“நின்னுகிட்ட யோசனை செய்யறதுதான் நல்லதுன்னு சொல்றாங்க...!”
“கலிபோர்னியா பல்கலைக்கழகத்துலே உள்ள ஓர் ஆராய்ச்சியாளர் (Masx Vercryssen) அப்படி சொல்றார்..!”
“எப்படி..?”
“உட்கார்ந்து கொண்டு ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்கிறதைவிட நின்று கொண்டும், நடந்துக்கொண்டும், யோசித்தால் சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரமுடியும்ங்கறார்.. அவர்!”
”அவர் சோதனையெல்லாம் செய்து பார்த்துட்டு தான் அதைச் சொல்லியிருப்பார்..!”
“ஆமாம்..! குறிப்பா... கடுமையான சூழ்நிலையிலே மன இருக்கத்துடன் வேலை செய்கிறவர்கள் நின்று கொண்டு யோசித்தால் 5 முதல் 20 சதவீதம் சீக்கிரமா முடிவு எடுத்துடறாங்களாம்..!”
“ஆகக் கூடி... நாற்காலியிலே உட்கார்ந்துகிட்டு யோசிக்கிறதைவிட நடந்துகிட்டு யோசிக்கிறது நல்லதுங்கறீங்க..?”
“ஆமாம்..!”
“அதுக்காக இப்படி நடுரோட்டுலே நாலுபக்கமும் பஸ் லாரியெல்லாம் படுவேகத்துலே வந்துகிட்டிருக்கிற இந்த இடத்துலே நின்னுக்கிட்டா நீங்க யோசிக்கணும்..?”
“ஹி.. ஹி்... ! என்ன பண்றது? அவசரத்துலே வேறே இடம் கிடைக்கலே...!”
“சரி.. அப்படி என்னதான் யோசிக்கிறீங்க..?”
“பெரிய ஆஸ்பத்திரிக்கு உடனே போகணும். அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்..!”
“வேற ஒண்ணும் பண்ண வேணாம். இதே இடத்தில இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னுகிட்டிருங்க. யாராவது கொண்டுக்கிட்டுப் போய் சேர்த்துடுவாங்க...!” (நன்றி வாரம் ஒரு தகவல்)
எது எப்படியோ சரியான சிந்தனையுடன் சரியான கண்ணோட்டத்துடன் யோசிக்கும்போது ஒரு விஷயத்திற்கும் சரியான முடிவுகிட்டும். அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதான இருக்காது. பொருமையுடன் யோசிக்கும்போது மட்டுமே நல்ல தீர்வுகள் நமக்கு கிடைக்கின்றன.
அவசரத்தில் சில முடிவுகள் எடுத்துவிட்டு பின்பு வருந்துவதை விடுத்து முடிவுகள் எடுக்கும் போதே பொறுமையை கடைபிடித்தால் அந்த விஷயம் வெற்றியை சந்திக்கும்.
படிச்சி முடிச்சாச்சி நீங்க இப்ப என்ன யோசிக்கிறீங்கன்னு
நான் சொல்லட்டுமா....
கருத்து சொல்லலாம ... ஓட்டு போடலாமா... அப்படின்னுதானே...
கருத்து சொல்லலாம ... ஓட்டு போடலாமா... அப்படின்னுதானே...
எப்படியோ மக்கா யோசிச்சா சரி..பல பயலுக யோசிக்கிறதுனாங்கிறாய்ங்க
ReplyDeleteநாந்தான் முதலா.?
ReplyDeleteநீங்கதான் பர்ஸ்ட்டு ஜோசியரே...
ReplyDelete#சுகமா?
முடிவுக்காக யோசிக்கப்போய் மூட்டு வலி வந்திறபோது. . .(comedy). ஆனால் நம்மில் பலர் உரக்கத்திற்கு முன்பு தான், பல விஷயங்களையும் யோசிக்கின்றனர். . .
ReplyDeleteபடிச்சு முடிச்சு ஓட்டு மட்டும் போட்டுட்டேன்
ReplyDeleteநின்னாலும் சரி...
ReplyDeleteபடுத்தாலும் சரி
எப்படியோ
யோசிச்சா சரி தான்....
மாப்ள நான் உன்னைய ரெண்டு போடலாமான்னு யோசிக்கிறேன் ஹிஹி!
ReplyDeleteஎன்னது யோசிக்கனுமா அதுக்கு என்னவோ வேணும்னு சொல்லுவாங்களே?? தலையில தான் இருக்குமாம், அது பேர் கூட ரெண்டு எழுத்துதான் வரும் என்ன அதுன்னு தெரியலையே உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார். நான் எங்க ஊர் மளிகை கடையில இருக்கான்னு கேக்குறேன்.
