கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 May, 2013

அறிவாளிங்க திமிரா பேசுவாங்களா...? ம்.. பேச்சி பேச்சாத்தான் இருக்கனும்...!


என்ன மச்சி பேச்செல்லாம் திமிர்த்தனமா இருக்கு?

”அறிவாளிங்க கொஞ்சம் திமிராத்தான் மாப்பு இருப்போம்”

போடா முட்டாப்பயலே

“என்ன மாப்பு, திமிரா?”

நீதான மச்சி சொன்ன அறிவாளிங்க கொஞ்சம் திமிராத்தான் இருப்போம்னு அதான்..

நாங்களும் அறிவாளின்னு காட்டணும்ல

“அறிவாளிங்க எதைச் சொன்னாலும் உடனே நம்ப மாட்டோம் மாப்பு”

“????”

*****************************************


X, Y ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்....

ஒரு நாள் X ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.... திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி, சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு.

போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி. முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான், ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப்பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல வச்சிட்டு, நாளிக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான். தன் நண்பனிடம் கேட்க அவனும் "அதனால என்னடா... வச்சிட்டு போ..."ன்னான். மறுநாள் எடுத்துட்டு போய் அத சரி செஞ்சி போட்டுகிட்டான் X.

ஒரு மாசம் கழிச்சி X ன் மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம் போயிட்டு இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற வழியில தானே நம்ம நண்பன் Y வீடு அங்க ஒரு அரை மணி நேரம் மாமாவ எறக்கி வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன் கிட்ட கேட்டான்.... Y வாயிலேயே வயலின் வாசிச்சி "ஒழுங்கா ஓடிடு, இல்ல கொண்டே புடுவேன்"னு சொல்லி தொரத்திட்டான்.

# பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம் மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ பெரியவனா, நான் பெரியவனான்னு கப்பித்தனமா சண்ட போடாம போய் புள்ளைகுட்டிகள படிக்க வைங்க...#

*******************************************



மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது.

இந்திய கிரிக்கெட் வாரியம், "எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை" என்றது.

அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்!

ஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே...

"இந்தியா மட்டன் ஸ்டால்" , "இந்தியா கவரிங்", "இந்தியா சால்னா கடை" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.

இதற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை.

ஆகவே இந்திய அணி தோற்றால் வாடாதீர்! ஜெயித்தால் ஆடாதீர்!

********************************


 

அய்யோ போச்சேன்னு யாராவது பெருமூச்சி விட்டிங்க அவ்வளவுதான்...
இந்த ஆட்கொள்ளிகளை உலகம் முழுவதும் ஒழிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை....

(முகநூலில் தொகுத்தவைகள்)

9 comments:

  1. முடிவில் உள்ள வண்டி தமிழ்நாடு முழுவதும் வலம் வரணும்... அப்படியும் ...ம்ஹீம்... தானாக தான் மன நோய் தீர வேண்டும்...

    ReplyDelete
  2. # பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம் மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ பெரியவனா, நான் பெரியவனான்னு கப்பித்தனமா சண்ட போடாம போய் புள்ளைகுட்டிகள படிக்க வைங்க...# \\ஆஹா எப்பேர் பட்ட சங்கதியை இது சொல்லுது, ஆனா கதையை படிச்சு முடிக்கும் வரை எதிர்பார்க்காத திருப்பம்.........!!

    கிரிக்கெட் வாரியம்.......தனியார் சொத்து...........ஆனா "இந்திய" அணி ஜெயிச்சா பிரதமர், "இந்திய" ஜனாதிபதி, அமரிக்க ஜனாதிபதி எல்லாம் வாழ்த்து சொல்வத பார்த்தா........... எல்லா பயல்களும் சேர்த்து நம்மை ஏமாற்று கிறார்களோ .............

    ReplyDelete
  3. அய்யோ போச்சேன்னு யாராவது பெருமூச்சி விட்டிங்க அவ்வளவுதான்...
    இந்த ஆட்கொள்ளிகளை உலகம் முழுவதும் ஒழிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை...//

    பக்கி பாத்தாம்னா செத்தே போவான்.

    ReplyDelete
  4. அறிவாளிங்க திமிராத்தான் கருத்திடுவாங்க..:P

    ReplyDelete
  5. அய்யோ போச்சேன்னு யாராவது பெருமூச்சி விட்டிங்க அவ்வளவுதான்...
    இந்த ஆட்கொள்ளிகளை உலகம் முழுவதும் ஒழிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை....

    இது எங்கள் அனைவரினதும் ஆசையாக மலர்ந்து
    இக் கொடிய விசத்தை அழிக்கட்டும்
    வாழ்த்துக்கள் சகோ ..........

    ReplyDelete
  6. இது எங்கள் அனைவரினதும் ஆசையாக மலர்ந்து
    இக் கொடிய விசத்தை அழிக்கட்டும்
    வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  7. பிஞ்ச செருப்பை வெச்சு எவ்வளாவோ பெரிய மெசேஜ்.., கிரிக்கெட் வாரியம் பற்றிய கருத்தும் சூப்பர். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. 'நீபெரியவனா நான்பெரியவனா ' அசத்தல்.

    பாம்பு விசம்போல தொட்டால் விடாது ..... விழித்துக்கொண்டால் வெற்றிதான்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...