கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பேஸ்புக். Show all posts
Showing posts with label பேஸ்புக். Show all posts

30 November, 2013

இரண்டாம் உலகம் மகிழ்ச்சியே




மெல்லியதாய் இருந்த காற்று
இனிய தென்றலாகிறது...!

மரங்களில் பூத்த மலர்கள்
சாலைகளில் கோலம் போடுகிறது...!

சூரியனுக்கு வலப்புறத்தில் வண்ணமயமாய்
ஒரு வானவில் காட்சியளிக்கிறது...!

பட்டாம்பூச்சிகள் பறக்கும் திசையில் பார்க்கையில்
அட... நீ தான் வந்துக்கொண்டிருக்கிறாய்...!



*******************************


எல்லாம் தெரிந்தவள் போல்
மௌனித்திருக்கிறாய்...!

எதுவும் தெரியாதவள்போல்
பாவனை செய்கிறாய்...!

உனக்கு எது தெரியும் எது தெரியது
என்று புரியவைத்துவிட்டு போகிறது உன் புன்னகை...!


*******************************

என்னுடைய இரண்டாம் உலகத்தில்
நான் எடுத்து வைக்கும்
அத்தனை அடியையும்
அழுத்தமாய் பதியவைக்கிறேன்

உன் நினைவுகளை
இருக்கமாய் பற்றிக்கொண்டு....!


*******************************

மணித் துளிகள் மறந்து
நிறைய பேசுதால் வேண்டாம்...

மௌனத்தில் விழிகள் மாறி
பார்வைகள் பறிமாறவோண்டாம்...

தோள்கள் உரசி என்னருகே அமர்ந்திருக்கும்
அத்தனை நிமிடங்களும்தான் எனக்கு நிம்மதி...!
 

 *******************************

என் நினைவுகளை
எங்கே சென்று நிறுத்தினாலும்

அது தண்ணீரை தேடி பயணிக்கும்
வேர்களைப்போல ...

நித்தம் நித்தம் மறவாது
உன் திசையை தேடியே பயணிக்கிறது
 
 


28 September, 2013

பேஸ்புக் பதிவர் குறித்து தன் படத்தில் மிஸ்கின் கூற்று சரிதானா..?


‌நேற்றுமட்டும் இரண்டு மாறுப்பட்ட படங்கள் பார்க்க நேர்ந்தது... காலை 10.30 மணி காட்சி ராஜா ராணி படம்.. (விமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்) இருந்த வேலைகளை மதியம் முடித்துவிட்டு மாலை 6.00 மணி காட்சிக்கு அடுத்த திரையரங்கில் ஓடும் மிஸ்கின் படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (விமர்சனம்) பார்க்க சென்றுவிட்டேன்.. 

ராஜா ராணி...! இரு காதல் ஜோடியின் வாழ்க்கையை மாறுப்பட்ட கோணத்தில் பொழுதுப்போக்காக சொல்லப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம்... ஆனால் மிஸ்கின் திரைப்படம் எல்லாவற்றிலும் மாறுப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு 6.15 மணி காட்சிக்கு 6.00 மணிக்கு சென்றேன் திரையரங்க வளாகம் காலியாக இருந்‌தது ஒருவேளை படம் போட்டுவிட்டார்களா என்று பார்த்ததேன்... அப்படி‌யோதும் இல்லை... கூட்டம் இல்லை... இறுதியில் 15 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தும் 1000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகொண்ட  அரங்கில் வெறும் 15 பேர் மட்டுமே படம் பார்த்தோம். (ரைட்டு விடுங்க)


சரி விஷயத்துக்கு வருகிறேன். பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துவோர் மீது ஓர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது... (நாம் எந்த மாதிரியாக சமுகத்தில் வாழ்கிறோம்) இப்படி பல்வேறு சூழலில் பேஸ்புக் பதிவர்களை தன்னுடைய படத்தில் சமூக அக்கறையற்றவர்களாக காட்டியிருக்கிறார் மிஸ்கின்.

ஆரம்ப காட்சியில் குண்டடிப்பட்டு இரத்தவெள்ளத்தில் ஒருவர் வீழ்ந்துகிடக்கிறார்... அந்த உடலைப்பார்த்து ஆட்டோவில் செல்பவரும்.. நடந்து செல்பவரும் பரிதாபத்துடன் பார்த்துச் செல்வார்கள்... யாரும் அவருக்கு உதவிசெய்யவில்லை...

அடுத்து இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் அந்த காட்சியை பார்க்கிறார்கள்.. பின் பக்கம் அமர்ந்து இருப்பவர் “டேய் நமக்கு ஏன் வம்பு செல்லாம்” என்று சொல்கிறார்..

