உணவைத்தேடி உழலுகின்ற வாழ்க்கை
இன்னும் இருக்கிறது இங்கு...!
இன்னும் இருக்கிறது இங்கு...!
எச்சங்களிலும் மிச்சங்களிலும்
தொலைத்துவிட்ட நிம்மதியை
கிளறிக்கொண்டிருக்கும் மனிதப் பட்சிகள்
ஏராளம் ஏராளம்...
தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
இன்னும் தீர்ந்தப்பாடில்லை
நம் தேசத்தில்...
தற்போதைக்கு...
இரவலாய் கிடைத்த அரிசியை
கொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...
கொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...
ஈர விறகை பற்ற வைக்க
ஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்...
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்...
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...!
நம் நாட்டில் பசிப்பிணி மருத்துவர்கள் சுற்றுலா போய்விட்டார்கள் நண்பா.
ReplyDeleteஇப்போது இருக்கும் வள்ளல்கள் எல்லாம்
தொலைக்காட்சியிலும் அதன் செய்திகளிலும்
திரைப்படங்களிலும் தான் கொடை கொடுக்கிறார்கள்.
சமூக அவலத்தை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.
ஏழ்மையின் உச்சத்தை யாராலும் இவ்வளவு எளிமையாக சொல்லுவது கணினமே..
ReplyDeleteபாராட்டுகள் சகோ..
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான
கவிதை
கொடிது கொடிது இளமையில் வறுமை....கவிதை கலங்க வைக்குதுய்யா!
ReplyDeleteகடைசி பத்தி கலங்க வைக்கிறது
ReplyDeleteஉண்மை சுடுகிறது.
ReplyDeleteவறுமையை, வாழ்க்கையை சொன்ன கதை.
ReplyDeleteவறுமையின் உச்சம் உங்கள் கவிதையில்...
ReplyDelete//தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
ReplyDeleteஇன்னும் தீர்ந்தப்பாடில்லை
நம் தேசத்தில்...//
இது எனக்குப் புரியவில்லை. சற்று விளக்க முடியுமா???
//ஈர விறகை பற்ற வைக்க
ReplyDeleteஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்...//
நச் வரிகள்.
/////////
ReplyDeleteஇந்திரா said... [Reply to comment]
//தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
இன்னும் தீர்ந்தப்பாடில்லை
நம் தேசத்தில்...//
///////////
அரிசியை கடன்வாங்கி பார்த்திருப்போம்
கிராமங்களில் தீப்பெட்டிக்கூட இல்லாதவர்கள் பக்கத்து வீட்டில் எரியும் அடுப்பிலிருந்து தீயை கொண்டுவாருவார்கள்...
அப்படி ஒரு அர்த்தத்திலும்..
சமைப்பதற்க்கான பொருட்கள் இருந்தால்தான் அடுப்பு பற்றவைக்கமுடியும் ஆனால் உணவு சமைக்க அரிசியில்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய அல்லது யாசகம் கேட்க வேண்டிய சூழல் இருக்கிறது...
அப்படி யாசகம் பெற்று பொருட்களை வாங்கியப்பின் தான் அடுப்பு மூட்ட செய்வார்கள்....
பொருளை கடன் வாங்கும் தேசம் என்று சொல்லவும்.. அல்லது பொருள் வாங்கினால் எரியும் அடுப்பை பொருள்படுத்தவும்
தீயை கடன்வாங்கும் அடுப்புகள் என்று குறிப்பிட்டுள்ளேன்...
எறிந்து கொண்டிருக்கும் மனங்கள் பொறுத்திருப்பது
ReplyDeleteபொறுமை இல்லை,
வெடிக்கும் பொழுது
பட்டாசாய் இராமல்
எரிமலையாய் மாறுவதர்க்கே..
நல்லதொரு விளக்கம்.
ReplyDeleteநன்றி.
பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.
அருமை.
ReplyDeleteஎச்சங்களிலும் மிச்சங்களிலும்
ReplyDeleteதொலைத்துவிட்ட நிம்மதியை
கிளறிக்கொண்டிருக்கும் மனிதப் பட்சிகள்
ஏராளம் ஏராளம்...
வறுமையின் உச்சத்தை விளக்கிய
கவிதை வரிகள் அருமை
எரிந்து விடாதோ...?
ReplyDeleteஎன் கவிதை தாள்...//
செம டச்சிங்கான வரிகள்...!
