மக்களிடம் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, அரசு "கேபிள் டிவி' சேவை இன்று (02-09-2011) துவக்கப்படுகிறது. தற்போதுள்ள இணைப்புகளிலேயே, அரசு கேபிள் இணைப்பில் உள்ள "டிவி' சேனல்களை பார்க்க முடியும். முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் இன்று துவக்கி வைக்கிறார்.
முந்தைய ஆட்சியில், அரசு "கேபிள் டிவி' நிறுவனம், ஆளுங்கட்சியினரின் திடீர் தலையீடு காரணமாக, வெறும் 432 இணைப்புகளாக குறைக்கப்பட்டது. பின், அந்த நிறுவனமே முடக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கேபிள் கார்ப்பரேஷனுக்கு தனியாக தலைவரும், நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே, தஞ்சை, நெல்லை, கோவை மற்றும் வேலூரில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன.
மீதமுள்ள மாவட்டங்களிலும், "கேபிள் டிவி' சேவையை துவங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு "கேபிள் டிவி'யில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களில், 34 ஆயிரத்து 344 ஆபரேட்டர்கள், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.
அரசு கேபிள் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கேபிள்ஆபரேட்டர்கள் மூலம், சந்தாதாரர்களிடம் மாதச் சந்தாவாக ஒரு இணைப்புக்கு 70 ரூபாய், கேபிள் ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இதில், ஒரு இணைப்புக்கு 20 ரூபாயை, கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து அரசு "கேபிள் டிவி' நிறுவனம் வசூலிக்கும். எனவே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அரசு "கேபிள் டிவி' இணைப்புகள் இன்று முதல் 24 மணிநேர தடையற்ற ஒளிபரப்பு சேவையை வழங்க உள்ளன.
இதற்கான துவக்க நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. அரசு கேபிள் ஒளிபரப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12.10 மணிக்கு, வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில், வேலூர் மையத்திலும் விழா நடக்கிறது. அதில், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சேவையை துவக்கி வைத்து, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது சந்தாதாரர்களுக்கு, ஒளிபரப்பை வழங்குகின்றனர்.
அதேபோல, மற்ற மாவட்டங்களிலும் கேபிள் சேவையை அந்தந்த ஆபரேட்டர்கள் வழங்குகின்றனர். கட்டண சேனல்களாக உள்ள, "சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, டிஸ்கவரி தமிழ்' போன்ற சேனல்கள் முதலில் இடம்பெறாது. இலவச சேனல்கள் மட்டுமே இன்று ஒளி பரப்பப்படும். கட்டணச் சேனல்களின் கட்டணத்தை முடிவு செய்த பின், அவற்றின் ஒளிபரப்பு வழங்கப்படும். மேலும், உள்ளூர்சேனல்கள் இதனால் சற்று சுதந்திரமாக முறையான வரன்முறைகளுடன் ஒளிபரப்பாகும் சூழ்நிலை ஏற்படும்.அரசு "கேபிள் டிவி' செயலாக்கம் பல்வேறு மாவட்டங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வரவேற்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் நன்றாக முறைப்படுத்தி சரியான முறையில் வழிவகைச்செய்தால் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்... தனிப்பட்ட டிவிக்களின் வருமானம் இதன் மூலம் நிறுத்தப்படும்.
ஹிஹி ஒரே ஜாலி!
ReplyDeleteஅரசின் திட்டங்கள் அனைத்தும் அருமையாகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது. செயல்படுத்தும் ஆப்பரேட்டர்கள் அராஜகம் செய்யாமலிருக்க வேண்டுமே.அதை முறையாக மக்களுக்கு கிடைக்கச்செய்யாமல் காழ்ப்புணர்சியில் சேவையை தரமாக வழங்காமல் அரசின் மீதே பழிசுமத்துவார்கள் பாருங்கள்.
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்தாச்சு .
ReplyDeleteராஜா கண்ணு உன் பதிவுக்கு திரும்பி வந்து ஓட்டு போட்ருக்கேன்...நீயும் கருனும் இன்னும் என் (yesterday!)பதிவுக்கு Tamil manam ஓட்டு போடல்ல ஞாபகம் இருக்கட்டும் ஹிஹி!
ReplyDeleteசெயல்பாடு எப்படி இருக்குன்னு பாப்போம்!
ReplyDeleteநினைத்ததை முடிப்பவர் ஜெயலலிதா.
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஇருங்க படிச்சிட்டு வாரேன்,.
சன்னுக்கு ஆப்பா டண்டணா டண் ....
ReplyDeleteஇன்று என் கடையில்-(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்-
http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html
பாவம்யா தாத்தா குடும்பம் செய்த வினைக்கு எல்லாம் சீரழியுது அவர் குடும்பம் ஜயகோ.......
ReplyDeleteகேபிள் டீவி பாவனையாளர்களுக்கேற்ற அருமையான,
ReplyDeleteஅனைவரும் சம அளவில் பயன்பெறுவதற்கேற்ற திட்டம்.
அம்மாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
ரைட்டு!
ReplyDeleteதமிழ்மணம் 6
ReplyDeleteநல்லதொரு செயல் ஜெ வுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎதோ நல்லது நடந்தா சரி.