ReplyDeleteநான் யோசிக்கவே இல்லை ரெண்டும் செஞ்சிட்டேன்..
ReplyDelete//
ReplyDeleteபடிச்சி முடிச்சாச்சி நீங்க இப்ப என்ன யோசிக்கிறீங்கன்னு
நான் சொல்லட்டுமா....
கருத்து சொல்லலாம ... ஓட்டு போடலாமா... அப்படின்னுதானே...
//
இல்லை கட்டிவச்சி அடிப்பதா ? ஓடவிட்டு அடிப்பாதா னு? haaa...haaa...haaa...haaa...
நல்ல யோசிகிரிங்க
ReplyDeleteதங்கம் வாங்கனும்னு முடிவெடுத்தா யோசிக்காமல் உடனே வாங்கிருங்க # ஹி ஹி நண்பன் சொன்னது.
ReplyDeleteஇது ஆராய்ச்சி இல்லை கொலைவெறி......
ReplyDeleteயோவ் நடுரோட்டுல நின்னது நீர்தானே...?? கருண் சொன்னார்...
ReplyDeleteஹா ஹா ஹா தகவல் நல்லா இருக்கு சௌந்தர் அண்ணே! இனிமே உக்காந்து யோசிக்க மாட்டேன்!
ReplyDeleteநல்ல பதிவு சௌந்தர்..
ReplyDeleteஇது டெம்ப்ளேட் கமெண்ட் ஆச்சே!?
என்ன கமெண்ட் - போடுறதுன்னு உக்காந்துக்கிட்டே யோசிச்சேன் ஒண்ணும் பிடி படலை.. நின்னுகிட்டே யோசிச்சேன் கமெண்ட் கெடச்சுடுச்சு..
இது ஒரு சிறந்த வழிமுறை. சொல்ல வேண்டிய கருத்தை, ஒரு சிறு கதை அல்லது நாடகம் மூலம் சொல்வது, அந்த கருத்தை எளிதில் கொண்டு சேர்க்கும். நன்றி நண்பரே.
ReplyDeleteம் ...
ReplyDeleteஅவசரத்தில் சில முடிவுகள் எடுத்துவிட்டு பின்பு வருந்துவதை விடுத்து முடிவுகள் எடுக்கும் போதே பொறுமையை கடைபிடித்தால் அந்த விஷயம் வெற்றியை சந்திக்கும்.
ReplyDeleteசரியாதான் சொன்னீங்க.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க
ReplyDeleteAama ...neenga eppadi ithai type
ReplyDeleteseitheeinga ?
Ukantha illai ninukitta ??
Ennaa yosichi thaane type
pannanum !!!!
கதைபோல கருத்தைச் சொன்னீர். நன்று! ஓட்டும் போட்டுட்டன்!
ReplyDeleteஇனி எப்படி யோசிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்....... அட நின்னுக்கிட்டுத்தான்.......
ReplyDeleteஅப்போ கக்கூஸ்ல உக்காந்து யோசிக்கிறவங்க என்ன பண்றது...?
ReplyDeleteசரிங்கோ
ReplyDeleteஇதை பதிவாக எழுதனும் என்று நீங்க எப்படி யோசிச்சிங்க..ஹி.ஹி.ஹி.ஹி....
ReplyDeleteஓட்டு போடலாம்னு பாத்தா இந்த 49 ஓ வை காணோம் நு யோசிச்சிகிட்டு இருக்கேன்..
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteயோசனை மச்சு வாங்குதாம்!
ReplyDeleteவசன உபயம்-பசங்க!திரைப்படம்.
வாக்குகளும், வருகையும்....
ReplyDeleteஇனிமே நின்னு யோசிப்பாங்க ளோன்னுதான் கேக்கணும்.!
ReplyDeleteஓ! யோசிப்பதிலும் பல விடயங்கள் இருக்கா!..நல்லது...யோசித்துப் பார்ப்போம்..
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteகருத்து சொல்றாதா - ஓட்டுப் போடறதா ? - நின்னு கிட்டே யோசீக்கறேன். ..... பாககலாம்
ReplyDeleteநின்னு.... உக்காந்து... படிச்சு... யோசிச்சாலும் பரிட்சையின்னா எல்லாம் மறந்துடுதே எப்படி
ReplyDelete(பொருமையுடன் யோசிக்கும்போது)
ReplyDeleteபொறுமையாக எழுதியிருந்தா
இப்பிடி ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம்
வராதுல்ல!எப்பூடி...
//////
ReplyDeleteசீனுவாசன்.கு said...
(பொருமையுடன் யோசிக்கும்போது)
பொறுமையாக எழுதியிருந்தா
இப்பிடி ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம்
வராதுல்ல!எப்பூடி.../
///////
ரைட்டு...