கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 August, 2013

இது இசைஞானி விடுத்துள்ள சவால்!



“லண்டனில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையிலிருந்து நேராக இங்கே வருகிறேன். அன்றைக்கு அரை மணி நேரத்தில் ட்யூன் போட்டு, இரண்டு மணி நேரத்தில் இசையமைத்து ரெக்கார்டிங் செய்யப்பட்ட பாடல்களுக்கு இப்போது நோட்ஸ் எடுக்க ஒரு நாள், இரண்டு நாளாகிறது. 
 
இந்த ரிகர்சலில் பங்குபெறும் இசைக் கலைஞர்கள் எல்லோருமே… எப்படி இது முடிந்தது உங்களால்… போகிற போக்கில் இப்படிப்பட்ட மெட்டுக்களையெல்லாம் எப்படி உருவாக்க முடிந்தது? என்றெல்லாம் வியந்து போய் கேட்கிறார்கள்…

அது நானாக யோசித்து யோசித்து உருவாக்கிய இசையல்ல. தானாக வந்தது. நான் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று நினைத்து இசையமைத்திருந்தால் அந்த இசை மனதில் இறங்காது… தலையில் போய் உட்கார்ந்து தலைக்கனத்தை ஏற்றிவிடும்.

ப்ரியா படத்தில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக வசனங்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டுமே வரும்.. சிங்கப்பூர் பூங்காக்கள், பறவைக் கண்காட்சி, டால்பின் பார்க் போன்றவற்றில் ஹீரோ ஹீரோயின் வருவது போன்ற காட்சிகளை தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள். 
 


இந்தக் காட்சிக்கான இசையை நானே கண்டக்ட் செய்தேன். அதற்கு முன் கோவர்தன் மாஸ்டர் செய்து பார்த்தார். ஒன்று, இசை காட்சியை மீறிப் போய்விடும்… அல்லது காட்சி முடிந்து இசை மீதமிருக்கும். இரண்டும் பர்ஃபெக்டாக பொருந்தி வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அண்ணா நீங்கள் உள்ளே சென்று மற்ற வேலையைப் பாருங்கள். நான் இதை கண்டக் செய்கிறேன் என கூறிவிட்டு ஒரே டேக்கில் செய்து முடித்தேன்.

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்களோ அவர்களிடம் போய் அந்த இசையை… படத்தில் பத்துநிமிடம் வரும் அந்த இசைக்கு நோட்ஸ் எடுக்கச் சொல்லுங்கள்… அவர்களுக்கு குறைந்தது சில மாதங்களாவது தேவைப்படும்…. நோட்ஸ் எடுத்து முடிக்கவே குறைந்தது இரண்டு மாதங்களாகும்!”

-இது சனிக்கிழமை நடந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பில் இசை பிதாமகன் இளையராஜா.

டிஸ்னி 1 : உலகின் சிறந்த இசையமைப்பாளரா… உங்களைத் தவிர யாருண்ணே அது… உள்ளூர் இசையையும் உலகத் தரமாக்கிய தவப் புதல்வர் அல்லவா நீங்கள்!

டிஸ்கி 2: லண்டனில் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிரமாண்ட ஓ2 அரங்கில் இசைஞானியுடன் 100 கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறுது. 40 பாடல்கள் வரை இடம்பெறவிருக்கின்றன. நம் இசைஞானி குறைந்தது 10 பாடல்களாவது பாடுவார் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...