காலையில்
சுற்றம் நட்பிடம் உறவாடும் போது
நினைவுக்கு வருவதில்லை...
மாலையில்
நண்பர்களோடு கலந்துப்போகும் போது
மறந்துத்தான் போகிறேன்...
பகலெல்லாம்
போகும் வரும் இடங்களில்
எங்கேயோ சென்று பதுங்கி விடுகிறது....
போகும் வரும் இடங்களில்
எங்கேயோ சென்று பதுங்கி விடுகிறது....
எனக்கான தேடலில்
கனவுகளோடும் காட்சிகளோடும்
இருவிழிகள் சண்டையிடும் போதும்
அது நினைப்பு வருவதில்லை...
ஆனால்
கவிதை எழுத அமரும் போதும
இரவு நேரங்களில் மட்டும்
நினைவுக்கு வந்துவிடுகிறது...
பாழாய்போன
இந்த காதல் தோல்வி....
வடை?
ReplyDeleteகவிதை அருமை!
ReplyDeleteஅனுபவம் - கொடுமைதான்!
விடுங்க பாஸ்! மறந்துட்டு அடுத்த தோல்விக்கு(?!) தயார் பண்ண வேண்டியதுதான்! :-)
நல்ல கவிதை.. கடைசி வரி என்னை மிகவும் கவர்ந்துள்ளது...
ReplyDeleteகூகிளுக்கு ஏன் இந்த வேலை????
கவிஞ்சா நீர் எப்படி கவிதைல கலக்குரீர்னு புரிஞ்சி போச்சி...நன்றி!
ReplyDeleteஎதுவுமே அனுபவத்திற்கு தான் நண்பரே.
ReplyDeleteமுயன்றால் எதுவும் முடியும் .
(நினைக்கவும் முடியும் ,மறக்கவும் முடியும் .)
ஓய்வு இருந்தால் வாருங்களேன் நம் வலைபதிவிர்க்கு .
முடியும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்
அப்பிடி ஞாபகம் வரவில்லை என்றால்
ReplyDeleteஅது உண்மையான காதல் இல்லையே நண்பரே .
அருமை...
ReplyDeleteஉண்மைதானோ?
கவிதை என்று வந்துவிட்டால் காதல் இல்லாமலா !!
ReplyDeleteமாப்ள ஏதோ பள்ளத்துல விழுந்துட்டாரு
ReplyDeleteசரி விடப்பா. அடுத்த ஃபிகர் இருக்கு
ReplyDeleteநியாபகம் வருதே வா?...ஆனாலும் கவிதை சூப்பர்
ReplyDeleteதோழரே..
ReplyDeleteவருத்தப்படாதீர்கள்..
உண்மையில் தோல்வியடைந்த காதலில் தான் காதல் உயிரோடு இருக்கிறது.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
நண்பரே!
ReplyDeleteகாதல் தோல்வியில்
பிறக்கும் கவிதைகளில் தான்
சுவை அதிகம்
புலவர் சா இராமாநுசம்
ஒண்ணுக்கு அப்பறம் அடுத்த முறை முயற்சி செய்யாதவங்களுக்கு மட்டும் தான் இப்பிடி...
ReplyDeleteஅட்லீஸ்ட் சீக்கிரம் கல்யாணமாவது பண்ணிடனும் இல்லாட்டி இப்படிதான்
காதல் தோல்வி கசந்தாலும்
ReplyDeleteகவிதை இனிப்பாக அமைந்துள்ளது.
தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று தெரிகிறது.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
காதலில் ஜெயித்தவர்களுக்கு சில நாட்களில் காதல் மறந்துவிடுகிறது ...தோற்றவர்களிடம் காலம் முழுவதும் காதல் வாழ்கிறது ....நீங்க குடுத்து வச்சவுங்க அண்ணே....
ReplyDeleteநமக்கெல்லாம் திரிஷா இல்லைனா திவ்யா. காமெடியா இருந்தாலும் இந்த பாலிசிதான் உலகின் நிதர்சனம்.
ReplyDeleteநண்பா..
ReplyDeleteஎன்ன ஆச்சு..
ஹ்ம்ம்.. அருமை நண்பா :D
ReplyDeleteகவிதை எழுதுறதுக்குன்னே ஒருவாட்டி எல்லாரும் காதலிச்சி தோல்வியடையனும், அதையும் உணரனும்........ நல்ல கவிதை..!
