தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது. சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பஞ்சு அருணாச்சலம்.
விழாவில், பஞ்சு அருணாசலம் பேச்சு, திரையுலகினருக்கே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.
அவர் பேசுகையில், "முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் அல்லது சில லட்ச ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.
ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 200 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. இந்த போலித்தனமான வெற்றியும் வளர்ச்சியும் சினிமாவுக்கு உதவுமா?
இளையராஜா சம்பளம்
"அன்னக்கிளி" படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.
ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.
யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா... சினிமா எப்படி வளரும்?," என்றார்.
தயாரிப்பாளர்களை கரை சேர்ப்பேன்
படத்தின் இயக்குநர் ராம் ஷிவா பேசுகையில், "நான் சினிமாவில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். கதை, திறமை எல்லாம் இருந்தும் அதைக் காட்ட வழியின்றி தவித்தபோது, என் நண்பர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் படம் தயாரிக்க முன்வந்தார்கள்.
அவர்கள் என்னிடம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தனர். ரூ 25 லட்சம் தருகிறோம். மனைவி மக்களோடு ஊருக்குப்போ. பணத்தை திருப்பிக் கூட தர வேண்டாம். அல்லது ரூ 40 லட்சம் தருகிறோம், படம் பண்ணு என்றனர். அவர்களிடம், இன்னும் கொஞ்சம் மேலே பணம் போட்டு, நீங்களே தயாரிப்பாளராக இருங்கள். நான் ஒரு படம் செய்கிறேன். நிச்சயம் ஜெயித்துக் காட்டுகிறேன், என்றேன். நம்பி வந்தனர். நான் நேராக கேயாரிடம் அழைத்துப் போய் வழிகாட்டச் சொன்னேன். அவரது வழிகாட்டுதலில் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது.
என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார்.
நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.
பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.
என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார்.
நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.
பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
ReplyDeletewww.cineikons.com
பகீர் பகீர்னு ஒரு தகவலா இருக்கே...
ReplyDeleteappadiyaa?
ReplyDeleteசினிமாவை அழிக்க சினிமா கலைஞர்களே உறுதியாக உள்ளபோது யாரால் என்ன செய்ய முடியும்.
ReplyDeletethamilmanam 3 & all voted
ReplyDeletesuper details bro
ReplyDeleteகூத்தாடிகள் ரெண்டுபட்டா ஊருக்கு கொண்டாட்டம் ஹி ஹி இதெப்பிடி இருக்கு...
ReplyDeleteசினிமாவை நாம அழிக்கவேண்டாம் ஹா ஹா ஹா ஹா அவர்களே அழித்துவிடுவார்கள்....!
ReplyDeleteஇளையராஜா பணத்துக்காக இசை அமைப்பது இல்லை என்பது எல்லாரும் அறிந்ததே....!
ReplyDeleteஎன்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார். ///
ReplyDeleteகண்டிப்பாக சார்! இப்படி எல்லோரும் நெனைச்சாங்கன்னா, எல்லோருமே நலமா இருக்கலாம்!
வார்னர் பிரதர்ச்,பாரமவுண்ட் மாதிரி நிறுவனம் மாதிரி பாலிவுட்டிலும் UTV(?) போன்ற உலக மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வந்துள்ளன.இவை நிறுவன பிராண்ட் என்ற அடிப்படையில் நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.தமிழகத்திலும் ஏ.வி.எம் போன்ற நிறுவனங்கள் உள்ளன.ஆனால் தயாரிப்பாளர் சங்கமும்,நிறுவனங்களும் நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க தவறி விட்டன.
ReplyDeleteஇதில் வருமான வரி ஏமாற்றுதல்,கள்ளப்பணம் பாதி,வெள்ளைப்பணம் பாதியென்ற தகுடுதத்தங்கள் வேறு.
தென்னிந்தியாவில் தமிழகமே திரைப்பட துறையில் முன்ணணியில் இருக்கிறது.இந்த துறையை நம்பி லட்சக்கணக்கில் இருக்கும் திரைப்படத்துறை உழைப்பாளிகளின் வாழ்வையும் மனதில் கொண்டு நடிகர்கள் காற்றுல்ல போதே தூற்றிக்கொள்ளும் பேட்டா ஏற்றும் நிலையை தவிர்க்க வேண்டும்.
தொழிலாளர்கள் இன்னும் சொற்ப சம்பளம் தான் வாங்கி கொண்டு இருக்கின்றனர் என்பதை தெரிவிக்க மறந்து விட்டாரோ..
ReplyDeletelight boy
clap boy
crane boy
drivers
etc
டைட்டிலைப்பார்த்ததும் பயந்துட்டேன்
ReplyDeleteகோடிகளில் புரள்வார்கள் போலிருக்கே ))
ReplyDeleteஇவ்வளவு தானா .
ReplyDeleteநண்பர் சூர்யஜீவா சொன்னதுபோல
ReplyDeleteதுணை நடிகர்களும்
தொழில்நுட்ப வாதிகளும்
குறைந்த வருமானமே பெறுகின்றனர்....
அடேயப்பா இவ்வளவா வாங்குகிறார்கள்
ஒரு வரைமுறை வேண்டாமா?//////
ITHU VIJIY-KU PORUNTHUMA???
ReplyDeleteஇருக்கறதுலேயே செம வேலை சினிமாவில் ஹீரோ வேலதான் போல...
ReplyDeletepadhivulaga ramanaa
ReplyDeleteஉண்மையாவே தலை சுத்துது
ReplyDeleteபஞ்சு அருணாச்சலம் எப்படிப்பட்ட சினிமா தயாரிபாளர்..இவர் தாயாரித்த படங்கள் எல்லாம் மிகவும் நல்ல படங்கள்.....
இதெல்லாம் தெரிஞ்சும் நாம போஸ்டருக்கு பாலாபிஷேகம் பண்றோம்...
ReplyDeleteசே.குமார்
மனசு
கோடிக்கு எத்தன சைபர் ...
ReplyDelete''...MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசினிமாவை நாம அழிக்கவேண்டாம் ஹா ஹா ஹா ஹா அவர்களே அழித்துவிடுவார்கள்....!..''
I am accepting this also...
Vetha.Elangathilakam
''...MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசினிமாவை நாம அழிக்கவேண்டாம் ஹா ஹா ஹா ஹா அவர்களே அழித்துவிடுவார்கள்....!..''
I am accepting this also...
Vetha.Elangathilakam
"அன்னக்கிளி" படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.
ReplyDeleteசிறந்த கலைஞனுக்கு உள்ள நற்பண்பே இதுதான் .அதனால்த்தான் ஐயா கலை உலகத்தின் சிகரமாக நிற்கின்றார் .இதைவிட ஒரு மனுசனுக்கு என்னவேணும்?....வாழ்த்துக்கள் சகோ
இன்றைய தகவல் அருமை .ஓட்டெல்லாம் போட்டாச்சு .என்னையும் வந்து கவனியுங்க .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...............
ஊர்கோடி கண்டதுண்டு
ReplyDeleteதெருக்கோடி சென்றதுண்டு
பட்டியலைப் பார்த்துவிட்டு
பயந்துவிட்டேன் உண்மைஐயா
புலவர் சா இராமாநுசம்
ஒரு படம் வெற்றி படமா உருவாவதற்கு பலரும் காரணாமக உள்ளனர். . .தயாரிப்பாளர்களுக்குத் தான் அதில் பெரும் பங்கு இருக்கின்றது. . .
ReplyDelete