உடனே வண்டி ஓட்டிவந்த நபர்.. தன்னுடைய செல்போனை எடுத்து அந்த காட்சியை தன்னுடைய செல்போனில் படம்பிடிக்கிறார்... நண்பர் எதற்கு என்று கேட்க...

போஸ்புக்-ல போடலாம்டா என்று கிண்டலாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்....

இப்போது சொல்லுங்கள்.... அடிப்பட்டு விழுந்துகிடக்கும் ஒருவரைப் பார்த்து அவருக்கு முதலில் எதாவது உதவி செய்யாமல்... பேஸ் புக்கில் படத்தை போடுவதற்கு ஆர்வம் காட்டுவது மிகவும் கிழ்த்தனமான ஒரு செயல் அல்லவா...? பேஸ்புக்கில் இருப்பவர்கள் சமூக அக்கறையற்று பேஸ்புக்கில் இப்படியா செய்துக்கொண்டிருக்கிறோம்.


ஒருவேளை இதுதான் உண்மையா... பேஸ்புக் தற்போது சமூக சிந்தனையில் இருந்து விலகி வெட்டித்தனம், கிண்டல், நையாண்டி, வீண் வேலை, வதந்திகளை பரப்புதல், என இப்படித்தான் போய்கொண்டிருக்கிறதா...?

உண்மையில் இந்த காட்சியில் மிஸ்கின் சொல்லவருவது என்னதான் என்று எனக்கு தெரியவில்லை..

24 September, 2013

சமூக வலைதளங்களை கண்டித்த பிரதமர்...! கொதிக்கும் வசகர்கள்..!


ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். 

இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் இணையதளத்தில் காட்டமான கருத்தளித்த சிலவாசகர்களின் கருத்தை இங்கு பகிர்கிறேன்..!


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar சர்தார்ஜி - உங்களுக்கு அதுக்கு மேல் பேச இத்தாலியில் இருந்து உரிமை கிடைக்கவில்லை. ஏதோ வந்தோமா குடுக்குற ஏலக்காய் டீ மற்றும் மசால் வடையை சாப்பிட்டோமா என்று இருக்காமல் ஓவரா கூவகூடாது

பி.டி.முருகன் - Trichirapalli,இந்தியா
பி.டி.முருகன்    சமூகம் என்பது என்ன? மக்கள் தானே சமூகம்? மக்களின் கருத்துகளை வலை தளத்துக்கு கொண்டு செல்ல கூடாது என்று அவசர சட்டம் போடலாமா என்று பார்க்கிறாரோ? எந்த வலை தளத்தில் மத உணர்வுகளை எவர் தோண்டுகிறார் என்று பார்த்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar வெட்கம் கெட்ட மனிதர், தன் மேல் உள்ள கையாலகாத தனத்தை அடுத்தவர் மேல் போடுவதில் இவர் மௌனியாக இருந்தே சாதிப்பார். கேவலம் வாக்கு வங்கிக்காக, சிறுபான்மையினர் மனதில் நஞ்சை மற்றும் அச்ச உணர்வை விதைத்ததே உங்கள் அன்னையார் தான்.

செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
செல்வ.கமலகண்ணன் ஏதேதோ சொல்லி பார்த்தாங்க எதையும் சரியா மக்கள் ஆதரிக்கிற மாதிரி தெரியலை சரி எதாவது சொல்லி வைப்போம் அது எப்பயாவது உதவும் சொல்லி பார்க்கிறாங்க அதை மக்கள் ஏத்துக்கிற ஜடியாவே இல்லை என்ன சொன்ன இவங்க சந்தோஷ படுவாங்கனு இவங்க தனிப்படை வச்சு விசாரிச்சாங்க அவங்க இவங்கிட்ட சொன்னது நீங்க ஆட்சியை கலைக்க போறாம்னு சொன்னா எல்லா மக்களும் ஆதாரிப்பாங்கனு அவங்க சொல்லிட்டாங்க அதான் இப்படி பேச்சு

ஆரூர் ரங - chennai,இந்தியா
ஆரூர் ரங எதப் பத்தி யார் பேசறதுன்னு விவஸ்தையே இல்லை இவங்க காங்கிரசோ அல்லது இவர்கள் ஆதரிக்கும் சிறுபான்மை தீவீரவாத இயக்கங்களோ சமூக வலைதலங்களையா நம்பியுள்ளன ? டெல்லி வாக்காளர் பட்டியலை வைத்தே சீக்கியர் வீடுகளைக் கண்டுபிடித்து கொன்று குவித்தபோது ட்வ்விட்டரும் பேஸ் புக்கும் இல்லையே.

