கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 September, 2011

அந்த இரண்டையும் கொடுக்கிறது அவள் பார்வை..



ன் கண்களிலும் இருக்கிறது
புவிஈர்ப்பு வி‌சை...
அதனால்தான்
சுற்றிக்கொண்டு இருக்கிறேன் உன்னையே...!
கவ வீதி
போர்வாள்தான் கூர்மையானது
என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உன் விழிக்கூர்மையால் காயப்படாதவர்கள்....


மின்னலை நேரடியாக பார்க்கக்கூடாது
என்று எனக்கு தெரியும்...
அதனால்தான் உன் கண்களை பார்க்க பயமாகஇருக்கிறது எனக்கு.... 

kavithaiveedhi.blogspot.com
தாய்மொழியை  வைத்துக்கொண்டு
வார்த்தைகளுக்கு ஏனடி வஞ்சனை...

மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
விழிகளால் பேசினால் என்ன செய்ய...
அந்தரங்கம் அந்தரங்கம் அந்தரங்கம்
ரு வார்த்தைக்கு
ஒரு பொருள்
ஒரு பார்வைக்கு...?

காயப்படுத்தவும்
அதற்கு மருந்திடவும்....


ரணப்படுத்தவும் 

அதற்குபின் உயிரூட்டவும்....

போவென்று சொல்லவும்
அதன்பின் வாவென்றழைக்கவும்....
உன் பார்வையையே பயன்படுத்துகிறாய்...

டி..பெண்‌ணே..
உன்கண்களால் மட்டுமே முடிகிறது...

காதல் எனும் நோய் கொடுக்கவும்
அதை காதல் கொண்டே மருந்திடவும்...!!



மையக்குறள்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

(குறிப்பறிதல் / களவியல் / குறள் 1091)

பொருள் :
மைதீட்டிய அவள் கண்களில் இரண்டுவகை பார்வைகள் உள்ளன. ஒன்று காதல் நோய்தருவது, மற்றொன்று அந்நோயை தீர்க்கும் மருந்து.


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

49 comments:

  1. அருமை அருமை
    பார்வையை புவி ஈர்ப்பு விசைக்கு ஒப்பிட்டது
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. கவிஞ்சருக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //உன் கண்களிலும் இருக்கிறது
    புவிஈர்ப்பு வி‌சை...
    அதனால்தான்
    சுற்றிக்கொண்டு இருக்கிறேன் உன்னையே...!//

    புவியீர்ப்பு விசையா அல்ல விழியீர்ப்பு விசையா? #டவுட்டு..
    அருமையான வரிகள்...

    ReplyDelete
  4. சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அருமையான வரிகள்
    அருமையான கவிதை

    ReplyDelete
  6. விழி ஈர்ப்பு விசையில் சிக்கீட்டீங்களாக்கும்?

    ReplyDelete
  7. ///உன் கண்களிலும் இருக்கிறது
    புவிஈர்ப்பு வி‌சை...
    அதனால்தான்
    சுற்றிக்கொண்டு இருக்கிறேன் உன்னையே...!///

    புவியீர்ப்பு விசை என்றபின்...
    ஏன் சுற்றிக்கொண்டு....
    அவள் மடியில் தஞ்சம்
    அடைந்து விடவேண்டியதுதானே....


    //போர்வாள்தான் கூர்மையானது
    என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்
    உன் விழிக்கூர்மையால் காயப்படாதவர்கள்....///

    போர்வாளின் கூர்மைகூட
    மழுங்கிவிடலாம்...
    இந்த ஏவாளின் கூர்மை
    ஓர்நாளும் மழுங்கிவிடாது

    //மின்னலை நேரடியாக பார்க்கக்கூடாது
    என்று எனக்கு தெரியும்...
    அதனால்தான் உன் கண்களை
    பார்க்க பயமாகஇருக்கிறது எனக்கு.... ////

    ஆமாம்... வெள்ளை நிற விழியில்
    லேசான செந்நிறத்தில் படர்ந்திருக்கின்றன
    மின்னலின் கிளைப்போல சிறு கோடுகள்...


    ////தாய்மொழியை வைத்துக்கொண்டு
    வார்த்தைகளுக்கு ஏனடி வஞ்சனை...
    மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
    விழிகளால் பேசினால் என்ன செய்ய..//

    மொழி பாஷையில் சொல்லமுடியாதவை யாவும்
    என் விழி பாஷையில் சொல்கிறேன்..

    புரிந்துகொள்... புரியாமல் ''கொள்ளாதே''
    .
    //அந்தரங்கம் அந்தரங்கம் அந்தரங்கம்
    ஒரு வார்த்தைக்கு
    ஒரு பொருள்
    ஒரு பார்வைக்கு...?///

    ஒரு வார்த்தைக்கு ஒரு பொருள்தானா...

    ஒரு பார்வைக்கு....

    புரிந்தவனுக்கு ஒரே அர்த்தம்
    புரியாதவனுக்கு பல அர்த்தங்கள்...


    ///காயப்படுத்தவும்
    அதற்க்கு மருந்திடவும்....

