ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை (28.08.11) மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் "வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம். அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை. எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு. படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது. மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.
படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம். அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...? படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.
ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.
மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.
இவ்வாறு விஜய் கூறினார்.
//படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். //
ReplyDeleteலாஜிக் பத்தியெல்லாம் கவலை பாடுறாரு நல்ல முன்னேற்றம் தான்.
டாகுடருக்கு படம் ரிலீசாகுற வரைக்கும் இப்படித்தான், ஒலகத்துலேயே இல்லாத அது, இதுன்னு பில்டப்பு கொடுப்பானுங்க...... சுறா, வில்லு படவிழாக்களை எடுத்துப்பாருங்க....
ReplyDeleteo.k ங்ண்ணா. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவேட்டைகாரனை வெற்றிக்காரன்னு சொன்னாரு.. பாக்கலாம்..
ReplyDeleteவரட்டும். பார்க்கலாம் படத்தின் லட்சணத்தை.
ReplyDeleteபடத்துக்கு இத்தனை பில்டாப்பா இதுவும் அப்ப ஊத்திக்குமா நம்தலையில் அரைக்காமல் விட்டால் சரி!
ReplyDeleteடாக்டர் படம் பாக்கற மாதிரி இருந்தா சரி.
ReplyDeleteபோங்க தம்பி....
ReplyDeleteபடத்தபார்த்துட்டு பேசுவோம்
அவர் படத்துல கதையா ? காமெடி பண்ணாதிங்க பாஸ்
ReplyDeleteபஞ்ச் டயலக் இல்லாம இருந்தாலே படம் ஓடிடும்
ReplyDeleteஏன் பன்னிக்குட்டி சாரு ரொம்பவே சூடா இருக்கார்?
ReplyDeleteமாப்ள...சூப்பர் ஹீரோன்னா பஞ்சுல இருந்து பல்பம் எடுப்பாரே அவரா டவுட்டு!
ReplyDeleteபடம் வெளியாகும் எல்லோரும் சொல்வதைத்தான்
ReplyDeleteஇவரும் சொல்கிறார்.....
பார்க்கலாம்.
வேலாயுதம் படம் திருட்டிக் கும்பலில் சிக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக தளபதி இருப்பதோடு, கடுமையாகவும் உழைக்கிறார் போல இருக்கிறதே.
ReplyDeleteவேலாயுதம் பட்டையைக் கிளப்பும் என்பது நிச்சயம்,
//இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம்//
ReplyDeleteசும்மாவே தாங்கமுடியாது இதில சூப்பர் ஹீரோவ....கடவுளே.....(யாருப்பா கோபமா கொடுரமாக பார்க்கிறது விசய் ரசிகரா இந்தப்பக்கம் வாங்க இந்தாங்க கூல கொக்கோ கோலா)
சரி சரி படம் வரட்டும்!
ReplyDeleteஆகட்டும் ஆகட்டும்
ReplyDeletelets see
ReplyDeleteவேலாயுதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் மணம் 9
ReplyDeletethiruttu DVD layavathu parkka mudiyuma
ReplyDeleteவேலாயுதம் வெல்லட்டும்!!
ReplyDeleteவேலாயுதம் வெற்றி ஆயுதம்
ReplyDeleteபதிவு எழுதும்போது எதுக்கு நடுவுல கலர் கலரா தார் பூசறீங்க? நீங்க பா. ம. க. வா??
ReplyDeleteஇசைத் தட்டு வெளியீட்டு விழாவும் படமும் வெற்றி பெற நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteதிரைப்பட விமர்சனம் நல்லா இருக்கு .வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteஓட்டுப் போட்டாச்சு .முடிந்தால் எங்க கடைக்கு வந்திற்றுப் போங்கள் .
சகோ .வருவாய் பத்தல .ஹி....ஹி....ஹி ........
படம் வெளிவந்தால் தான் தெரியும் நண்பரே!ஏற்கனவே ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வெளிவந்த படங்கள் பார்வையாளர்களை என்ன பாடு படுத்தியது என்பது நமக்கு தெரிந்த விசயம் தானே!
ReplyDeleteஎப்படியும் ஊத்திக்கப்போகும் படம் தான் இது ஹி ஹி
ReplyDelete