கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கோச்சடையான். Show all posts
Showing posts with label கோச்சடையான். Show all posts

07 October, 2013

கோச்சடையான் படத்தின் பாடல்... வரிகளுடன்...!



  “எங்கே போகுதோ வானம்… அங்கே போகிறோம்..நாமும்
வாழ்வில் மீண்டாய்  வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா…

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது..
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது…ஓயாது…

ஹே….உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு..
ஹே…எனது தோழா  நம் தாய்நாட்டை பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்  தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால்  காற்றாய் போவோம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
வீரா…வைரம் உன்  நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து  கெஞ்சும்  கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம்…

அங்கே போகிறோம்..நாமும்

வாழ்வில் மீண்டாய்  வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா…

எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே எழுந்து போராடு  போராடு
வீரா…வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும்  கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு
எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்.
ஹே….உனது வாளால்  ஒரு சூரியனை உண்டாக்கு..
ஹே…எனது தோழா  நம் தாய்நாட்டை பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம்..நாமும்

வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா…

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது..
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது…ஓயாது…



பாடல் – வைரமுத்து பாடியது – எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை – ஏ.ஆர். ரகுமான்  இயக்கம் – சௌந்தர்யா அஸ்வின்

11 September, 2013

எதிராளியை இழிவுப்படுத்திய பாரதி .! ரஜினியின் கோச்சடையான் டீசர்!


பாரதியார் இளம் வயதிலேயே கவித்திறம் பெற்று விளங்கினார். அவரது திறமையைக் கண்ட சான்றோர் பாரதி என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள்.

காந்திமதி நாயகம் என்பவருக்கு அது பிடிக்கவில்லை. எப்படியாவது பாரதியை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு சமயம் “பாரதி சின்னப்பயல்” என்ற ஈற்றடியைக் கொடுத்து ஒரு வெண்பா இயற்றச் சொன்னார்.

வெண்பா என்பது கடினமானது. சுலபத்தில் இயற்ற முடியாதது. அப்படியே இயற்றினாலும் “பாரதி சின்னப்பயல்” என்றுதானே முடிக்க வேண்டும் என்று கருதினார்.

பாரதி சற்றும் மலைக்காது வெண்பாவை இயற்றினார். ஈற்றடியை “காந்திமதி நாயகத்தைப் பார்அதி சின்னப்பயல்“ என்று முடித்தார்

பாரதியாரை இழிவுபடுத்தக் கருதிய காந்திமதி நாயகம் தாமே இழிவுற்று தலை கவிந்தார்.

அவரது நினைவு நாளில் அவரது பெருமைகளை நினைப்பதில் பெருமைப்படுகிறேன் நான்..!

********************************

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் டீசர்!

17 July, 2013

ட்ராப்பாகும் கோச்சடையான்...! அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்...!


ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் ட்ராப் என்றால் எப்படி இருக்கும்?


பணம் போட்ட தயாhpப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கியமாக ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்கள்... எல்லோருக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சி.

ஆனால்,


படம் வெளிவரப் போவதில்லை, அதுதான் உண்மை என கோச்சடையான் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோச்சடையான் பிரமாண்டமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு எடுத்தக் காட்சிகள் சரிவராமல் கேரளாவில் உள்ள மோகன்லாலின் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்துக்கான வசதிகள் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் உள்ளது, தமிழகத்தில் இல்லை.
 

சென்ற வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். படத்தின் ஆரம்ப விறுசவிறுப்பை பார்த்த ரஜினி, தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகும் என்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அடுத்த தீபாவளியும் வரப்போகிறது. ரஜினி டப்பிங் பேசினார், கடலில் டால்பின்களுடன் சண்டை போடுகிறார் என சில துணுக்கு செய்திகளுக்கு அப்பால் கோச்சடையான் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.

 
இந்த வருட தொடக்கத்தில்...

கான் படவிழாவில் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றனர். ட்ரெய்லரும் தயாரானது. ட்ரெய்லரைப் பார்த்த ரஜினி கடும் அப்செட். அவர் எதிர்பார்த்த குவாலிட்டியுடன் ட்ரெய்லர் இல்லை. சர்வதேச திரைப்பட விழாவில் அதனை வெளியிடுவது சரியல்ல என்று ட்ரெய்லரை மேம்படுத்த கூறிவிட்டார்.