கவிதை கண் கலங்க வச்சிருச்சே மக்கா...
ReplyDeleteமிகவும் அருமை ...!
ReplyDeleteஅருமையான படைப்பு. . .சகா. . .
ReplyDelete//தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
ReplyDeleteஇன்னும் தீர்ந்தப்பாடில்லை
நம் தேசத்தில்...//
படித்ததும் மனம் எழுந்து கிட்ட ஆரம்பித்தது.
பிணிக்கு மருந்துண்டு
பசிப்பிணிக்கு மருந்துண்டா??
ஏழ்மையின் உச்சம் பசிக்கொடுமை.
களையவேண்டும்.
கவிதை போற்றுதற்குரியது.
//
ReplyDeleteதற்போதைக்கு...
இரவலாய் கிடைத்த அரிசியை
கொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...
ஈர விறகை பற்ற வைக்க
ஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்.///
நெஞ்சை தொட்ட வரிகள்.நாங்களும் எங்கள் ஊரில் இதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம் சகோ
கலங்க வைத்த கவிதை
ReplyDeleteகலங்க வைத்த கவிதை.
ReplyDeleteஇதயம் கனக்கிறது. வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை,
ReplyDeleteஈர விறகை பற்ற வைக்க
ReplyDeleteஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்...:///
அருமையான கவிதைங்க! வாழ்த்துக்கள்!
மீசைக்கவியின் சினம் வார்த்தைகளில் தெரிக்கிறது. தரணியை எரிக்காமல் தாளினை எரித்துவிட்டீர்கள்.
ReplyDelete//ஈர விறகை பற்ற வைக்க
ReplyDeleteஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்.//
என்ன சொல்லிப் பாராட்ட?
நிதர்சனமான உண்மை
ReplyDeleteஅவலத்தின் உச்சம்!
ReplyDeleteஅறிவிக்கும் அழகிய கவிதை
புலவர் சா இராமாநுசம்
உண்மை உண்மையிலேயே சுடுகிறது... இதுபோன்ற அவலங்கள் இன்னும் பல இடங்களில் இருக்கின்றன.... வறுமையை வார்த்தைகளிலேயே வடித்து விட்டீர்கள் மிகவும் அருமை
ReplyDeleteஒருவருக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை எரித்திடுவோம் என்றான் பாரதி.
ReplyDeleteஆனால் இன்று பல வீடுகளில் அடுப்புக்கு பதில் அவர்களின் அடிவயிறு மட்டும் தான் எரிகிறது.. பசியால்..
கவிதைக்கு வாழ்த்துகள் நண்பரே...
அருமை.. அருமை
ReplyDeleteநல்ல கருப்பொருள், அருமையான சொல்லாட்சி, அணைந்துவிட்ட தீச்சாம்பலின் கீழ் அணையாத கனல் போல் அடக்கமாக ஒரு அடங்கா கோபம், வாழ்க !
ReplyDeleteமரபுவழி வடிவக் கவிதைகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் !
"அந்த ஏழை உதடுகளுக்காக
ReplyDeleteஎரிந்து விடாதோ...?
என் கவிதை தாள்..."அருமை அன்பரே !
//தீயைக் கடன் வாங்கும் அடுப்புகள்// எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள்! மூன்று வேளையும் தொடர்ந்து உணவு சமைத்தால் அடுப்பு ஏன் அணைந்துபோகிறது? கனன்றுகொண்டே இருக்குமே நீறு பூத்தாகிலும். பசிக்கொடுமையைப் பறைசாற்றும் வரிகள் ஒவ்வொன்றும் பதறவைக்கிறது மனத்தை! அதிலும் கடைசி பத்தி இன்னும் நெகிழவைக்கிறது. மனம் தொட்ட கவிதை.
ReplyDeleteஎவ்வளவு முயன்றாலும் இது போன்ற அழுத்தமான கருத்துக்களை உமிழும் வார்த்தைகளால் என்னால் ஒரு கவிதை கூட எழுத முடியாது.
ReplyDeleteமிக மிக சிறப்பு !!! வாழ்த்துக்கள்
மனதை அழுத்தும் வரிகள்..
ReplyDelete//உணவைத்தேடி உழலுகின்ற வாழ்க்கை
இன்னும் இருக்கிறது இங்கு...!//
உண்மை தான்.. ஆனால், உணவை வீணாக்குபவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்!