    மரணப்படுத்தவும்
    அதற்க்குபின் உயிருட்டவும்....

    போவென்று சோல்லவும்
    அதன்பின் வாவென்றழைக்கவும்....
    உன் பார்வையையே பயன்படுத்துகிறாய்...

    அடி..பெண்‌ணே..
    உன்கண்களால் மட்டுமே முடிகிறது...
    காதல் எனும் நோய் கொடுக்கவும்
    அதை காதல் கொண்டே மருந்திடவும்...!!//

    உன் கருவிழிகள் பேசும்
    அசைவுகளுக்கு முன்னால்
    நான் எழுதும் கவிதைகள்யாவும்
    மண்டியிட்டு தோற்கின்றன

    ReplyDelete
  8. காதல் மானியாவா?

    ReplyDelete
  9. வரிகளுக்கேற்ற கண் தெரிவு சூப்பர்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  10. அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ .முடிந்தால் வாருங்கள் என்
    தளத்திற்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ஓட்டுக்கள் போட்டாச்சு ......

    ReplyDelete
  11. பாராட்டியிருக்கும் அனைவரும் கவிதையை படிச்சுட்டுதான் பாராட்டினாங்களா? # டவுட்டு

    ReplyDelete
  12. திருவள்ளுவர் எவ்வளவோ எழுதிட்டு போனார், அதெல்லாம் விட்டுட்டு.. இன்னும் தமிழ் சினிமா மாதிரி காதல் கருவையே எடுத்துக் கொண்டு எழுதுவது, கவிஞரே... ஆனாலும் அருமையான சொல்லாடல்

    ReplyDelete
  13. தாய்மொழியை வைத்துக்கொண்டு
    வார்த்தைகளுக்கு ஏனடி வஞ்சனை...
    மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
    விழிகளால் பேசினால் என்ன செய்ய..

    தாய்மொழியும் வாய்மொழியும் வசப்படாத கவிதை மொழிக்கு வாழ்த்துக்கள் ..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. நல்லா இருக்கு கவிதை

    சிம்ப்ளி சூப்பர் .....

    ReplyDelete
  15. அனைத்து வரிகளும் அருமை.

    ReplyDelete
  16. கற்பனைத் திறமை மிகுந்த
    கவிதை




    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ////////
    suryajeeva said... [Reply to comment]

    திருவள்ளுவர் எவ்வளவோ எழுதிட்டு போனார், அதெல்லாம் விட்டுட்டு.. இன்னும் தமிழ் சினிமா மாதிரி காதல் கருவையே எடுத்துக் கொண்டு எழுதுவது, கவிஞரே... ஆனாலும் அருமையான சொல்லாடல்

    /////////////

    காதலை மட்டுமல்ல அறத்திலும் பொருளிரும் கூட எழுதியிருக்கிறேன்..
    வாசியுங்கள் நண்பரே...

    மக்கட்பேரு...
    http://kavithaiveedhi.blogspot.com/2011/08/blog-post_29.html


    நட்பு..
    http://kavithaiveedhi.blogspot.com/2011/08/blog-post_03.html

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. கவிதை நல்லாயிருக்கு,ஆனால் முதல் கண் படம் பாக்க பயங்கரமா இருக்கே(எனக்கு மட்டும்தான் அப்படி தெரியுதோ)
    இரண்டு கண்ணுடைய இரண்டாவது படம் மிக அழகு.

    ReplyDelete
  19. ////////
    thirumathi bs sridhar said... [Reply to comment]

    கவிதை நல்லாயிருக்கு,ஆனால் முதல் கண் படம் பாக்க பயங்கரமா இருக்கே(எனக்கு மட்டும்தான் அப்படி தெரியுதோ)
    இரண்டு கண்ணுடைய இரண்டாவது படம் மிக அழகு.

    ///////////


    கொஞ்சம் ரொமான்ஸ்ஸா பார்த்தா நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்....

    ReplyDelete
  20. ////////
    thirumathi bs sridhar said... [Reply to comment]

    கவிதை நல்லாயிருக்கு,ஆனால் முதல் கண் படம் பாக்க பயங்கரமா இருக்கே(எனக்கு மட்டும்தான் அப்படி தெரியுதோ)
    இரண்டு கண்ணுடைய இரண்டாவது படம் மிக அழகு.

    ///////////


    கொஞ்சம் ரொமான்ஸ்ஸா பார்த்தா நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்....

    ReplyDelete
  21. வழிகளில் விழுந்துவிடீர்களோ. . .அருமையான வரிகள். . .

    ReplyDelete
  22. அருமையான காதல் கவிதை சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. உன் கண்களிலும் இருக்கிறது
    புவிஈர்ப்பு வி‌சை...
    அதனால்தான்
    சுற்றிக்கொண்டு இருக்கிறேன் உன்னையே...! ///////

    ஆஹா, தொடக்க வரியே அட்டகாசமா இருக்கு சார்!

    ReplyDelete
  24. வார்த்தை விளையாட்டு அருமை..