இதுவரை எடுத்தக் காட்சிகள் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை. இதே தரத்துடன் படத்தை வெளியிட அவருக்கு விருப்பமும் இல்லை என கூறப்படுகிறது. அதனால் படம் யாருக்கும் சொல்லாமல் ட்ராப் செய்யப்பட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

கோச்சடையானுக்கு ஒரு ரஜினி படத்துக்கான கோடிகள் கொட்டப்பட்டிருக்கிறது, ரஜினி, சௌந்தர்யா போன்றவர்களின் கனவு, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம். கோச்சடையான் வெளியாக வேண்டும் என்பதுதான் நாம் உள்ளிட்ட அனைவாpன் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால் கோச்சடையானின் இன்றைய நிலை அதற்கு மாறாக இருப்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

25 April, 2013

அறிவுரைகளை மீறி கேன்னஸ் செல்லும் ரஜினிகாந்த்! சம்மதிப்பாரா வித்யாபாலன்?


ரஜினிகாந்த நடிப்பில் சௌந்தர்யா அஸ்வின் இயக்கும் கோச்சடையான் திரைப்படத்தின் கடைசி கட்ட பணிகள் மும்மரமாக நடந்துவருகின்றன.


உலக தரத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படும் கோச்சடையான் திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் பெற கேன்னஸில் நடக்கவிருக்கும் புகழ்பெற்ற கேன்னஸ் திரைப்பட விழாவில் கோச்சடையானை திரையிட்டுக் காட்ட முடிவு செய்திருக்கின்றது படக்குழு.

உலகம் முழுவதிலுமிருக்கும் பல மொழித் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இந்த கேன்னஸ் திரைப்பட விழாவின் படங்களை தேர்வு செய்யும் நடுவர்கள் குழுவில் தமிழ்த் திரையுலகத்தால் நிராகரிக்கப்பட்ட நடிகை வித்யாபாலனும் ஒரு நடுவராக இருக்கிறார்.

கோச்சடையான் திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், படக்குழு ரஜினியின் அடுத்த படத்திற்கு வித்யாபாலனை ஜோடியாக நடிக்க வைக்கும் ஐடியாவில் இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேன்னஸ் விழாவிற்கு கண்டிப்பாக போகும் முடிவில் ரஜினி இருப்பதால் கோச்சடையான் முதன் முதலாக திரையிடப்படும் கேன்னஸ் திரைப்பட விழாவிற்கு செல்வது, அடுத்த பட ஹீரோயினை பார்ப்பது என இரண்டு வேலைகளும் ஒரே பயணத்தில் முடித்துவிடும் எண்ணத்தில் மருத்துவர்கள் அவ்வளவு தூர பயணம் வேண்டாம் என அறிவுருத்தியும் போயே தீருவேன் என்று ரஜினி கூறிவிட்டதாக கோடம்பாக்கம் பரபரக்கிறது.

ரஜினியின் கோச்சடையான் மட்டுமல்லாமல் அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘தி கிரேட் காட்ஸ்பி’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் கேன்னஸில் திரையிடப்படுவதால் ரஜினி மருத்துவர்களின் அறிவுரையைக் கூட பொருட்படுத்தாமல் கேன்னஸ் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் வித்யாபாஅன் ரஜினி கேட்டால் சம்மதிக்கிறாரா? இல்லையா? என பொருத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

11 April, 2013

கோச்சடையான் Vs ராணா சீக்ரெட்ஸ்..மனம் திறக்கும் ரஜினி மகள்...!


‘கோச்சடையான்’ – இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர, ரஜினியின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை. இதோ… ஸ்கூப் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் ‘கோச்சடையான்’ இயக்குநர் சௌந்தர்யா!

