கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 December, 2010

விருது நாயகன் நாஞ்சில் நாடன்

சாகத்மிய ஆகடமி விருதுப் பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு

கவிதை வீதியின் வாழ்த்துக்கள்...


 வாழ்க்கை குறிப்பு 

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 28, 1947 , வீர நாராயண மங்கலம் (கன்னியாக்குமாரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 
 இவர் எழுதிய  சூடியபூ சூடற்க என்ற சிறுகதை தெகுப்புக்கு 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர் எழுதிய பிற படைப்புகள் : 

புதினங்கள்

  • தலைகீழ் விகிதங்கள்
  • மாமிசப்படைப்பு
  • என்பிலதனை வெயில்காயும்
  • மிதவை
  • எட்டுதிக்கும் மதயானை
சிறுகதை தொகுதிகள்
  • தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
  • வாக்குப்பொறுக்கிகள்
  • உப்பு
  • பேய்க்கொட்டு
  • பிராந்து
  • சூடியப்பூ  சூடற்க..

கவிதை

  • மண்ணுள்ளீப்பாம்பு

கட்டுரைகள்

  • நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
  • நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
  • தீதும் நன்றும்


0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...