கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 December, 2010

சங்கடம்


வணக்கமிட்டு புன்னகையிட்டார்
பழைய நண்பர் ஒருவர்
 
கவர்ச்சிப் புன்னகையால்
நானும் கை குலுக்கி ஆயிற்று...
தேனீர் பருக நான் அ‌ழைக்க
‌வேண்டாம் என அவர் மறுக்க
சம்பிரதாய வார்த்தை பரிமாற்றங்கள் 
முடிந்தது...

கடைசியாய்
பார்த்த நாளிலிருந்து
இன்று வரையிலான சில சம்பவங்கள்
தொகுப்புகளை அவர் சொல்ல
கடமைக்காய் 

நான் கேட்டுக்கொண்டிருந்தேன்...

”அப்புறம்”
என்கிற வார்த்தையால்
அவர் விடைபெற
 

”சரி” என்கிற வார்த்தையால்
நானும் வழியனுப்புகி‌றேன்...
 

பள்ளி பருவத்தில்
படித்த நாள் முதல்
கல்லூரி காலத்தில்
கலந்த நாள் முதல்

ஆயிரம் தொடர்புகள்
எங்களுக்குள் இருந்தாலும்

தற்போது என் மனத்திரையில்
ஓடிக்‌கொண்டிருப்பது
அவசரத்திற்காய் வாங்கிய கடனை
அவர் மறந்து ‌போன 
சம்பவம் தான் ....!

1 comment:

  1. அன்பின் சௌந்தர்

    அருமையான கவிதை - என்ன செய்வது - பல நாள் கழித்துப் பார்க்கும் ந்ண்பர்கள் கதை பேசும் போது - வாங்கிய கடனை அவர் மறந்தது தான் நம்மை உறுத்தும். அவர் மறந்திருக்கலாம் - அல்லது பேச விருப்பமில்லாமல் இருந்திருக்க்லாம் - நாமும் அதனைக் கேட்க வெட்கப்பட்டு விட்டிருக்கலாம். மறந்து விட வேண்டியது தான். ஆமாம் கவிதை வரிகள் இயல்பாக இருக்கின்றன . கடன் வாங்கியது யார் எனச் சரியாகச் சொல்லப்பட வில்லை. உன் மனத்திரையில் ஓடுகிற சம்பவம். யர வாங்கிய கடனை அவர் மறந்தார் ? கவைதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...