கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 December, 2013

இப்படி சொன்னால் விரல்கள் கூட சிரிக்கும்



வெறுங்கையை வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய..!

என்னிடம் எதுவும் இல்லை
உருப்படியாய் பயன்படுத்த..!

ஏதாவது என்னிடம் இருந்திருந்தால்
கண்டிப்பாய் முன்னேறியிருப்பேன்...!

நம்ம கையில ஒன்னுமில்லை
எல்லாம் அவன் கையில்...!

இப்படியாய்..
கையை பிசைந்துக்கொண்டிருந்தவனை
பார்த்து சிரித்தன விரல்கள்...!


*****************************



வயிற்றில் கவ்விய தன்குட்டியை
பவ்வியமாக பற்றிக்கொண்டிருக்கிறது குரங்கு...!

ஈன்றெடுத்த ஆறு குட்டிகளுக்கு
படுத்து பாலுட்டிக்கொண்டிருக்கிறது நாய் ஒன்று..!

தேடிபிடித்த சில புழுக்களை அலகால்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது குருவி..!

ஆனந்தாய் முட்டி முட்டி பால்குடிக்கிறது
தன் தாயிடம் பசுங்கன்று...!

இவைகளையெல்லாம் ஏக்கமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறது தெருவோர குழந்தை...!

*****************************
 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

3 comments:

  1. சிரித்த விரல்கள் அருமை...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. இரண்டாம் கவிதை ஏதோ செய்கிறது....ஐந்துடன் இருந்திருந்தான் அந்த குழந்த்தையும் தெருவுக்கு வந்திருக்கது ஒன்று அதிகமாகி ஆறானதால் வந்த வினை இது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...