்ற பூதத்தை அடக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிய வில்லை அறிவிப்புகளைத்தவிர. திமுக-வாக இருக்கட்டும் அல்லது அதிமுக-வாக இருக்கட்டும் தான் இருக்கும்போது எந்த வேலையும் செய்யாமல் ஆட்சி மாறியப்பிறகே இது கிழிக்கலாம் அதைக்கிழிக்கலாம் என்று வாய்சவிடால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது.
 
கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர், தங்களது கட்சித் தலைவி (அதாங்க அம்மா) பிரதமரானால் தான், இந்த இந்திய நாட்டை காப்பாற்ற முடியும் என, பேசியிருக்காராம்.
 
 
என்ன ஒரு வேடிக்கைப்பாருங்க அண்ணாவளைவு எடுத்தது எனக்கு தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அவர்கள், மின் வெட்டு குறி்த்து துரிதமான எந்த முடிவைவையும் எடுக்காத இவர் இங்கு தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை காப்பாற்ற போகிறாராம்; நல்ல வேடிக்கை. 
 
தினமும், 10 முதல் 14 மணி நேரத்திற்கும் மேல் மின் தட்டுப்பாடு உள்ளது. இங்கு சீரான மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாமல், பிரதமர் பதவி மேல் ஆசைப்படுகின்றனர். தேர்தலில் சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர். மின்தடையால் போராட்டம், உண்ணாவிரதம், மறியல், மனிதச் சங்கிலி, பந்த் என, பொது மக்களும், தொழில் துறையினரும் அல்லாடிக் கொண்டிருக்க, ஆளும் கட்சியோ, பதவி பற்றி ஊர் ஊராக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறது. 
 
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர், கர்நாடகாவுக்கே சொந்தம் என்று, காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்துக்கு தண்ணீர் தரும்படியான உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, பிரதமருக்கு கோரிக்கை விடுக்கிறார். ஆனால் தமிழகத்தை சார்ந்த காங்கிரஸ் அமைச்சர்களோ, 13 ஆண்டுகளாக, மத்திய அரசில் அமைச்சர் பதவி சுகம் அனுபவித்து வரும் தி.மு.க., அமைச்சர்களோ, வாயே திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
 
 
மத்திய அரசில் பதவி சுகம் காணும், தி.மு.க., தன் ஆட்சிக் காலத்திலேயே, மின்சார பற்றாக்குறையை போக்க, எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காமல், தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை, வீடுகளுக்கு மின்வெட்டு என்ற நிலை இருந்ததோடு, மின்வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் கடன் வைத்து விட்டனர். 
 
ஆனால் இன்று, மின்வெட்டு தொடர்பாக போராட்டம், மறியல், துண்டு பிரசுரம் கொடுத்து, நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றனர்.போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, சீரான மின்சாரத்தை வழங்க, தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, தமிழக மக்களை காப்பாற்ற, ஆளுங்கட்சி முன்வர வேண்டும்.

எதிர்கால கொள்கைகள், தெலைநோக்கு பார்வை என்ற அனுகுமுறையில்லாமல் வெறும் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படும் இந்த திராவிட கட்சிகளை நாம் என்னவென்று சொல்வதோ...?

12 October, 2012

பிறந்தவுடன் பேசிய குழந்தை.. SMS-ல் பரவும் ஒரு பரபரப்பு உண்மை கதை..!


ஒரு மருத்துவமனை :

அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண். சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலி அதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும் மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்கு அழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ் இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.

மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்று நினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.

அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது.

\

அந்த நேரத்தில்...

ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.

பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...

அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...

அவரும் ஆவலுடன் அந்த குழந்தையை  பார்த்தார்..

அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து... “இங்கு கரண்ட் இருக்கா...” என்று கேட்டது...

அதற்கு மருத்துவர் “இல்லை” என்று பதிலளித்தார்..

“அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..”
என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...

அதற்கு டாக்டர்... “கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்” என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...

இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
 
நன்றி..! வணக்கம்...!

01 October, 2012

ஜெயலலிதாவும், விகடனின் வில்லங்கமும்...


வெள்ளிக்கிழமை மாலை அண்ணன் ரஹீம் கசாலி அவர்கள் போன் செய்து தெரியுமா தகவல்..? என்றார்... ஆஹா பதிவுலகில் யாரோ மறுபடியும் சண்டையை ஆரம்பிச்சிட்டங்கைய்யா என்று... என்ன தலைவரே பிரச்சனை என்றேன்... ஏன்னென்றால் பதிவர்கள்கிட்ட இருந்து போன் வந்தாலே  எங்கையோ வில்லங்கமான பதிவு ஒன்று வந்திருக்குன்னு அர்த்தம்.

அதன் பிறகு சொல்லுங்கன்னே.. இங்க 14 மணிநேரம் மின்தடையிருக்கு அதனால ‌நெட்பக்கம் போகலண்ணே என்றேன். அது ஒன்னுமில்லிங்க என்விகடனில் சென்னை  பகுதிக்கான 
வலையோசை-யில் உங்க போட்டோபோட்டு உங்களோட கவிதைவீதியை அறிமுகம் செய்திருக்காங்க என்றார்.. அதைச்சொல்லத்தான் போன் செய்தேன் என்றார்..  அப்படியா..! சரிண்ணே நான் பார்க்கிறேன் என்றேன்.

பிறகு இரவு எட்டுமணிக்கு பார்த்தேன். 
அதில் என்னைப்பற்றிய தகவல்களுடன், கவிதைவீதியில் இருந்து மூன்று பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.
 

