வெயில் தனிந்த ஒரு
கோடைக்கால இரவு...!
கோடைக்கால இரவு...!
உயிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம்
மூச்சை நிறுத்திக் கொண்டது..
வீடெல்லாம் இருட்டு...
வீதியெல்லாம் கருமை...
நிஜம் தந்த இருட்டை யாவரும்
விளக்கு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர்...
அதோ... இருட்டில் தான்
முழுமையாய் முகம் காட்டுகிறது
பிரபஞ்சம்...
விளக்குகள் இல்லாத இரவில்
விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..
பசும்மரங்கள் பூக்களையும்சேர்த்து
வண்ணங்களை இழந்து காட்சி அளிக்கிறது..
தென்னையும் பனையும்
விண்வெளியில் வரைந்த ஓவியங்களாய்..
ஜாதிகளையும்.. மதங்களையும்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
இருட்டு ஒன்றினைக்கிறது..
ஆதாம் ஏவாளுக்கு பிறகு
அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...
எலலோரும் விளக்கைத் தேடுகிறார்கள்
வெளிச்சம் பெற..
நான் இருட்டைத் தேடுகிறேன்
மோட்சம் பெற...
எண்ணெய் குடித்து
உயிர் துடிக்கிறது விளக்கு...
தற்போது
போலிகளாயின நிஜங்கள்...
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல கவிதை
ரொம்ப புடிச்சிருக்கு.
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com