கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 May, 2013

மத்தியில் காங்கிரஸை சூது கவ்வும், 30 தொகுதி அதிமுக வசம்..! இன்று தேர்தல் நடந்தால்... ! பரபரக்கும் புதிய கருத்து கணிப்பு...!

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 
 
ஹெட்லைன்ஸ் டுடே- சி வோட்டர் இணைந்து தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. 
 
இந்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் திமுகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்துள்ளது. இதர கட்சிகளுக்கு மொத்தமாக 45% வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு.

பாஜகவுக்கு 137 தொகுதிகள்!

இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி 137 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருக்குமாம். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 19 தொகுதிகளும் சிவசேனாவுக்கு 14 தொகுதிகளும் சிரோமணி அகாலி தளத்துக்கு 6 தொகுதிகளும் கிடைக்குமாம். மொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 179 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 27 தொகுதிகள் கூடுதலாகும்.


பாஜக ஆளும் மாநிலங்களில்...

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றுமாம்.. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 16 ஐயும், குஜராத்தில் 20 தொகுதிகளையும் பாஜக அணி கைப்பற்றலாம் என்பது ஹெட் லைன்ஸ் டுடேயின் கருத்துக் கணிப்பு.
 
 
மேற்குவங்கத்தில் மமதா ஆதிக்கம் 
 
மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்... இடதுசாரிகள் கடந்த முறை கைப்பற்றியதைப் போல 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம்...


தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம்..

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.. திமுகவுக்கோ 4 தொகுதிகள் தான் கிடைக்குமாம்.. கடந்த முறை 8 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 1 தொகுதிதானாம்.. தேமுதிகவுக்கு 2 தொகுதியும் மதிமுகவுக்கு 1 தொகுதியும் கிடைக்கிறதாம்..


எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகள்

இதில் எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகளாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளவை... அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக, தேமுதிக என மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர். (நன்றி செய்தி தளங்கள்)

9 comments:

  1. see the earlier predictions of headlines today. They have always supported AIADMK.

    ReplyDelete
  2. சரியான கணிப்பு மாதிரித்தான்படுகிறது
    அன்றைய நிலையில் அசாதாரண சூழல்கள்
    ஏதும் இல்லாது இருப்பின்,,,

    ReplyDelete
  3. மாற்றம் வருமோ?

    ReplyDelete
  4. காங்கிரஸ் தோற்கும் என்பது உறுதியான ஒன்று! அதிமுக 30 சீட் என்பது ஆச்சர்யம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. நல்லா கெளப்பறாங்கய்யா பீதியை

    ReplyDelete
  6. காலம் பதில் சொல்லும!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...