அதில் ஒன்று சமீபத்தில் வீட்டின் சூ‌‌ழலை, ஒரு அண்ணனனின் இயலாமையை, வறுமையை, அவருடைய தவிப்பை மைப்படுத்தி எழுதிய
  என்ற கவிதையை முதலில் போட்டிருந்தார்கள்...!
 

அதன் பிறகு வெற்றி என்பது இறைவனிடம் மட்டுமே இல்லை அது ஒவ்வொருவருடைய நம்பிக்கையில் இருக்கிறது. சில சமயம் அந்த நம்பிக்கை கடவுளாகவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஜென் கதையை மையப்படுத்தி நான் வெளியிட்ட 
என்ற பதிவையும்,

 

இறுதியாக... கடந்த கோடைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் மின்தடையை மையப்படுத்தி நம்வாழ்க்கை மீண்டும் பின்நோக்கிச் செல்கிறது என்ற 
பாணியில் எழுதிய
 ஒரு கவிதையை பகிர்ந்திருந்தார்கள்..
 
அரசுக்கும்.. முதல்வருக்கும்... மின்சார வாரியத்துக்கும் நக்கல்செய்யும் கடிதம்போல் அமைந்த அந்தபதிவை தற்போது நிலவும் மின்தடையை ஞாபகப்படுத்துவது போல் பகிர்ந்துள்ளார்கள்.


வலையோசையில் என்னை அறிமுகப்படுத்தி, என்பதிவுகளையும் வெளியிட்ட விகடன் குழுவுக்கு என் நன்றிகள். 

25 September, 2012

மின்தடையை போக்க ஜெயலலிதா அவர்கள் இந்த நடிவடிக்கை எடுப்பார்களா..?


மின்பற்றாக்குறை சமீபகாலமாக அதிகமாக நாம் ‌கேட்கும் வார்த்தை. தற்போது தமிழகத்தில் மின்தடை கிட்டதட்ட 14 முதல் 16 மணிவரை நிறுத்தப்படுகிறது. இதில் அதிகம் பாதிப்பது ஏழைகளும், குறு சிறு விவசாயிகள், தொழிற்சாலைகள் தான். ஆனால் இந்த மின்தடையால் மேல்தட்டுமக்கள் பாதித்ததுமாதிரி தெரியவில்லை.

அரசு மேல்தட்டு மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.

மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் இப்போது மக்களுக்கு பல்வேறு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளது மின்வாரியம். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று மக்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர். மின்வாரியத்தின் இந்த பலே யோசனைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்மால் முடிந்த சில பல யோசனைகளை மின்வாரியத்திற்குத் தெரிவிப்போம்.. இதுவும் கூட கரண்ட்டை மிச்சப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில்...

 how save power some tips tneb
- போர்லேண்டர் உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் இந்த அட்வைஸை விரிவுபடுத்தலாம். தேவைப்பட்டால் தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம். காரணம், பொதுமக்களை விட அதிக அளவில் ஏசியில் புழங்குவது இவர்கள்தான்.
- 2 மாதங்களுக்கு தமிழகத்தில் எங்குமே அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம்.


- தலைவா வா, தங்கத் தமிழே வா என்ற ரேஞ்சுக்கு ஆங்காங்க மின்னும் விளக்கொளியில் அலங்காரம் செய்து தட்டி வைப்பது, போர்டு வைப்பது இத்யாதி இத்யாதி விவகாரங்களை 2 மாதங்களுக்கு தடை செய்து உத்தரவிடலாம்.

- அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், சீரியல் செட்டுகள், விளக்கொளியில் ஜொலிக்கும் கட் அவுட்கள் ஆகியவற்றுக்கு 2 மாதத்திற்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம்.

- முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மட்டும், அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை ஒரு இரண்டு மாதத்திற்குத் தடை விதித்துப் பார்க்கலாம்.

- அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஏசி மெஷினே பொருத்தக் கூடாது என்று கூட உத்தரவிடலாம். எல்லாம் 2 மாசத்துக்குத்தானே...!


- இந்த 2 மாத ஏசி நிறுத்தம், அயர்ன் பாக்ஸ் நிறுத்தம், இன்டக்ஷன் ஸ்டவ் நிறுத்தம், வாட்டர் ஹீட்டர் நிறுத்தம் ஆகிய உத்தரவுகளை அமைச்சர்கள் அளவிலும் கூட விரிவுபடுத்தி தமிழக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கலாம்.

- பிறகு ஆடம்பரமாக நடத்தப்படும் கட்சிக்காரர்கள் கல்யாணங்களின்போது பெருமளவில் விளக்குகளைப் போட்டு கட் அவுட் வைப்பது, தலைவர்களின் சீரியல் செட் கட் அவுட் வைப்பது, சாலை நெடுகிலும் டியூப் லைட்டுகளைக் கட்டுவது போன்றவற்றையும் கூட 2 மாதத்திற்குத் தடுத்துப் பார்க்கலாம். முடிந்தால் கல்யாணமே பண்ணாதீங்க, 2 மாதத்திற்கு என்று கூட அட்வைஸ் கொடுத்துப் பார்க்கலாம். நன்றி தட்ஸ் தமிழ்

இப்படி பல்வேறு வகையிலும் கூட மின்சாரத்தை நாம் சிக்கணமாக சேமித்து தமிழக மக்களுக்கு விரிவான முறையில் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்தும் யோசித்தால் நல்லது!

விரைவான விரிவான நடைமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் நல்லதொரு மின்விநியோகம் நடைப்பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...