”இது 100 பெர்சன்ட் ரஜினி ஃபார்முலா கமர்ஷியல் படம். அப்பாவை வெச்சு ரெண்டு சூப்பர் ஹிட்ஸ் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அங்கிள்தான் இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட். ரஹ்மான் சாரின் மியூஸிக்ல ஆறு பாடல்கள். தீபிகா ஹீரோயின்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, படத்தில் இன்னொரு மெயின் ஹீரோயின்… ஷோபனா!”

”என்ன சொல்றீங்க… அப்போ டபுள் ஆக்ட் ரஜினியா?”

”ஆஹா… நானே சஸ்பென்ஸ் உடைச்சுட் டேனே! யெஸ்… படத்தில் சீனியர் ரஜினிதான் கோச்சடையான். அவர் ஒரு  தளபதி. நாட்டின் மன்னன் ரஜினியின் பெஸ்ட் ஃப்ரெண்ட். அந்த நண்பனுக்காக உலகத்தையே ஜெயிச்சு அவர் காலடியில் கொண்டுவந்து கொட்டணும்னு துடிக்கிற வீரர்.

அதே சமயம், ‘கோச்சடையான்’… ஒரு பரதக் கலைஞனும்கூட. போர்க்களத்தில் ஆக்ரோஷமா சண்டை போடும் கோச்சடையான், அடுத்த காட்சியிலேயே அசத்தலா அபிநயம் பிடிச்சு ஆடுவார். அப்படியரு கேரக்டருக்கு யாரை ஜோடியா ஃபிக்ஸ் பண்ணலாம்னு யோசிச்சா, ஷோபனா மேடம் தவிர, யாரும் என் மனசுல தோணவே இல்லை!”

”அப்ப கோச்சடையான் மகனுக்குப் படத்தில் என்ன வேலை?”

”மொத்தக் கதையையும் கேப்பீங்க போல. சரி… இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் தகவலும் சொல்லிடுறேன்… கோச்சடையான் பையன் கேரக்டர்தான் ‘ராணா’.

p10b

ஒரு தலைவனுக்குத் தேவையான அத்தனை தகுதிகளும் திறமைகளும் கோச்சடையானிடம் இருக்கும். என்ன சொல்றோமோ அதன்படி வாழணும்கிற கொள்கையோட இருப்பார் கோச்சடையான். அவர் பையன் ராணா, அவரைவிட நூறு மடங்கு வேகமானவன். ஆனா, இளங்கன்று பயமறியாதுனு சொல்வாங்களே… அப்படிப் பரபரனு இருப்பார் ராணா. தன் ஜூனியரின் ஆற்றலை விவேகமான பாதையில் திருப்புவார் கோச்சடையான். அதனால் கோச்சடையான்தான் படத்தின் ஹீரோ.

ஒரு ரஜினி ரசிகையா சொல்றேன்… அப்பா இதுவரை பண்ணினதிலேயே கோச்சடையான்தான் பெஸ்ட் கேரக்டரா இருக்கும். அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்ஷியல் கலாட்டாக்களும் படத்தில் இருக்கு. க்ளைமாக்ஸ்ல ஒரு பஞ்ச் அடிச்சிட்டு, செம கெத்தா ஒரு நடை நடப்பார் பாருங்க… ஸ்பாட்ல நான் ‘கட்’ சொல்ல மறந்து பார்த்துட்டே இருக்க, மொத்த யூனிட்டும் கிளாப்ஸ் அள்ளிட்டோம். இதெல்லாம் போக, அப்பா படத்தில் ஒரு பாட்டும் பாடியிருக்கார். இப்போதைக்கு அவ்வளவுதான்… இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க… ப்ளீஸ்!”

”ஒரு ரசிகையா ரஜினியைக் கொண்டாடியிருப்பீங்க. ஒரு இயக்குநரா ரஜினியின் ப்ளஸ், மைனஸ் என்ன?”  

