கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 December, 2013

இந்த ஆண்டின் பிரம்மாண்ட Top 5 மொக்கைப் படங்கள்

2013 தமிழ் சினிமா உலகம் பல்வேறு நெளிவு சுளிவுகளை சந்தித்திருக்கிறது... கதையம்சமுள்ள பல்வேறு படங்கள் வந்தாலும் மக்கள் அதையெல்லாம் விரும்பாமல் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும், பெரிய இயக்குனர் இய்ககும் படத்திற்காகவும் காத்திருப்பார்கள்...

அப்படி பெரிய இயக்குனர்கள் இயக்கி அல்லது பெரிய மாஸ் ஹீரோக்கள் நடித்து படம் வெளிவரும்போது அவை சரியில்லையெனில் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் செமத்தையாக வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள்...


எதிர்ப்பார்ப்பு இல்லாது வெளிவரும் படங்கள் சரியில்லை ‌என்றாலோ அல்லது சரியாக ஓடவில்லையென்றாலோ ரசிகர்களுக்கு கோவம் வருவதில்லை.. ஆனால் எதிர்பார்த்த படங்கள்.. அல்லது அதிக பில்டப் கொடுத்த படங்கள் சரியில்லையின்றால் கோவப்படவைத்து விடுகிறது...

அப்படி 2013-ல் அதிக எதிர்பார்ப்போடும் அதிக பில்டப் கொடுத்து வெளிவந்த நிறையப் படங்கள் வந்த வேகத்தில் நடையை கட்டியிருக்கிறது... அப்படி அதிகம் எதிர்பார்த்து ஊத்திக்கொண்ட (Top 5) ‌ஐந்துப் படங்களைத்தான் நான் இங்கு பதிவிட்டிருக்கிறேன்..

1. அழகுராஜா...


ஓவர் பில்டப் கொடுத்த படம்.. ராஜேஷ் படங்கள் என்றாலே சிறந்த காமெடிப்படங்கள் தான்... ஆனால் ஏன்னென்று தெரியவில்லை... இந்த படத்தில் அப்படி சொதப்பியிருக்கிறார்.... கார்த்தி-க்கு 2013 போராத காலம் போல செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார்...

அழகுராஜா படத்துக்கு ஒருத்தர் கூட நல்லதொரு விமர்சனம் எழுதவில்லை.. அந்த வகையில் 2013-ன் சிறந்த மொக்கைப்படம் என்ற பெருமையை  இந்த படம் தட்டிச்சென்றுவிட்டது.

2. தலைவா
முதலில் தலைப்பு பிரச்சனை.. அதன்பிறகு வெளியிடுவதில் பிரச்சனை... அப்படி இப்படி என ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் வெளிவந்தப்படம்... மற்றமொழிகளில் வெளியாகி அதன்பிறகுதான் தமிழில் வெளியானது..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு படத்தை பார்த்தால் இதற்கா இவ்வளவு பிரச்சனை என்று சொல்லவைத்தது... படம் எங்கும் ஓடவில்லை என்றாலும் தியாட்டரை வாடகை எடுத்து 100 நாட்கள் ஓடவைத்துவிட்டார்கள்...

3. இரண்டாம் உலகம்
செல்வராகவன்... ஏதோ ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு புதுமையான படத்தை தரப்போகிறார் என்று காத்திருந்ததில் மொக்கை வாங்கியதுதான் மிச்சம்.. வித்தியாசமில்லாத கதை... புதுமையில்லாத காட்சி அமைப்பு... விறுவிறுப்பு இல்லாத காட்சி அமைப்பு இதெல்லாம் இந்தப்படத்தை சரியாக கொண்டுசேர்க்கவில்லை...

4. கடல்

மணிரத்தினம் என்ற பிரமாண்ட இயக்குனர் என்ற எதிர்பார்ப்பில் வந்த தடம்கூட தெரியால் ஓடிவிட்டபடம்..

5. நய்யாண்டி

ஏன்டா படத்துக்கு போனோம் என்று நினைத்து நினைத்து அழவைத்தப்படம்... தேசிய விருதுபெற்ற இயக்குனரும்... தேசிய விருதுபெற்ற நடிகரும் இணைகிறார்களே ஏதோ வித்தியாசமான படமாக இருக்கும் என்று போனால் கடி வாங்கிவந்ததுதான் மிச்சம்...

மெக்கை பட பட்டியலில் வராத அடுத்த 5 படங்கள்.. 

1. அலெக்ஸ் பாண்டியன்
2. ஆதிபகவான்
3. ஐந்து ஐந்து ஐந்து
4. சேட்டை
5. பட்டத்துயானை

இன்னும் நிறை படங்கள் அதிக எதிர்பார்ப்பில் வந்து தோல்வி அடைந்த படங்கள் இருந்தாலும் இவைகளே பிரதானமானவைகள்...

9 comments:

 1. Hello Sir 555 lam mooka padam nu sollathenga.. antha padam nalla than irukum avalavuku mokka lam illa!.. neenga unga istathuku podathenga?

  ReplyDelete
  Replies
  1. மொக்கை படம் இல்லையென்றாலும் பெரிய எதிர்பார்ப்போடு வந்து சரியாக போடம் படம்...

   அதனால் இந்த பட்டியலில் இடம் பிடித்தது

   Delete
 2. சந்திருக்கிறது, எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்போடும், இந்த படம், இதுக்கடா, தியாட்டரை, செல்வராகன் (?), விருவிறுப்பு, நிறை படங்கள், எதிர்பார்ப்பில், மெக்கை பட...

  ஏதோ(வே)வென்று பதிவிடாம(மா)ல் இதிலு(ளுளு)ம் சிறி(ரிரி)து கவ(வ்வ்)னம் செலுத்தலாமே(ஜூன், ஜூலை)...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. Boss itharkku thanked asaipattai balakumaravil comedy thavira emma irunthathu sollunga parkkalam... mokkai padamnu partha kathai illatha kanravi ellam mokkaithan.

  ReplyDelete
 4. Boss itharkku thanked asaipattai balakumaravil comedy thavira emma irunthathu sollunga parkkalam... mokkai padamnu partha kathai illatha kanravi ellam mokkaithan.

  ReplyDelete
 5. Boss itharkku thanked asaipattai balakumaravil comedy thavira emma irunthathu sollunga parkkalam... mokkai padamnu partha kathai illatha kanravi ellam mokkaithan.

  ReplyDelete
  Replies
  1. இ ஆ பா கு... படத்தை மறுபடியும் பாருங்கள் நண்பரே

   குடிக்கு எதிரான செய்தியை சொன்ன படம்

   Delete
 6. சரியான கணிப்புதான் !
  +1

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...