ஒரு பெரிய குழப்பாமான சூழலில் தற்போது திமுக எதிக்கொண்டுள்ளது. ஆட்சியை காப்பாற்ற அல்லது அதை தக்கவைக்க கலைஞர் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எதிர்கொள்வார் ஆனால் அதை தக்க வைக்க தற்ப்போது எந்த ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் இதுவரை மேற்க்கொண்ட சாணக்கயத்தனத்திற்க்கான உதாரணங்கள்...
"மறைந்த பிரதமர் இந்திராவினாலேயே தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்காக தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்கிறார். "தி.மு.க.,வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது' என்றும் கூறுகிறார். அவர் எப்படி தி.மு.க.,வை இதுவரை காப்பாற்றினார் என்பதற்கு சில உதாரணங்கள்:
"இந்திராவை சேலை கட்டிய ஹிட்லர்' என, கூட்டத்திற்கு கூட்டம் வர்ணித்த கருணாநிதி, சர்க்காரியா கமிஷனை எதிர்கொள்ள, கூட்டணிக்கு அவர் காலில் விழுந்து, "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக' என, முழுக்கமிட்டு தி.மு.க.,வைக் காப்பாற்றினார்.
எம்.ஜி.ஆர்., மறைவு வரை, "கூடா நட்பு' காங்கிரசின் ஆதரவில் தி.மு.க.,வைத் தன் பக்கம் வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வை உடைத்து, அ.தி.மு.க., (ஜெ) என்றும் அ.தி.மு.க.,(ஜா) என்றும் நாமகரணம் சூட்டி மகிழ்ந்து காப்பாற்றிக் கொண்டார்.
அதற்குப் பின் மூப்பனாருடன் கைகோர்த்து, ஆட்சியைப் பிடித்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். கூடாநட்பு காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் அ.தி.மு.க., சேரவிடாமல், ஜெயலலிதா எப்போதோ சோனியாவை விமர்சித்துப் பேசியதை, இவரும், இவரது அடுத்த மட்ட தலைவர்களும், "ரிபீட்' செய்து பேசி, காங்கிரசை தந்திரமாக, அ.தி.மு.க., கூட்டணியில் சேர விடாமல் தடுத்துத் தன் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்.
தி.மு.க., தன் சொந்த பலத்தில் நின்று ஜெயித்ததாக வரலாறு கிடையாது. இப்போது தி.மு.க., தன் கடைசி கட்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது. தன் மகன்களே தனக்கு எதிராக செயல்படுவது, கழகக் கண்மணிகள் ஒவ்வொருவராக அந்தந்த மாவட்ட சிறைக்குச் செல்வது, கூடா நட்பு காங்கிரஸ் தன்னை விட்டு விலகி நிற்பது,
சோனியா இவரைச் சட்டை செய்யாதது, பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்கள் மணிக்கொருதரம் கோபாலபுரம் செல்லும் நிலை மாறி, அவர் முகத்தைக் கூட பார்க்க துணியாதது என, பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அரசியல் புயலில் தி.மு.க., நிலைத்து நிற்க, பெரிய அளவில் சுயபரிசோதனை தேவை.
சிறந்த பகிர்வு...
ReplyDelete#அயம் பர்ஸ்ட்
இந்த சுய பரிசோதனைக்காக ஒரு பொதுக்குழு கூட்டி தலைவர் முடிவெடுப்பார்..
ReplyDeleteதறுதலைப் பிள்ளைகளைப் பெற்றால் இப்படித்தான்.....
ReplyDeleteநல்ல மாற்று கட்சி கிடைக்காதவரை தி.மு.காவுக்கு சிக்கல் ஏதும் இல்லை.
ReplyDeleteஇன்னுமொரு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்,குறிப்புகளில் இப்படி ஒரு கட்சி இருந்தது என்று குழந்தைகள் படிக்கக் கூடும்!
ReplyDeleteவை.கோ விழித்தெழலாம்,ஆனால்?????????????????????
ReplyDeleteசூப்பர் தல கவிதை போட்டாலும் அசத்தல் அரசியல் கட்டுரை போட்டாலும் அசத்தல் தொடருங்க
ReplyDeleteதி.மு.க விசுவாசிகளும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளும் அம்மையாரின் விசுவாசிகளும் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறும் வரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அமையாது... அது வரை நான் இடப் போவது 49 'O'
ReplyDeleteதிமுக தன் அந்திமகாலத்திற்கு திரும்புகிறது, ஆனாலும் அவங்களுக்கு கவலை இல்லை பணம்தான் இஷ்டம் போல சம்பாதிச்சாச்சே...!!!
