கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 November, 2012

நம் நாட்டை கேலி செய்கிறதா தி ஹிந்து நாளிதழ்.. ! இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது..?

சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று மாணவர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு கிராம மேம்பாடு மசோதாவைப் பற்றி பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் என்ன நடைபெறுகிறதோ அதே போல இருக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர். 


விவாதம் தொடங்குகிறது. ஒருவர் எழுந்து மசோதாவை வாசிக்கிறார்... மற்ற பிரிவினர் அவரை பேச விடாமல் தடுக்கின்றனர். நாற்காலியை தூக்கி அடிக்கின்றனர்.பேப்பரை கிழித்து முகத்தில் வீசுகின்றனர். ஒரே கூச்சல் குழப்பம் நிலவுகிறது. அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கூறுகிறார். அந்த மைக்கும் பிடுங்கி உடைக்கப்பட்டுகிறது. 


கூச்சல் சப்தம் குறைக்கப்பட்டு மெல்லிய இசை ஒலிக்க "பிஹேவ் யுவர் செல்ப், இந்தியா!. யூத் ஆர் வாட்சிங்'( இந்தியாவே நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்) என்ற வாசகங்கள் திரையில் ஒளிர்கின்றன. 


தி ஹிந்து நாளிதழ் தயாரித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம்தான் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. பெரும்பாலோனோர் விருப்பம் தெரிவிக்கும் இந்த விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து என்ன சொல்ல வருகிறது? இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையா? அல்லது வருங்காலத்தில் அரசியல் தலைவர்களாகப் போகும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனரா? இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்வு இதுதானா? தொலைக்காட்சிகளில் லோக்சபா, ராஜ்யசபா நிகழ்வுகள் ஒளிபரப்பாகின்றன. 


சில சமயங்களில் கூச்சல் குழப்பம் நிகழ்வதுண்டு. ஆனால் நாற்காலிகள் உடைக்கப்படுவதும், மைக் பிடுங்கி அடிக்கப்படுவதும்தான் நாடாளுமன்றத்தின் அன்றாட நிகழ்வு என்பது போல்தானே இந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 


இதை பார்க்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் தினசரி நிகழ்வே இதுதான் என்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா? தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் இடையேயான போர்தான் பெரும்பாலும் அவர்களின் விளம்பரங்களில் எதிரொலிக்கும். ஆனால் இப்பொழுது இந்த புதிய விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து நாளிதழ் சொல்ல வரும் தகவல்தான் என்ன? எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம் என்றால் விளம்பரத்தை, விளம்பரமாக பார்த்துவிட்டு விட்டுவிடுங்கள்....

அந்த விளம்பரம்...

15 comments:

 1. சௌந்தர் இதில் எந்தத்தவறும் இல்லையே. நமது பாராளுமன்ற நபர்களாவது கூச்சல், குழப்பத்துடன் நிறுத்தி கொள்கிறார்கள். ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் பயங்கர அடிதடியே நடக்கும். பெண் பிரதிநிதிகள் கூட அடித்து கொள்வார்கள். பார்க்க:

  http://www.youtube.com/watch?v=XHMrgwAuJ_U

  நோ டென்சன்.

  ReplyDelete
 2. இந்த விளம்பரத்தை இயக்கியவன் என்கிற முறையில் நான் சொல்ல வருவது இன்னானா....

  "யோவ்... நான் எழுதுனாத்தேன் புரியல, வெளம்பரம்கூடவா புரியல?"

  ReplyDelete
  Replies
  1. இதை இயக்கியதா வௌங்காதவனா..?

   ரைட்டு

   அப்படின்னா இன்னும் வன்மையா கண்டிக்கிறேன்...

   Delete
 3. விளம்பரத்தை விளம்பரமா பார்த்துட்டேன்.

  ReplyDelete
 4. அந்த விளம்பரம் என் கண்ணுல இன்னும் படல .

  ReplyDelete
 5. இந்தியா மானம் கப்பலேறுதுன்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 6. இது ஒரு எச்சரிக்கை!இதில்தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  ReplyDelete
 7. இந்த விளம்பரத்திற்கு கோபப்படுகின்றீர்க்ளே விவேக் ஒரு படத்தில் என் வீதியில் சென்ற ஒருவரின் வேட்டியை உருவிவிட்டு எனது அப்பா பாராளுமன்றத்தில இதத்தான் செய்றவர் என்று சொன்னாரே பல தமிழ்படங்களில் இந்தக்காட்சிகள் இந்திய அரசியலை கேவலப்படுத்துவதாக வந்தனவே அதற்கு நீங்கள் கோபப்படவில்லை ஆனால் ஒரு விழிப்புணர்வு விளம்பரம் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றதா..இந்த விளம்பரத்தால் மானம்போகாது லொக்சப்பவில நடக்கிறத நேரடியாகவே உலகம் பார்துக்கிட்டிருக்கு...இது அதவிட தேவல

  ReplyDelete
  Replies
  1. விளம்பரத்தை நான் ஒன்று குறை சொல்லவில்லை நண்பரே...

   நம் வீட்டுக்குள் நடப்பதை ஏன் படம்போட்டு உலகம் முழுவதும் காட்ட வேணடும்....

   மற்றபடி இளைஞர் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது...

   Delete
 8. எனது கிறுக்கலோடு குழந்தைகள் ஓடி விளையாட்டில் கணினி ஜுக்டுலௌஃப்க்ல்ஃப்ட என்று வந்து விட்டதால் முந்தைய பின்னூட்டம் என்னால் நீக்கப்பட்டது.மன்னிக்கவும்.நான் சொல்ல வந்தது கீழே:

  நம்பள்கி சொல்லித்தான் நீங்க வடை சுட்டதே தெரியும்:)

  உங்கள் தளத்திற்கு தொடுப்பு கொடுக்க சொல்லி நம்பள்கியிடம் சிபாரிசு செய்திருக்கிறேன்.

  வெளங்காதவன் மென்மையாக சொன்னதை பழைய பாராளுமன்ற ஜனநாயக் யதார்த்தங்களோடு இணைக்கும் போது உங்கள் கருத்தும்,இந்து பத்திரிகை விளம்பரமும் தோற்று விடுகிறது.

  ReplyDelete
 9. விளம்பரம் தானே...!

  நன்றி...
  tm4

  ReplyDelete
 10. பாராளுமன்றத்தில் நடக்கும் நிதர்சனத்தை
  காட்சியாக்கி விளம்பரமாக உருவாக்கி
  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக
  எண்ணத்துடன் உருவாக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே...
  இன்றைய இளைய சமுதாயத்திற்கு
  இப்படி வேண்டாமே என்று உரைப்பதுபோல
  எடுத்துக்கொள்வோம்....
  இவ்வளவு செய்யும் பத்திரிகைகள்
  ஊடகங்கள் தங்கள் நிலையில் சரியாகத்தான் இருக்கிறார்களா?
  பாரபட்சம் பாராமல் செய்தியை வெளியிடுகிறார்களா..
  அதையும் அவர்கள் சரி செய்துகொண்டால்
  அனைத்தும் நன்றே......

  ReplyDelete
 11. விளம்பரத்தை விளம்பரமாகப் பார்க்காதீர்கள்.
  எதிர்கால இந்தியா இப்படி அமைந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய அரசியல் தலைவர்களுக்கு இது சிறந்த படிப்பினையாக இருக்கட்டுமே......

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...