கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label படித்தது. Show all posts
Showing posts with label படித்தது. Show all posts

07 January, 2019

அவிழ்த்து விட்டு விடுங்கள்...!



வாழ்க்கை என்ற நெடுந்தூர பயணத்தில் நாம் கற்றுக்கெள்ளும் பாடம் தான்... வாழ்க்கையை நகர்த்துவதற்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. நமக்கு ஏற்படும் மனகசப்பு, துயரங்கள் கேள்விகள் போன்றவற்றுக்கு விடை தருவது காலமும்.. அதனோடு இனைந்து வரும் இந்த உலகமும்தான்

நாம் சில சம்பவங்கள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கவிதைகள் படிக்கும்போது அல்லது கேட்கும் போதோ நம்மனதில் சில உறுத்தலையோ அல்லது சிறு தாக்கத்தையோ விடடுச்செல்லும்... இதுசரிதானே என்று நம்மிலே நம்மை கேட்டு நச்சரிக்கும். அவற்றில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் உணர்வோம்..

அப்படி சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு கதையைத்தான் தற்போது தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்... படித்த நேரம் முதல் என் மூளையில் அமர்ந்துக்கொண்டு என்னை ஏதோ செய்துக்கொண்டு இருக்கிறது... அவற்றை தங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்..


துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.  பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். I

இளைஞன் ஒருவன் வந்தான்

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.  ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்......??? என்று கேட்டான்.

துறவி அவனிடம் சொன்னார்....

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய்.

"ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும்.

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி.

இன்று சுத்தப்படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன், என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கரீங்க.....???

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி அப்போது சொன்னார் "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்........!!

உண்மைதானே... நாம் இன்னும் பலகோடி ஆண்டுகளாய் பல்வேறு அழுக்குகளை மனதிலே தேக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்... அதை விடமறுத்துவிட்டு கலாச்சாரம், பாரம்பரியம், என்று வியாக்ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறோம்..

சிலர் அதை தனித்தன்மை, பிடித்தவை, கொள்கை, என் தனிவழி என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேற எது நமக்கு தடையாக இருக்கிறதோ அதை அப்படியே காலில் போட்டு மிதித்து முன்னேற பழகிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதுவே நம் காலில் கட்டப்பட்டுள்ள சங்கிலிப்போல் நம்மை நகரவே விடாது.


12 April, 2018

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்க....!



தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இலவசமாக
கல்வி பயில்வது எப்படி*?

********************************

*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*?


*RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009*


*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?


முடியும்!


என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?


ஆம்.


*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018


*இந்த சட்டம் ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA ) கொண்டு வரப்பட்டது...


*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*?


★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★ தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர், 

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்

இருக்கும் தனியார் பள்ளிகளில் உங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*


*மற்றும் முதல் வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*

*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள் 8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*


இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து கல்வி பயிலலாம்.


*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*

*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*


பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.


*அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீதம் இடங்களை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும்* *குழந்தைகளுக்கு*

*கண்டிப்பாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்*

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம் அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.


*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் சிறுபான்மையினர் பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*


*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை. கட்டணம் செலுத்துங்கள் பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*


*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.


உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர், மெட்ரிக்பள்ளி இயக்குநர், இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.


சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!


*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்*


★ எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின்        கல்வி கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★ கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★ பெயர் தான் இலவசக்கல்வி !

★ இது கேவலம் அல்ல!

★ மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★ கவலை வேண்டாம்!

★ இது கனவல்ல! நிஜம் !



★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*

*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*


தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.



★ *விண்ணப்பம் செய்வது எப்படி*?


★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே விண்ணப்பிக்கலாம் .


1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்


*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்



★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*

1. பிறப்பு சான்று

2. குழந்தையின் புகைப்படம்

3. ஜாதி சான்று

4. வருமான சான்று

5. இருப்பிட சான்று

6. முகவரி ஆதாரம்


*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில் ஒவ்வொரு சான்றுக்கும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.


★ இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.


★தனியார் பள்ளிகளில் L.K.G வகுப்பிற்கான சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.


★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள். இது சட்ட விரோதமான செயலாகும்.



★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.


*இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள் குறிப்பிட்டு 16.04.2018 அன்று* *பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*



*20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*


*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*


*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*


★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.


★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!


★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.


★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.


*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*


★ ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.


★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.


★ 2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★ 2017-2018 ஆம் கல்விஆண்டில் 2,36,000 இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம் காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40,000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.


★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.


*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் இலவச சேரக்கை நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*


*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*


★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 


★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.


★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.



★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை*


*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*


*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*!


பெற்றோர்களே!

நண்பர்களே !

சமூக ஆர்வலர்களே!

சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !


*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*


*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*

*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*


*மேலும் இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்* *தனியார் பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும் .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்* *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அனுகலாம்...


மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 

நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?

அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.


*கவலை வேண்டாம்*!!

*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*


*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*

*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*


*******************************

*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே இலட்சியம்*

31 March, 2018

பாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி



பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. எவ்வளவு துணிச்சல் உள்ள ஆண்களும், பாம்பைக் கண்டவுடன் சிறிதுதூரம் பின்வாங்குவார்கள்.

