“வீட்டுலே மனைவி தொந்தரவு தாங்க முடியலே சார்!”
“மிக்சி ஒண்ணு வேணுமாம்....ஒரே பிடிவாதம்..!”
“அது தேவைதானே... வாங்கிக் கொடுங்க!”
“பேசாமே தென்கொரியாவுலே பொறந்திருக்கலாம்.”
“என்ன சொல்றீங்க?”
“அங்கே கியூன்னியா-ங்கறது ஒரு மலைப்பகுதி... கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரம்... அங்கே இருக்கிறது. நூறு குடும்பம்... அந்த ஊர்லே அடுப்பே பத்த வைக்கிறதில்லையாம்!”
“அப்படினான...?”
“அங்கே சமையலே கிடையாது... பச்சையாவே சாப்பிடராங்க.. பச்சை காய்கறிகள்... கீரைகள்... பழங்கள்... இதுதான் ஆகாரம். மூணு வேளையும் இதுதான் சாப்பாடு... எந்த வீட்டுலேயும் அடுப்பே கிடையாது...!”
“ஆச்சரியமாத்தான் இருக்கு..!”
“அந்த ஊர்லே அடுப்பு கூட பத்த வைக்கிறதில்லே-ங்கறதுனாலே புகைக்கே வழியில்லே... சுத்தமான காற்றை சுவாசிக்கிறாங்க... இயற்கை தருகிறதை அப்படியே சாப்பிடறதுனாலே எந்த நோயும் வர்றதில்லே... சின்ன தலைவலி கூட யார்க்கும் வந்ததில்லையாம்... எல்லோருமே ஆரோக்கியமா வாழறாங்களாம்... 90 வயசு... 100 வயசு ஆசாமியள்லாம் அங்கே சர்வ சாதாரணம்..!”
“நாம கூட அப்படி சாப்பிட ஆரம்பிச்சா நல்லதுதான்..”
“நல்லதுதான்.. இருந்தாலும் என்னாலே அது முடியாது... மனைவியை சமாதானப்படுத்தறது ரொம்ப கஷ்டம்! மிக்சி தொந்தரவே ரொம்ப பெரிசா இருக்கு!”
“நான் உங்களை மாதிரி இல்லீங்க!”
“அப்படிங்களா?”
“என் மனைவி இது மாதிரி சமையல் சம்பந்தமா எதையும் கேட்டு தொந்தரவு பண்றதுக்கு நான் இடம் கொடுக்கவே மாட்டேன்!”
“அதுக்கு என்ன செய்வீங்க...?”
“நானே சமைச்சுடுவேன்...!”
நன்றி தென்கச்சியார்
0 comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!