கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 September, 2011

கலைஞரை விட ராஜபக்சேவே மேல் - சீமான் ஆவேசம்...

தமிழர் விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
 
இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசரவசரமாக கடந்த 9 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான். மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை?  இவ்வாறு அவர் கூறினார்.

20 comments:

  1. நியாயமான கோவம்தான்

    ReplyDelete
  2. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்!:///

    மேல்’னு சொல்ல முடியாது!இருந்தாலும் ஓகே!

    ReplyDelete
  3. சட்டி நிறைய காலையில இட்லியை தின்னுட்டு போயி மதியம் சாப்பாட்டுக்கு முன்னரே உண்ணாவிரதத்தை முடித்த நாடகத்தை என்னான்னு சொல்றது???

    ReplyDelete
  4. உண்மையான கருத்துக்கள்

    ReplyDelete
  5. கலைஞர் தம் மக்கள் தானே முக்கியம். தமிழ் மக்கள் அள்ளவே.

    ReplyDelete
  6. சீமான் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை

    ReplyDelete
  7. ரெண்டுமே கெட்டதுதான் ஒன்னுக்கு ஒன்னு பொருத்தி பார்க்ககூடாது!!??

    ReplyDelete
  8. யாரோ சொன்னதாக சீமான் சொல்கின்றார்...எனக்கு என்னவோ அவர் அப்படி சொல்லி இருப்பார் என்று தோனவில்லை.சீமான் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது நிரூபனம் ஆகின்றது.

    ReplyDelete
  9. ஈழ மக்களுக்காக வார்த்தைகளில் கந்தகம் ஏற்ற தெரிந்த சீமான் என் தமிழக தமிழர்களின் ஒரு பிரச்சினைக்கும் மௌன விரதம் கடை பிடிக்கிறார் என்பது தான் புரியவில்லை..

    ReplyDelete
  10. இருவரும் ஒன்றுதான்.....

    ReplyDelete
  11. கருத்துக்கள் ஓகே... தமிழ்மணம் ஏழு நானே.

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  13. மீனவர்கள் பிரச்சனை தமிழன் என்பதால் தான் தலமை அதைப் பற்றி யோசிக்கவே மறுக்கின்றது. . .சீமானின் ஆதங்கம் உன்மை தான். . .

    ReplyDelete
  14. கோவம் நியாயமானதே மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .ஓட்டுப் போட்டுவிடேன் .முடிந்தால் வாருங்கள் சகோ என் தளத்திற்கும் ....

    ReplyDelete
  15. அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. உமக்கு வாழ்த்துகள்..எண்ணங்கள் நிறைவேற.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    தமிழ் மணம் ஒன்பது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...