”இது அக்கிரமம்! அநியாயம்!”
“எதைச் சொல்ரீங்க?”
“இதோ பாருங்க சார்... இந்த ஆபீஸ்லே நடக்கற அலங்கோலத்தை! ஆனந்தமா சீட்லே உட்கார்ந்து தூங்கிட்டிருக்கார்!”
“நேத்து ராத்திரி ஏதாவது வேலை இருந்திருக்கும். ரொம்ப நேரம் முழிச்சிட்டிருந்திருப்பார்!”
“அதுவும் தப்புதானே!”
“என்ன சொல்றீங்க?”
“இரவுலே ரொம்ப நேரம் முழிச்சிட்டிருந்து டி.வி. பார்க்கிறது அல்லது வேறே ஏதாவது வேலைகளைக் கவனிக்கிறது இதுலாம் நல்லதில்லே!”
“எதனாலே அப்படி சொல்றீங்க!”
“தினசரி 4 மணி நேரம் தூக்கம் கெட்டுப் போச்சின்னு வச்சிக்குங்க. உடம்புல எதிர்ப்புச் சக்தி கணிசமா குறைஞ்சுடும்.”
“அது எப்படி உங்களுக்கு தெரியும்?”
“தூக்கம் கெட்டுப் போன சில ஆண்களின் உடம்பைப் பரிசோதனை பண்ணிப் பார்த்தாங்களாம். அவங்களுடைய எதிர்ப்புச் சக்தி 30 சதவீதம் குறைச்சலா இருந்ததாம். எதிர்ப்புச்சக்தி குறைஞ்சா தும்மல்லேயிருந்து ஆரம்பிச்சி எல்லாத் தொந்தரவும் வந்து சேரும்!”
“ஆகக் கூடித் தூக்கம் வந்தா தூங்கறது நல்லதுன்னு தானே சொல்றீங்க?”
“ஆமாங்க!”
“அப்புறம் பாருங்களேன். இவரு செய்யற அக்கிரமத்தை!”
“இவரு என்ன.. தூங்கத்தானே செய்யறாரு!”
“மேனஜர்கிட்டே புகார் பண்ணுங்க சார்!”
“முதல்லே முழிக்கட்டும். அப்புறம் புகார் பண்ணலாம்!”
“அப்படின்னா?”
“இவர்தான் மேனேஜர்!”
நன்றி: தென்கச்சி கோ. சுவாமிநாதன்
எல்லாம் சரிதான் தென்கச்சி என்ன சிரிக்கவேமாட்டாரா?
ReplyDelete