கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 May, 2013

இதுமாதிரி வேலைக்கும் மூளையை பயன்படுத்தனும்...! / அடுத்து ஒரு ஜோக்..!

ஒரு பலசாலி இருந்தான். அவன் மரம் வெட்டும் வேலைக்குச் சென்றான். அவனது உடல் உறுதியைப் பார்த்துவிட்டு உடனே வேலைக் கொடுத்தார்கள்.

அவனது முதலாளி நல்ல கோடாரி ஒன்றைக் கொடுத்து மரங்களை வெட்டச் சொன்னார். நல்ல சம்பளம் என்பதால் தனது முழு பலத்தையும் பிரயோகித்து வெட்டினான்.

முதல் நாள் 18 மரங்களை வெட்டினான். முதலாளிக்கு சந்தோஷம். இரண்டாவது நாளும் கடுமையாக உழைத்தான். ஆனால், 16 மரங்களையே வெட்ட முடிந்தது. மூன்றாவது நாள் இன்னும் கடுமையாக உழைத்தும் 12 மரங்களுக்கு மேல் வெட்ட இயலவில்லை. அவனுக்கு பெரிய வருத்தம். முதலாளியிடமே சென்று தனது வருத்தத்தைக் கூறினான்.

அவர் சிரித்தார். நீ கோடாரியை கூர் தீட்டினாயா? என்று கேட்டார். அதற்கு நேரமே கிடைக்கவில்லை. மரம் வெட்டுவதிலேயே நேரத்தைச் செலவழித்து விட்டேன் என்றான். முதலில் கோடரியை தீட்டு என்று உத்தரவிட்டார் முதலாளி.

அதன்படி செய்ததில் ஏகப்பட்ட மரங்களை மகிழ்ச்சியுடன் வெட்டினான். இது எல்லோருக்குமே பொருந்தும். அறிவை வளர்க்காமல் புத்தியை தீட்டாமல் வாழ்ந்தால் முன்னேறவே முடியாது.
**************************** 
 இந்த உலகம் இன்னும் உயிர்கொள்ள
மரம் வளர்ப்போம்...!
ஒவ்வொறுவரும் ஒரு மரத்தையாவது நட்டுவைப்போம் 
அவைகளே நம் அடையாளங்கள்...

**************************** 
“அப்பா நான் வெற்றியின் முதல்படியில் நிற்கிறேன்,“

“வெறி குட்!.. நீதான் கிளாஸ் பர்ஸ்ட்டா..?”,
 
“இல்லப்பா... நீங்கதான் சொன்னீஙகளே... வெற்றியின் முதல் படி தோல்வின்னு...!”

7 comments:

  1. பயனுள்ளவைகளை
    ரசித்துப் படிக்கும்படி
    பதிவாகத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லதொரு அறிவுரை ஐயா...
    நலமாக இருக்கிறீர்களா

    ReplyDelete
  3. மரம் வளர்ப்போம் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  4. மரம் வெட்டும் கதையினைக் கூறி, மரம் வளர்க்க அறிவுறுத்தி உள்ளீர்கள் அய்யா.
    மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்

    ReplyDelete
  5. வளர்த்திடுவோம்.

    ஜோக் :) பிடித்தது.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...