அன்புள்ளம் கொண்ட பதிவுலகின் பதிவர்களே... மற்றும் வாசகர்களே....
நாளை (17-06-2011) நெல்லையில் கூடும் பதிவர்சந்திப்பில் கலந்துக் கொள்ள வரும் பதிவர்களையும் மற்றும் வாசகர்களையும் அன்புள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்...
ஜாதி, மதம், இனம், கட்சி என் அத்தனைக்கும் அப்பாற்பட்டு மொழி என்ற ஒரே ஒரு உணர்வோடு உலகத்தின் மூலைகளில் எங்கோ இருந்துக்கொண்டு நம்முடைய கற்பனைகள், படைப்புகள், தகவல்கள் மூலம் நட்புகளை பறிமாறிக்கொண்டு, நம்முடைய நட்புப்பாலம் உலகம் முழுவதும் விரிந்துக்கிடக்கிறது.
அந்த நட்பை உறுதிப்படுத்த, முகம் காட்டாது இருக்கும் நம் “முக”வரிகளை அறியச்செய்யயும் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளுபவர்களுக்கும், கலந்துக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்து அறிய பணியாற்றி வரும் அருமை நண்பர் உணவு உலகம் திரு அ.ரா.சங்கரலிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவிப்பதில் கவிதைவீதி பெருமைப்படுகிறது.
நாளைய சமூதாயத்தை, நாளைய உலகை வடிவமைப்பதில் கண்டிப்பாக பதிவுலகம் ஒரு சிறப்பாக பங்கு வகிக்கும். புதியப்புதிய பதிவர்கள் பதிவுலகிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்களின் வருகை கண்டிப்பாக எதிர்காலத்தில் பதிவுலகின் குரல் ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் யாரும் சந்தேகம் படவேண்டாம்.
சச்சரவுகள் ஏதுமின்றி அடுத்த பதிவர்சந்திப்பிற்குக்கு வித்திடுங்கள்.
பதிவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பதிவர்களுக்கும், இணையம் மூலமாக கலந்துரையாடும் பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பை பறிமாறிக்கொள்ளுங்கள் அதோடு எதிர்கால கொள்கை, எதிர்கால நோக்கம், பதிவர்களின் கடமைகள் ஆகியவற்றையும் விவாதியுங்கள். இந்த விவாதம் நாளைய உலக மாற்ற வழிவகுக்கலாம்.
மொக்கை பதிவு போட்டு, நகைச்சுவைகள் செய்து, தம்முடைய படைப்புகளை பகிர்ந்து, காபி டூ பேஸ்ட் பதிவுகள் இட்டு என முடிந்துவிடுவதில்லை நம் பயணம் என்று நம்பிக்கையையுங்கள். இந்த பதிவர்கள் சந்திப்பை நாளை வரலாற்றுப்பக்கங்கள் குறித்து வைத்துக் கொள்ளட்டும்.
நெல்லை பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
(என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதற்க்கான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்)
முக்கிய அறிவிப்புகள்
இந்த நிகழ்வை உறவுகள் அனைவரும் கண்டு களிக்கலாம்.
அனைத்துலகெங்கும் பரந்து வாழும் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் நோக்கிலும், பதிவர் சந்திப்பிற்கு வருகை தர முடியாத உறவுகளிற்கு நேரடித் தரிசனம் கிடைக்கும் வண்ணமும், இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். நேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும்.
இந்த சுட்டி கிளிக் செய்து கண்டு ரசியுங்கள்
(இதற்க்கான ஏற்பாடுகள் செய்துவருபவர் நண்பர் நிருபன்...)
மிக்க நன்றிகள்..!
வெல்லட்டும் பதிவுலக நட்பு....