(யோசிக்கிறார்) ”மைனஸ்னு சொல்ற அளவுக்கு எனக்கு எதுவும் தோணலை. மத்தபடி… எல்லாமே ப்ளஸ்தான். அதிலும் முக்கியமா, அவரோட டெடிகேஷன்! பட வேலைகள் ஆரம்பிச்சதுல இருந்து நாங்க ரெண்டு பேரும் எப்போ பேசினாலும் அது ‘கோச்சடையான்’ சப்ஜெக்ட்டாதான் இருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, தாங்க முடியாம ஒருநாள், ‘டைனிங் டேபிள்ல இனி சினிமா பத்திப் பேசாதீங்க’னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அப்பா… சிம்ப்ளி சூப்பர்ப் ஆக்டர்!”
p10a

”ஒரு இயக்குநரா அப்பாகிட்ட பாராட்டு வாங்கினீங்களா?”

”நல்லவேளை இந்தக் கேள்வி கேட்டீங்க! ஒரு சீன்ல அப்பா கேரக்டரும் தீபிகா கேரக்டரும் உணர்ச்சிபூர்வமாப் பேசிக்கணும். வசனங்கள் கொஞ்சம் தூய தமிழ்ல இருக்கும். அதனால், தீபிகாவுக்கு சிச்சுவே ஷனை விளக்கிட்டு நானே ‘இந்தந்த ரியாக்ஷன் இப்படி எல்லாம் வேணும்’னு சின்னதா நடிச்சுக் காமிச்சேன். அப்போ அப்பா என்னைக் கவனிச்சுருக்கார்போல! ராத்திரி வீட்டுக்கு வந்ததும், ‘நடிச்செல்லாம் காமிக்கிறீங்க கண்ணா… நல்லா நடிக்கிறீங்க… சூப்பர்… சூப்பர்’னு சொல்லிட்டுப் போயிட்டார். தலைவரே நம்மளைப் பாராட்டிட்டாரேனு எனக்கு சர்ப்ரைஸ் ஷாக். அன்னிக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே பிடிக்கலை!”

”ஆல் இஸ் வெல். ஆனா, அனிமேஷன் படங்கள் ஒரு லுக்குக்கு கார்ட்டூன் மாதிரி இருக்கும்னு கமென்ட்ஸ் கிளம்புமே?”

”‘அவதார்’ என்ன கார்ட்டூன் படமா? நாமளே ‘அவதார்’ பண்ற அளவுக்கு டெக்னாலஜி இங்கேயே வந்திருச்சு. பல காலமா நாம தயங்கிட்டு இருக்கிற ‘பொன்னியின் செல்வன்’கூட இந்த டெக்னாலஜியில் ஈஸியாப் பண்ண முடியும். ‘சுல்தான் த வாரியர்’ வேலைகள் ஆரம்பிச்சப்போ, இந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லை. அப்ப அந்தப் படம் பண்ணியிருந்தா, கார்ட்டூன் மாதிரிதான் இருந்திருக்கும். அதான் அந்த புராஜெக்ட்டையே கேன்சல் பண்ணினோம். ஆனா, இப்போ ‘கோச்சடையான்’ல எந்த இடத் திலும் உங்களுக்கு கார்ட்டூன் ஃபீல் வராது.

ரொம்ப சின்ன வயசுல அப்பா எனக்குச் சொன்ன அட்வைஸ் இது… ‘உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்கதான் அதுல வரணுமே தவிர, நீ அடுத்தவங்க பாதையில போகக் கூடாது’. என் வழி… அப்பா சொல்லித் தந்த அதே தனி வழி!” (விகடன் செய்திகள்)

26 March, 2013

கோடையைவிட்டு தள்ளிபோன டாப் 5 தமிழ்படங்கள்...

பொதுவாக கோடை விடுமுறையில்தான் பிரபல ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்களைப் போட்டுத் தாக்குவார்கள் கோடம்பாக்கத்தினர். ரஜினி, கமலுக்கு இது பொருந்தாது. காரணம் அவர்களின் படங்கள் எப்போது வந்தாலும் கோடை விடுமுறை எஃபெக்ட்தான்! 
 
அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களுக்கு இந்த கோடை விடுமுறை மிகப் பெரிய வசூல் வாய்ப்பு. ஆனால் இந்த ஆண்டு, கோடையில் அப்படி ஒரு பெரிய படம் கூட வெளியாகாத சூழல் உள்ளது. காரணம் ஒன்று, ஐபிஎல். இன்னொன்று படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பது. 
 