டாடி எனக்கு ஒரு டவுட்டு உங்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை விட சமூக வலை தளங்களில் தகவல் உடனுக்கு உடன் கிடைக்கிறது அதுவும் நேரம் நாள் கடத்தாமல்...அதனால் மக்கள், நாட்டில் நடக்கும் அவலங்கள், அக்கிரமங்களை உடனுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது...உங்களுடைய ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு உன்னத சாதனம் சமூக வலை தளங்கள் தான்...எனவே தடை செய்ய வேண்டியது உங்கள் ஆட்சியை தான்..சமூக வலை தளங்களை அல்ல...
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
Samy Chinnathambi இவரு எல்லாத்தையும் மூடிட்டு ராஜபக்சே மாதிரி அரசாங்கத்தை நடத்தலாம்னு பாக்கறாரு.......அடுத்ததா இந்த நாட்டில் குழப்பம் விளைவிப்பது ஊடகங்கள் தான் என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கும், டிவி சானல்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்பார்...அதில் காங்கிரஸ் கட்சியையோ பிரதமரையோ விமர்சிக்க கூடாது என்பார்.......கையாலாகாத பிரதமரை கைபில்லையை போன்று இருப்பவரை விமர்சிக்காமல் வேறு யாரை விமர்சிப்பார்கள்? 


Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani காங்கிரசின் போலி மதவாத கொள்கையினால் வந்த கேடுகள்தான் இவை. சிறுபான்மையினரின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று காங்கிரஸ் செயல்படுவது - கிட்டத்தட்ட இந்தியாவை துண்டு போட எடுக்கும் முயற்சியே...

senthilnathan - ramanathapuram,இந்தியா
senthilnathan // சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும்// நீர் யாரை அழைக்கிறீர் . நீர் என்ன பிரதமர் தானே , தவறை கண்டுபிடித்ததே மிக தாமதம் இதில் யாரிடம் அனுமதி கேட்கிறீர் . இழுத்து மூடுங்கள்


Vettri - Coimbatore,இந்தியா
Vettri போலி மத சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் தான் மத மோதல்கள் உருவாகின்றன. சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது உத்தர் பிரதேஷ் மந்திரி ஒரு சாரரை விடுதலை செய்யுமாறு பணித்து இருக்கிறார். அவர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதை தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்? ஆட்சி, அதிகாரம், சட்டம், போலீஸ் மற்றும் ராணுவம் அனைத்தையும் கையில் வைத்துகொண்டு சமூக வலை தளங்கள் மீது பழியை போடுகின்றனர். ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல்.


ரகு - chennai ,இந்தியா
ரகு புதிய கண்டு பிடிப்பு. அரசியல் வியாதிகள் தானே மத கலவரத்தை உருவாக்குகின்றது. போலி மதசார்பின்மை என்று கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்குவது தான் இத்தாலி கொள்கை. மதத்தின் அடிப்படையில் சலுகை வழங்குவது இது எல்லாம் கலவரம் வெடிக்க காரணம் என்பதை மறந்து வலைத்தளங்கள் மீது குற்றத்தை சுமத்துவது வேடிக்கை. உங்கள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதற்க்கு வலைத்தளங்கள் காரணம். இதை பொறுக்க முடியாமல் வலைத்தளங்கள் மீது பாய்கிண்றீர்கள்.



Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani இப்பொழுதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் சமூக வலைத்தளங்களை பழி சொல்வது ஒரு பேஷன்.

தமிழ்நிதி - chennai,இந்தியா
தமிழ்நிதி இண்டர்நெட்டை அரபு நாடுகள் போன்று நம் நாட்டில் கட்டுபடுத்த வேண்டும். பாலுணர்வுகளை தூண்டும் மற்றும் அரசியல்வாதிகளை அவதூறாக சித்தரிக்கும் வலை தளங்களை தடை செய்ய வேண்டும். தவறான செய்திகளை நெட்டில் பரப்புவோருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மத கலவரங்களை தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிடுவோருக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்.
 ‌
மேலும் கருத்துகளுக்கு...
 
என்னுடைய கருத்து...!

சமூக வளைதளங்கள் பெரும்பாலும் சில சமூக பிரச்சனைகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது. ஏதோ ஒருசில தரம்கெட்டவர்களை வைத்துக்கொண்டு முழு சமூக வலைதளங்களை குறைச்சொல்வது தவறே...