    ReplyDelete
  25. விழிவீச்சா? மொழிவீச்சா?.நல்ல கவிதை நண்பரே.வாழ்த்துக்கள்.அப்படியே நமது வீட்டுப்பக்கமும் வாருங்களேன்.

    ReplyDelete
  26. எலேய் என்னாச்சிலேய் அண்ணன் [[கரன்]] தம்பி ரெண்டுபேரும் இன்னைக்கு கவிதையா போட்டு அசத்துறீங்க...!!!

    ReplyDelete
  27. கவிதைக்கே கவிதை சூப்பர் மக்கா...!!!

    ReplyDelete
  28. ஹா,,ஹா..
    @மனோ...
    யாரு தம்பி.. யாரு அண்ணன் #டவுட்டு..

    ReplyDelete
  29. கவிதையும் கலக்கல்..
    அந்த குறள் க்கு அருமையாக பொருந்துகிறது..

    ReplyDelete
  30. அருமையான விளக்கம் நண்பா..

    வள்ளுவத்தை இவ்வளவு எளிமையாக சொல்லும் விதம் பாராட்டுக்குரியது..

    இன்றைய மாணவர்களுக்கு இந்த இடுகையைப் பாடமாக வைத்தால் கூட தரவு (நோட்சு) கேட்பார்கள் நண்பா..

    இதுதான் இன்றைய கல்வியின் நிலை..

    ReplyDelete
  31. தாய்மொழியை வைத்துக்கொண்டு
    வார்த்தைகளுக்கு ஏனடி வஞ்சனை...
    மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
    விழிகளால் பேசினால் என்ன செய்ய...

    மிகவும் அருமை
    இரசித்தேன்.

    ReplyDelete
  32. நல்ல அழகான கவிதை.
    மிகவும் ரசித்தேன்.

    பெண் விழிகளில் மாட்டினால் போச்சு.
    மூழ்கவும் முடியாமல் தப்பிக்கவும் முடியாமல் தத்தளிக்க வேண்டியது தான்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  33. ஒரு வாரமா ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் உங்களையல்ல உங்களின் அழகிய கவிதைகளை...ஹீ ஹீ

    ReplyDelete
  34. விழி பேசும் மொழிகளால்ஒரு கவிதை!
    அருமை!
    காக்க வைச்சு பதிவிட்டாலும் நல்ல விருந்துதான்!

    ReplyDelete
  35. //மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
    விழிகளால் பேசினால் என்ன செய்ய...//

    அந்த விழிகளைப் பார்த்தாலே எல்லாம் மறந்து போகுமே?பின் என் செய்ய!
    சூப்பர் சௌந்தர்.

    ReplyDelete
  36. SILENCE IS THE LANGUAGE OF SOUL

    கண்களின் வார்த்தைகள் புரியாதோ...வாய்மொழியைவிட காதலர்களுக்கு கண்கள்தான் அதிகம் பேசும் . இன்னொரு நல்ல முத்து தங்கள் மகுடத்தில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. கவிதை ,கவிதைக்கு ஏற்ற குறள் . அருமை

    ReplyDelete
  38. நல்லதொரு கவிதை வழங்கியமைக்கு நன்றி சகோ.

    TAMIL MANAM 18

    ReplyDelete
  39. களவியல் குறளுக்கு பொருள் சொல்லும் கவிதை. அருமை அருமை. காதல் என்னும் நோய் கொடுக்கவும் - அதனைக் காதல் கொண்டே குணப்படுத்துவதும் ...... தாடிக்காரன் பொல்லாதவன். நல்வாழ்த்துகள் - ந்டபுடன் சீனா.

    ReplyDelete
  40. சூப்பர். //கண்களால் மட்டுமே முடியும்.... கடைசி இரு வரிகள் மிக அருமை.

    ReplyDelete
  41. அந்த இரண்டையும் கொடுக்கிறது அவள் பார்வை..//

    ஆகா...தொக்கி நிற்கும் பொருளோடு தலைப்பினை வைத்திருக்கிறாரே கவிஞர்.

    ReplyDelete
  42. போர்வாள்தான் கூர்மையானது
    என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்
    உன் விழிக்கூர்மையால் காயப்படாதவர்கள்....//

    பின்னிட்டீங்க போங்க பாஸ்...

    அவள் விழிக் கூர்மையில் சிக்காதோர் இவ் உலகினில் இல்லை என்பதனை அழகிய உவமை அணி மூலம் வர்ணித்திருக்கிறீங்க.

    ReplyDelete
  43. இரு வேறு உணர்வுகளைத் தூண்டும் கண்கள் ப்ற்றிய பார்வைக் கவிதை மூலம் என் மனதையும் வசியம் செய்து விட்டீங்க.

    பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  44. அருமையான குறளும் அதற்கேற்றக் கவிதையும் அழகு.

    //தாய்மொழியை வைத்துக்கொண்டு
    வார்த்தைகளுக்கு ஏனடி வஞ்சனை...
    மொ‌ழிகளால் பேசினால் புரிந்துக் கொள்ளலாம்
    விழிகளால் பேசினால் என்ன செய்ய..//

    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் செளந்தர்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...