ReplyDeleteதற்போதைய சூழ்நிலையில், அதிமுக செய்யும் தவறுகளை மக்களிடம் சுட்டிக்காட்டி அரசியல் செய்யும் நிலையில் தான் திமுக இருக்கிறது. அதனால் தான் சென்ற சில தினங்களாக, ஜெயலலிதா அவசரப்பட்டு உள்ளாட்சித்தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார் என்று சொல்லி அதிமுக கூட்டணியில் ஏற்படும் கலகத்திற்காக காத்திறது.
ReplyDeleteமாப்ள சூனியக்காரரின் ப்ளான் எல்லாம் புசுவானமா பூடிச்சின்னு சொல்றீங்க ஹிஹி!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteயாரு ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாளுஅம்மாள், ராஜாத்தியம்மாள்,இவங்க எல்லாரும் தான் செயற்குழு அறிவாலயத்துக்கு வெளியே பிரியாணி போடுவாங்க .அங்க வந்து சாப்பிட்டு போறவங்க எல்லாம் பொது குழு .
அவ்ளோதான் கட்சி மீட்டிங் ..............
அருமையான விளக்கம், நண்பா! தி மு க கண்டிப்பாக சுயபரிசோதனை செய்ய வேண்டும்!
ReplyDeleteஎதுவும் நிலைஅல்ல என்பதை ஐயா இப்ப புரிந்து கொள்வார் !!
ReplyDeleteGood post !!!
ReplyDeleteசிறந்த பகிர்வு...பாவம் தாத்தா..ஹி.ஹி.ஹி.ஹி
ReplyDeleteவிநாச காலே விபரீத புத்தி...
ReplyDeleteஇப்போது கூட கட்சியை காப்பாற்றி கொள்வதற்காக மீண்டும் கூடா நட்புடன் கை கோர்த்தாலும் ஆச்சரியப்படாதீர்கள். தங்கபாலு இன்னமும் கலைஞரின் கைப்பாவைதான் என்பதை மறவாதீர்கள்.
ReplyDeleteஅரசியல் அலசல் அசத்தல். இவர் இருக்கும்போதே இப்படி அம்போன்னு நிக்குறாங்களே உ.பி க்கள். கலைஞர் மண்டையை போட்டால் தி.மு.க என்று ஒரு கட்சி இருக்குமான்னு தெரியல.
ReplyDelete//தமிழ் உதயம் said... [Reply to comment]
ReplyDeleteநல்ல மாற்று கட்சி கிடைக்காதவரை தி.மு.காவுக்கு சிக்கல் ஏதும் இல்லை.//
ரிபீட்டே!
திமூக தன்னலமற்ற தலைவர்களும்- தொண்டர்களும் வளர்த்த பேரியக்கம். சில சுயநலமிக்க தலைவர்களிடமும்- ரவுடிகளிடமும் சென்று சீரழிகிறது.
ReplyDeleteரைட்டு நண்பா,,...
ReplyDeleteதிமுக விற்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் பாஸ்....
ReplyDeleteஇல்லையேல்...கலைஞர் போன்றோரால் ஒட்டு மொத்தக் கட்சியுமே காங்கிரஸிற்கு அடகு வைக்கப்பட்டு விடும்.
நல்லதொரு அரசியல் அலசல் நண்பரே
ReplyDeleteகலைஞர் ஒருவரால் தான் தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் அறிஞர் அண்ணா அவர்களுக்கு பிறகு முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆதிக்க சக்திகளின் சதியால் எம்.ஜி.ஆர். இயக்கத்தை விட்டுப் பிரிந்த பிறகு கட்டுகுலையாமல் இந்த மாபெரும் இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்.இதை யாராலும் மறுக்க இயலுமா? தற்பொழுது ஏற்பட்டிருப்பது தற்காலிக பின்னடைவே. ஆதிக்க சக்திகளின் சதியால் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு விரைவில் பனி போல் விலகிவிடும்.
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க.
ReplyDeleteநல்ல அலசல்
ReplyDeleteநல்லதொரு அலசல் சௌந்தர்
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அரசியலில் நீங்களும் ஒரு ஞானியாகிவிட்டீர்கள்.... செம அலசல்
ReplyDeleteஅப்படி போட்டு தாக்குங்க
ReplyDeleteஇப்போ அம்மா ராஜதந்திரம்தான் கரண்ட்
ReplyDeleteதன் வாரிசுகளுக்காக எதையும் செய்யும் கருணாநிதி சுயபரிசோதனையில் சுயம் இழக்காமல் இருக்கட்டும்.
ReplyDeleteDMK now lost his Goodwill
ReplyDelete/////
ReplyDelete’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
இப்போ அம்மா ராஜதந்திரம்தான் கரண்ட்/
///////
உண்மைதாங்க....
/////சே.குமார் said...
ReplyDeleteதன் வாரிசுகளுக்காக எதையும் செய்யும் கருணாநிதி சுயபரிசோதனையில் சுயம் இழக்காமல் இருக்கட்டும்.////////
பொருத்திருந்து பார்ப்போம்....