“ஐயா..! உங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவராத் தெரியுது!”
“என்னப்பா சொல்றே?”
“உங்ககிட்டே கொஞ்சம் மனம் விட்டு அழணும் போல இருக்கு!”
“மனசுல ஏதாவது கவலையா?”
“ஆமாங்க... கல்லூரியிலே எங்க பேராசிரியர் என்னைக் கண்ணாபின்னான்னு திட்டிப்புட்டார்...!”
“எதுக்காகத் திட்டினார்?”
“தண்ணி போட்டுக்கிட்டு வகுப்புக்கு வரப்படாதுன்னு சொல்லி திட்டிப்புட்டார்...?
'மதுப்பழக்கம் படிப்புத் திறனை பாதிக்கும்... அது தெரியும் உனக்கு...?”
அப்படியா சொல்றீங்க..”
“கொஞ்ச காலத்துக்கு முன்னாடி அமெரிக்காவுலே ஒரு கணக்கெடுப்பு நடத்தினாங்க. அதுலேருந்து என்ன தெரிய வந்ததுன்னா... ரொம்ப மோசமா மதிப்பெண் எடுத்திருந்த மாணவர்கள் தாங்கள் வாரத்துலே 15 தடவை மது அருந்தியதாத் தெரிவிச்சாங்களாம்..! சுமாரான அளவுக்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வாரத்திற்கு 7 முறை மது அருந்தியதாக சொல்லியிருக்காங்க...! அதைவிட கொஞ்சம் அதிகமா மதிப்பெண் பெற்றவங்க வாரத்துல 4 தடவை மது சாப்பிட்டவங்களாம்! ஆக... மது குறையக் குறைய மதிப்பெண் அதிகமாகுது..!”
“நீங்க சொல்றது...?”
“உண்மைதான் ! மது அருந்தும் பழக்கத்தாலே ஒழுங்கீனம் அதிகமாகுது. மோதல் நடக்குது... ஞாபக மறதி பெருகுது.. படிப்பு திறன் குறையுது..!”
“ஐயா.. இப்பத்தான் எனக்குப் புரியது. ஏன் எங்க வாத்தியார் என்னைத் திட்டினார்-ங்கிறது! அப்போ போதையிலே இருந்தேன். அதுதான் பேசாமே வந்துட்டேன். இப்போ கொஞ்சம் தெளிஞ்சிருக்கேன். அதனாலே...!”
“என்ன செய்யப் போறே...!”
“காலையிலே என்னைத் திட்டின எங்க வாத்தியார்கிட்டே இப்ப போயி கால்லே விழுந்து மன்னிப்புக் கேட்கப் போறேன்..!”
“என்னன்னு..?”
“இனிமே நான் திருந்திட்டேன் சார், அப்படின்னு...!”
“அடேய்! நல்லா பாரு்டா.. பாவி...! நான்தான்டா உன் வாத்தியார்...!”
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்
nice one. wishes !!
ReplyDelete