ReplyDeleteபடங்களும் ஏற்ற வரிகளும் அருமை.
ReplyDeleteஅப்ப நீங்க எழுதற கவிதை எல்லாமே மிட் நைட்ல எழுதுனதா?
ReplyDeleteஆரம்ப வரிகள் காரணமாய் இருக்கலாமோ காதல் தோல்விக்கு? நான் சரியா கேட்கிறேனா?
ReplyDeletesuper................
ReplyDeleteகறை நல்லது என ஒரு சோப்பு விளம்பரம் வரும்
ReplyDeleteஅதைபோல காதல் தோல்வி நல்லது எனத்தான்
சொல்லத் தோன்றுகிறது
இல்லையெனில் இத்தனை காவியங்களும் காப்பியங்களும்
கவிதைகளும் கிடைக்காமல் அல்லவா போயிருக்கும்
தங்கள் கவிதை உட்பட
என்வே வாழ்க காதல் தோல்வி என
வாழ்த்தத்தான் தோன்றுகிறது
சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்
தனிமையில் இருக்கும்போதுதான் சோகங்கள் மீண்டும் மீண்டும் எழும்!
ReplyDeleteஎன்ன பாஸ் கடைசியில் இவ்வாறு முடித்துவிட்டீர்கள்!!
ReplyDeleteகாதலில் தோல்வியும் ஒரு இன்பம்தான் மறக்காமல் இருக்க முடிகின்றதே !
ReplyDeleteஅடுத்த காதலைத் தேடுங்கள் பாஸ்!
காதல் தோல்வி மறக்க இயலவில்லையா - இயற்கை தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகண்ணாடி என்ற நினைவு முன் நிதானமாக பார்க்கும் போது தான்
ReplyDeleteவாழ்வில் ஏற்படும் நீங்கா தழும்புகள்.. மனதை கீறும்.....
ம்....உண்மைதான் !
ReplyDeleteசகா உன்மைய இப்படி போட்டு உடைத்துடிங்களே. . .காதலில் தோற்றவர்களே சாகும் வரை காதலை நினைவில் வைத்திருக்கிறார்கள். . .வென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். காதலை கொண்டாடுங்கள். . .வெற்றியை பிரகடனப்படுத்துங்கள். . .அப்பொழுதுதான் உலகத்திற்கு காதலின் மேல் நம்பிக்கை பிறக்கும். . .
ReplyDeleteநண்பர் பிரணவன் சொன்னதுபோல் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுங்கள்..
ReplyDeleteகண்டிப்பாக பூமியில் காதலின் மரியாதை கூடும்....
ஆழ்ந்த அனுதாபங்கள் . அண்ணே
ReplyDeleteசரி விடுங்கள் நீங்கள் கவிதை எழுத காரணமான அந்த காதல் தோல்விக்கு நன்றி சொல்லுங்கள் . ஒன்றின் இழப்பு இன்னொன்றின் உருவாக்கம் .
ReplyDeleteஉணர்வுக் காதல் கவிதை
ReplyDeleteஅருமை .............
ReplyDeleteஉண்மையான காதல் என்றுமே தோற்பதில்லை
நண்பரே தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.
ReplyDeletehttp://balapakkangal.blogspot.com/2011/07/blog-post_21.html
அனுபவப் பதிவா!.. சீச்சி இருக்காது.
ReplyDeleteஅனுபவிச்சு எழுதி இருக்காரு.அருமையான
கவிதை வாழ்த்துக்கள் சகோ...................
கவிதை நல்லாருக்குங்க
ReplyDeleteதலைப்பில் சஸ்பென்ஸ் வைத்து, காதல் தோல்வியின் வலியினை உணர்த்தும் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteமனதில் பல நிகழ்வுகளைப் பற்றிய எண்ணம் இருக்கும் போது மறைந்து விடும்,
ஆனால் மனம் ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது வலி எனும் உணர்வு தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.
அரும்மைய்யா...........
ReplyDeleteகவிதையின் வாசலில் நின்றுகொண்டு காதல் தோல்வி நினைவு வராமல் போகுமா?!!
ReplyDeleteநல்ல கவிதை நண்பரே!