சமூக வலைதளங்களில் மதஉணர்வை தூண்டும் செயல்கள் மட்டும் இல்லாமல், ஏமாற்றுவேலை, பெய்யான தகவல்களை பரப்புதல், காதல் வலை வீசுதல், சமீபத்தில் ஒரு சில கொலைகள் கூட இதனால் ஏற்பட்டிருப்பது நாம் பார்க்கிறோம். இப்படி ஒருசில தவறுகளை தவிர்த்துவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த சமூகம் விழையுமானால் எல்லாம் நன்றானதாகவே நடக்கும்...!

தங்களின் கருத்தையும் பதிவுசெய்யுங்கள்..!

30 July, 2013

பேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கேபிள் சங்கர் /



"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"

"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.

**********************************

எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே..

அப்படி என்னா கேட்டாரு?"

"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"

****************************************

ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;

“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

******************************
 பிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கினார்.

அந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார்.

ஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது.

உடனே டிரைவரிடம்,

"நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்."என்றார்.

அதனை ஏற்க மறுத்த‌ டிரைவர் சொன்னார்,

"நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்"

"ஏன் அப்படி சொல்கிறாய்?" கேட்டார் அமைச்சர்.

அதற்கு டிரைவர் சொன்னார்,

"ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு"
*****************
இந்த வாரம் பேஸ்புக்கில் கலக்கிய நகைச்சுவைகள்...
நான் ரசித்ததை நீங்களும் ரசியுங்கள்..!

*****************
 இன்று  பிறந்தநாள் காணும் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

20 July, 2012

பேஸ்புக்கில் அடங்க மறுக்கும் மனோ..! அதற்கு இவைகள் சாட்சி..!

அன்பு நிறைந்த இஸ்லாமிய நண்பர்கள்  தங்களுடைய ரமலான் கடமையை சிறந்த முறையில் முடிக்க நான் மனமுவந்து வாழ்த்துகிறேன்...!

*********************************************************

"தாஜ்மஹால்" எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?

"ஆக்ரா'வுல..."

"வெரிகுட்.....சார்மினார் எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?"

"அதோ உங்க "பாக்கெட்டுல"....
*********************************************************
 கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!


*********************************************************
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...

காதலி : !!!!

[[த்தூ இதெல்லாம் ஒரு பொழைப்பா]]
*********************************************************
 கல்யாண வீட்டில் வந்து, மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிளையிடம் ட்ரீட் கெட்ட ச்சே கேட்ட அதே நண்பன்தான் இந்த பய....!

*********************************************************

அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?

போன வாரம் அவர் கிட்ட போய் எனக்கு சுகர் இருக்கான்னு பாருங்க டாக்டர்னு சொன்னேன்.

அதுக்கு உங்க வீட்டு ரேஷன் கார்ட கொண்டு வந்தாதானே பார்த்து சொல்ல முடியும்னு சொல்றார்.

*********************************************************
கணவன் : அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா???

மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???

கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்..

[[செத்தான்டா சேகரு இன்னைக்கு]]
*********************************************************
(விமான நிலயத்தில்...)

வடிவேலு:சென்னையில் இருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்??

Receptionist :Plz one minute sir...

வடிவேலு:அடங்க் கொக்கமக்கா..என்ன speed..


*********************************************************
 ராஜபாட்டை ராஜா : பாம்பு கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா...? கடிவாய்க்கு கீழும் மேலும் அழுத்தமாக ஒரு கயிற்றால் கட்டு போடவேண்டும்.

மாணவன் : தொண்டையில பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி கட்டு போடலாமா சார்...?

ரா ராஜா : ???????????......ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே.....


*********************************************************
 கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன்
எழுதிய கவிதை *********

"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"

"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"

*********************************************************

"சின்னவீடு"சுரேஷ் : டாக்டர், வெள்ளரிக்காய் சாப்பிட்டு பார்த்தேன், மருதாணி தடவி பார்த்தேன், ஏன் கண்ணுல விளக்கெண்ணெய் கூட தடவி பார்த்தேன், அப்போ கூட உடம்பு குளிர்ச்சியே ஆகலை...!

டாக்டர் : பேசாம ஃபிரிட்ஜ் உள்ளே போயி உட்கார்ந்து உள்பக்கமா பூட்டிக்குங்க...!

 
*********************************************************
இது மனோவின் இன்றைய பேஸ்புக் அலம்பல்கள்...!
இப்பசொல்லுங்க இந்த மனோவை என்ன செய்யலாம்...!
Related Posts Plugin for WordPress, Blogger...