இப்படங்கள் இந்த ஆண்டில் கலக்ககூடிய படங்களாக இருந்தாலும் தற்போது இல்லாமல் தள்ளிப்போகிறது என்ற வருத்தம் ரசிகர்களிடத்தில் இருக்கிறது.
 

கோச்சடையான் 
இந்த ஆண்டு கோடை விடுமுறை ட்ரீட்டாக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சைடையான் படத்தை. இந்தப் படம் இந்திய சினிமாவுக்கே புதிய அனுபவம். 3 டி மட்டுமல்ல, மோஷன் கேப்சரிங் எனும் புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள். ஏப்ரல் 14-ம் தேதி வரும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் இப்போது ஜூலை இறுதிக்கு தள்ளிப் போய்விட்டது.
சிங்கம் 2 
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் நடித்துள்ள படம் சிங்கம் 2. ஹரி இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்றார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. எனவே ஜூனுக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.
 
வலை 
வலை என்ற தற்காலிக தலைப்புடன் தயாராகிவரும் அஜீத் படமும் இந்த சம்மருக்குத்தான் வெளியாகும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படம் ஜூனிலாவது வெளியாகுமா என்று தெரியவில்லை.

தலைவா 
துப்பாக்கியின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தக்கவைக்க, மீண்டும் அதே மாதிரி கெட்டப்புடன், விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்தை மேயில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. எனவே ஜூலை அல்லது ஆகஸ்டுக்குப் போய்விட்டது படம்.
ஐ 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட். சம்மரில் வந்தால்தான் இந்தப் படத்தின் பட்ஜெட்டை வசூலிக்க முடியும் என்ற நிலை. ஆனால் 55 சதவீதம்தான் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என ஷங்கர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அடுத்த சம்மருக்கு இலக்கு வைத்திருக்கிறார்களோ என்னமோ...!

07 March, 2013

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு..! படத்தின் பெயரும் முடிவுசெய்யப்பட்டது

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் பறிபோனது. இவரை தங்களது படங்களில் நடிக்கவைக்க எந்தவொரு தயாரிப்பாளரும், இயக்குனரும் முன்வரவில்லை.

இந்நிலையில், மறுபடியும் ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில், இவர் நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இயக்குனர் சிம்புதேவனுடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் படத்திற்கு பட்ஜெட் எகிறவே, படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவது முடிவாகி உள்ளது. இப்படத்திற்கான கதையை ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் காயத்ரி எழுதியுள்ளார். வடிவேலுவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இந்த கதை பிடித்துவிட்டதால் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டார்களாம்.

இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ‘கோச்சடையானி’ல் எனது பணி முடிந்து விட்டது. ‘கோச்சடையான்’ ரிலீசுக்குப் பிறகு ‘ராணா’ பணிகள் தொடங்கலாம் என ரஜினி கூறியுள்ளார். ‘பஞ்சதந்திரம் பார்ட் 2’ பண்ணலாம் என்ற யோசனையும் உள்ளது. இதற்கிடையில்தான் டாக்டர் காயத்ரி, வடிவேலுக்கு ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. வடிவேலுவும் கதையை கேட்டுவிட்டு என்னிடம் வந்து பண்ணலாமான்னு கேட்டார். சரி என்று சொல்லிவிட்டேன். இந்த கதையை பிரம்மாண்ட செலவில் படமாக்க இருக்கிறோம். தயாரிப்பாளர் கிடைத்ததும் ஆரம்பித்து விடுவோம் என்றார்.

இப்படத்திற்கு ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என பெயர் வைத்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளும் வடிவேலு, அங்கு அனுபவிக்கும் சிக்கல்களையும், சிரமங்களையும் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். 
பழையபடி வடிவேலுவை எதிர்பார்த்து காத்திருக்கும் வடிவேலு ரசிகர்களுக்கு இச்செய்தி உண்மையில் மகிழ்ச்சியே...!

05 March, 2013

பரவசப்படுத்தும் ரஜினி - கமல் அபூர்வ புகைப்படங்கள்















































நன்றி : சினிமா தளங்கள்...  மற்றும் கூகுள்
Related Posts Plugin for WordPress, Blogger...