கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 May, 2013

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?நீ அமர்ந்திருந்த இடத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...


நீ முகம் பார்த்த கண்ணாடியில்
முகம் பார்ப்பது...!


நீ சீவிய சீப்பை எடுத்து
என் தலைசீவுவது...!


நீ வளர்த்த பூச்செடிகளுக்கு
நீர்விட்டுப் பார்ப்பது..!


கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரை
திரும்ப திரும்ப வாசிப்பது...!


முடிக்காமல் விட்டுவிட்டுப்போன
நாவலை தொடர்ந்துப் படிப்பது...!


உன்னோடு ‌பேசிய வார்த்தைகளை
திரும்ப உச்சரிப்பது 

என...

இப்படித்தான் கழித்துக்கொள்கிறேன்
அவள் இல்லாத பிரிவுகளை...!


வாசித்த அனைவருக்கும் நன்றி...!

19 comments:

 1. அட...! எம்பூட்டு பிரியம்...!

  ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமை.... படங்களும்.... நன்றி...

  ReplyDelete
 3. மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? // 101 % இருக்காது பாஸ். தொவைக்காம அங்கங்கே கழட்டி போட்ட துணிகள், சிங்க்ல கழுவாம கிடக்கிற தட்டும்,காஞ்சு போன பரோட்டா,மீதமான சால்னா, இரைஞ்சு கெடக்குற சிப்ஸ் பாக்கெட்டு, மிச்சமிருக்கிற ஸ்ப்ரைட் பாட்டில் இப்படிதான் இருக்கும்..... இது போங்காட்டம்.. :-)

  ReplyDelete
  Replies
  1. மனைவி மீது உண்மையான காதல் கொண்டவர்கள் வீட்டில் மட்டும்தான் நான் நான் குறிப்பிட்டது....


   Delete
  2. நீங்கள் குறிப்பிட்டமாதிரிதான் அதிகமாக இருக்கும்...

   அப்படிகூட அதை சரிசெய்ய மனைவி இல்லையே என் எண்ணம் இருக்கும் அல்லவா...

   எப்படியும் நினைப்பது நிச்சயம்...


   தங்கள் கருத்துக்கு நன்றி..

   Delete
 4. அனுபவம் பேசுகிறது!
  த.ம.7

  ReplyDelete
 5. மனைவியோட வாழ்ந்தவருக்கு
  மனைவி வீழ்ந்த பின்
  கணவனுக்கு வருகின்ற மாற்றத்தை
  அழகாகத் தந்துள்ளீர்!

  ReplyDelete
 6. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. பிரிவு ஏக்கம் ததும்பும் வரிகள். நன்றி

  ReplyDelete
 8. அருமையான கவிதை.. வாழ்த்துகள்

  ReplyDelete
 9. நல்ல கவிதை வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. ரசனையான கவிதை.

  ReplyDelete
 11. கவிதை ரொம்ப நல்லா இருக்கு
  *********************
  நிசமா இப்படி எல்லாம் செய்யறவங்க யாராவது இருக்காங்களா பாஸ். அவங்க போட்டோ புடிச்சி போடுங்களேன். //ஹிஹி
  **********************

  ReplyDelete
 12. இது உண்மையா? தொலைக்காட்சியும் காணொளி விளையாட்டுக்களுமாய் மகிழ்ச்சியாக இருப்பாரே..மனைவியைப் பற்றி சிறிது எண்ணம் இருக்கும், ஆனால் நீங்கள் சொல்வது எல்லாம் செய்யும் ஆண்கள் இருக்கிறார்களா? :)

  ReplyDelete
 13. சூப்பர்ப் கவிதைய்யா போலீசு....

  ReplyDelete
 14. பொண்டாட்டி இல்லாத நேரத்துல இப்படி கடுப்பை கிளப்பிக்கிட்டு #சோகம்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...