காரணம், பாம்பு சிறிய உயிரினம் என்ற போதிலும், அதில் உள்ள கொடிய விஷம் மனிதர்களின் உயிரை சில மணிநேரங்களில் மாய்த்துவிடும் என்பதாலயே அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.


ஆனால், இதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாம்புகளை அனாசயமாகப் பிடித்து வருகிறார். இதை மக்களுக்கு சேவையாகச் செய்து, பாம்புகளை மக்கள் கொல்வதில் இருந்து காத்து வருகிறார். மக்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டி வருகிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய கிராமமே பாலோடு. இங்குள்ள பச்சா எனும் மலைப்பகுதியில் வசிப்பவர் ஜே.ஆர். ராஜி(வயது 34). இவர்தான் பாம்புகளின் தோழியாக இருந்து துணிச்சலாக பாம்புகளை பிடித்து வருகிறார். திருமணமான ராஜிக்கு அனாமியா, அபிராமி என பெண் குழந்தைகள் உள்ளனர்.

பயிற்சியாளரிடம் ஒருநாள் மட்டுமே முறையான பயிற்சி பெற்ற ராஜி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 483 பாம்புகளைப்ப பிடித்து காடுகளில் பத்திரமாக விட்டுள்ளார்.

தனது பாம்பு பிடிக்கும் அனுபவம் குறித்து ராஜி நம்மிடம் கூறியதாவது:

''பாம்பு பிடிக்கும் கலையை நான் தொழிலாகச் செய்யவில்லை. இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்து வருகிறேன். மக்களுக்கு பாம்புகளைப் பற்றி விழிப்புணர்வும், அதேசமயம், பாம்புகளையும், மக்களையும் அழிவில் இருந்து காத்தும் வருகிறேன்.

என் தந்தை ஒரு ரப்பர் மரத்தொழிலாளி. நான் காடுகளில் வாழ்ந்து பழகியவள். இதனால், சிறுவயதில் இருந்தே பாம்புகளைப் பார்த்துப் பழகிவிட்டேன். சிறுவயதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து பாம்புகளை பிடித்து வந்தேன்.

பலநேரங்களில் பாம்புகளைத் தொட்டு விளையாடி இருக்கிறேன், ஆனால், ஒருபோதும் என்னை சீண்டியது இல்லை. இதையடுத்து, யுடியூப்பில் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன். அதன்பின் சிறிய அளவிலான பாம்புகளை மட்டும் பிடித்துவந்தேன்.

அதன்பின் கேரளாவில் உள்ள பாம்பு பிடிக்கும் வல்லுநரான பாபு பாலலயம் என்பவரிடம் என்னைப் பற்றிக்கூறி அவரிடம் முறைப்படி பாம்பு பிடிக்கும் நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருநாள் மட்டுமே முறைப்படி பயிற்சி அளித்து, பாம்புகளின் வகைகளையும், அதன் குணங்கள், தன்மைகள், விஷம் தாக்கும் முறை ஆகியவற்றை கூறினார்.

இந்த பயிற்சிக்குபின் நான் முதன் முதலில் ஒரு கருநாகப் பாம்பு தான் பிடித்தேன். அதன்பின் நான் வீடுகளில், நகர்ப்புறங்களில் பிடிக்கும் பலவகையான பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து அதை காடுகளில் விட்டுவிடுவோம்.

நான் பாம்பு பிடிக்கும் விஷயத்தை மக்கள் அறிந்து வீடுகளில் எந்தவகையான பாம்புகள் இருந்தாலும் உடனடியாக எனக்கு போன் செய்து அழைக்கிறார்கள். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. சிலர் அன்பின் காரணமாக பணம் கொடுத்தாலும்கூட அதை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

என்னுடைய கணவர் அனில்குமார் டிரைவராக பணிபுரிகிறார். அவரின் உதவியால் இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம், லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

நான் முதலில் பாம்பு பிடிப்பதைப் பார்த்து எனது கணவர் மிகவும் அச்சப்பட்டார். ஆனால், இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை.

பாம்புகளைப் பிடிக்கும் போது கையுறை ஏதும் போடமாட்டேன் வெறும் கைகளை மட்டும் பயன்படுத்துவேன். பாம்பு பிடிக்கும் கருவிகளை வைத்து பாம்பு பிடிப்பது எப்போதும் சிறிது ஆபத்தானது. சிறிது தவறாக பிடித்துவிட்டாலும், அல்லது எந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் நாம் கடுமையான விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால், நான் செய்யும் பணி நல்ல சேவையாக இருக்கிறது. எனக்கு எந்த சிக்கலும் வராமல் கடவுள் பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு ராஜி தெரிவித்தார்.

பாராட்டுகள் சகோதரி...
தி இந்து சொய்திகளில்....

14 August, 2013

இதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..!


ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான். அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆயிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்

அங்க இருந்த துறவி சொன்னாரு. தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். 
அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னன்னு பார்க்கல. உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்தத்துக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்.

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார்.

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி. ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .

.
அது என்னன்னு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.

(பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க)

(நன்றி... ரசித்தது...)
Related Posts Plugin for WordPress, Blogger...