தமிழ் திரைவுலகமும், தமிழ் பதிவுலகமும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை திரைப்படம் வெளியாகாமல் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. (இதற்காக மிகவும் வருத்தப்படுபவர்கள் சிபி செந்திலும், பன்னிக்குட்டி ராமசாமியும் தான்) பதிவுலகில் பலபேர் எப்படியாவது பவர்ஸ்டார் படத்துக்கு திரைவிமர்சனம் எழுதி மிகப்பெரிய ஹிட் எடுத்துவிட துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இப்படம் ஏன் இந்த தாமதம் என்று தனிப்பிரிவு புலனாய்வு அமைப்பை சார்ந்த சிலரை விசாரிக்க வைத்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.