கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 December, 2013

மாணவர்களிடம் இருக்க வேண்டியது என்ன...? + இன்னும் சில



முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். 
 
மறுநாள் அவர்கள் வரும்போது தமது காதில் ஓணான் புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார். 
 
மறுநாள் அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவ்வாறே சொன்னார்.

முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!" என்று வருத்ததோடு கூறிவிட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!" என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர் ஆணித்தரமாக. "முனிவர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான். 
 
அதுவரை வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளிப்பட்டார்.

"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.

"அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.

விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். முனிவர். எனவே மாணவர்களுக்கு வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்.
 
++++++++++++++++++++++++ 

என்ன ஆச்சரியம்
நிலவுக்குள் ஒரு நட்சத்திரம்..
 
என்னவள் அணிந்த 
மூக்குத்தி...!

+++++++++++++++++++++++
இன்று தேசிய கடற்படை தினம்
++++++++++++++++++++++++ 
 செய்யுங்கடா... உங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு செய்யுங்கடா...

6 comments:

  1. இத்தூனூண்டு மூக்குத்தி கூட உங்க கண்ணுக்கு தெரியுதா!?

    ReplyDelete
  2. நிலவுக்குள்
    நட்சத்திரம்
    அருமை

    ReplyDelete
  3. வணக்கம்
    மனதை நெருடிய வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கதை கவிதை அருமை.
    கடைசிப் படமும் தங்கள் கருத்தும் சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  5. மனைவியுடன் வாழ்ந்து கொண்டு முனிவராக முடியுமா ?முனைவர் ஒருவர் ஆராய்ச்சி செய்து சொன்னால் நல்லது !
    +1

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...