கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 August, 2013

தலைவா விஜய்யின் அதிரடி முடிவு..! தனுஷின் 25-வது படம்..!


தலைவா படம் வெளிவர உதவும்படி கோரிக்கையை முன்வைத்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உண்ணாவிரதத்தில் பங்கேற்க நடிகர் சத்யராஜ், கதாநாயகி அமலா பாஅல் ஆகியோரும் இயக்குனர் விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், அனுமதியும் அளிக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் விஜய் மனு செய்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகாவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அந்தப் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் கடும் நஷ்டமடைவேன் என்று தயாரிப்பாளர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளதையடுத்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
**********************************


சுதந்திர தினமான நேற்று தனுஷின் 25வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். அதன் படி தனுஷின் படப்பெயர் நேற்று வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 25வது படத்திற்கு ‘வேலையில்லாப் பட்டதாரி ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் தந்து 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய தனுஷ், அன்று தனது 25வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் 3 படங்களில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய வேல்ராஜின் இயக்கத்தில் தனது அடுத்தப் படம் எனத் தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் முதன் முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் அமலாபால். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

படத்திற்கு இசை ‘கொலைவெறிப் புகழ்' அனிருத். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் 20ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தில் அமலாபாலிற்கு அழகான் சென்னைப்பெண் கதாபாத்திரமாம். மொத்தத்தில் இப்படம் நல்ல குடும்பப்பாங்கான படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

3 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...