ReplyDeleteகொள்ளையடித்தோர் கொஞ்சம் ஒதுங்கி நிற்கட்டும்....
ReplyDeleteஅவசரப் பட நான் தயாரில்லை..
ReplyDeleteநல்ல செய்தி
ReplyDeleteநல்லா நடந்தா நல்லதே!
ஓட்டு,எட்டு
புலவர் சா இராமாநுசம்
ஜானி ஜானி எஸ் அம்மா..
ReplyDeleteபிரைவேட் கேபிள் நோ அம்மா
.
.
.
.
சூப்பர் ஆப்பு..
கொஞ்ச்மிருங்க படிச்சிட்டு வாறன்
ReplyDeleteஇதனால் அம்மாவிற்கும் சில நன்மைகள் இருந்தாலும் மக்களிற்கும் ஜாலிதான் இனிமேல் இன்னமும் ஜாஸ்தி ஜனங்க TV முன்னாடி உட்கார்ந்திடுவாங்க
ReplyDeleteஅரசு டி.வி.வெற்றி பெற வாழ்த்துகள்!
ReplyDeleteஆப்பு ..!
ReplyDeleteசன் டி.வி
ReplyDeleteஇதுவரை
டன் டனா டன்
இனிமேல்... ?
அரசு கேபிளுக்கு நன்றி..
நட்புடன்
சம்பத்குமார்
டண் டனா டண்ணுக்கு இனிமேல் டண்டணக்கா தான், போடு,
ReplyDeleteஎன்ன ஆட்டம் போடுறானுங்க தெரியுமா? கலாநிதி ஒழிக...
//விக்கியுலகம் said...
ReplyDeleteராஜா கண்ணு உன் பதிவுக்கு திரும்பி வந்து ஓட்டு போட்ருக்கேன்...நீயும் கருனும் இன்னும் என் (yesterday!)பதிவுக்கு Tamil manam ஓட்டு போடல்ல ஞாபகம் இருக்கட்டும் ஹிஹி!//
கொடுமை..கொடுமை கொடுத்ததை எல்லாம் சொல்லி காண்பிக்கின்றிர்களே இது தமிழனத்திற்கே அவமானம்.
(ஒரு மூனு நாளைக்கு முன்பு நானும் உங்களுக்கு தமிழ் மணம் ஓட்டுப் போட்டேன் அதற்கு மறு ஓட்டு ஒன்னு பாக்கி இருக்கு என்பதை அய்யா விக்கி அவர்களுக்கு ஞாபக படுத்திக் கொள்ள விரும்புகிறேன்)
என்னது சன்னுக்கு ஆப்பா!!!
ReplyDeleteஅடித்த கொள்ளை கொஞ்சமா நஞ்சமா....சபாஷ் சரியான போட்டி.
தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு என்பதை தாழ்மையுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் காரணம் அய்யா விக்கி அவர்களுக்கு டிமிக்கி கொடுத்த மாதிரி எனக்கும் கொடுத்த விடக்கூடாது பாருங்கள் அதுக்குத்தான்.
கேபிள் டிவின்னா என்னங்க:)
ReplyDeleteகிழிஞ்சுது போ!!!அப்போ ஆப்பு தயாராகிட்டுன்னு சொல்றீங்க!!
ReplyDeleteவரட்டும் அமோகமாக வரவேற்ப்போம்
ReplyDeleteஅம்மாவின் அதிரடி ஆரம்பம்.
ReplyDeleteஅம்மாவின் அதிரடி ஆரம்பம்.
ReplyDeleteஎன்னதான் நடக்குது பார்ப்போம்
ReplyDeleteok right
ReplyDeleteஇது சன் டிவி க்கு ஜெயா செய்த உதவி
ReplyDeleteமக்களுக்கு ஐம்பது ருபாய் மிச்சம் என்று கூறி யாரும் பார்க்க முடியாத சேனல்கள் யாரும் பார்க்க மாட்டாங்க சார்
இதனால் இன்னும் சன் டைரக்ட் பாக்ஸ் அதிகம் விற்கும்
ஹான்ஸ்ராஜ் அவர்களை கைது செய்து சன் டிவி க்கு உதவி செய்த ஜெயா
இப்போ அரசு கேபிள் ஆரம்பித்து இன்னும் சன் டிவி மீது அதிகம் ஆர்வம வர வைத்து விட்டார்
எப்படியோ இந்த உருப்படாத சேனல் பார்ப்பதை விட
ஐம்பது ருபாய் அதிகம் ஆனால் கூட பரவாயில்லை பெஸ்ட் சன் டைரக்ட் மட்டுமே
இன்னும் நன்றாக முறைப்படுத்தி சரியான முறையில் வழிவகைச்செய்தால் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்... தனிப்பட்ட டிவிக்களின் வருமானம் இதன் மூலம் நிறுத்தப்படும்.
ReplyDeleteஉண்மைதான் நண்பா.
எது எப்படியோ நண்பா...
ReplyDeleteஇந்த தொடர் நாடகங்களிடமிருந்து
இந்த சமூகம் மீண்டால் மகிழ்ச்சிதான்!!!!!