கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

09 October, 2023

சரியான முதல் பாடம் ...




 நம்மால் முடியாதது எது, நமக்கு எல்லாம் தெரியும், நாம் எல்லாம் கற்று விட்டோம், நமக்குள் எல்லா திறனும்  இருக்கிறது என்ற ஒரு ஆணவம் ஒவ்வொருகுள்ளும் ஒளிந்திருக்கும்...


அது அவர்களை விட்டு எளிதில் அகன்று விடாது. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் அந்த ஆணவம் தலைக்கு ஏறிக்கொண்டு இருக்கும். "இது நம்மால் மட்டும் தான் சாத்தியம்" நான் கை வைத்தால் போதும் அது வெற்றி தான் என்கிற மனநிலை...

முதல் அடி விழும். அந்த அடி எப்பொழுது, எங்கு, எப்படி விழுகிறது என்றே தெரியாது. அந்த முதல் சறுக்கல் அல்லது அந்த முதல் ஒரு பயணத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்த அடி விழும். அந்த அடி தான் அவர்களுக்கு ஒரு சரியான பாடத்தை சொல்லித் தரும்.

அந்தப் பாடம் அடுத்த நகர்வை எப்படி சரியாய் நகர்த்துவது என்பதுதான். ஆணவத்தை அழிக்கும் அந்த முதல் பாடம் தான் இனி ஒவ்வொரு முறையும் நாம் சரியாக செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும்.

இது நம் வாழ்வில்  செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இது பொருந்தி போகும் ஒரு சருக்களுக்குப் பின் நாம் எடுத்து வைக்க ஒவ்வொரு அடியும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். என்னவென்றால் சிலர் இதை ஆரம்பத்திலேயே கற்றுகொள்வார்கள், பலர் பாதியில், சிலர் இறுதியில் எது எப்படியோ நான் சரியாக கடந்து போக வேண்டும் தவறுகளை களைய வேண்டும் என்பதை அந்த ஒரு சறுக்கல் உறுதியாய் சொல்லிக் கொடுக்கும்.

இந்திய உலகக்கோப்பை போட்டியில் நேற்றைய ஆஸ்திரேலியா உடனான போட்டி அதைத்தான் இந்திய அணிக்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஆரம்பத்தில் இருந்த மனநிலை என்பது நாம் 20-20 போட்டியிலேயே 200 அடிக்கிற ஆட்கள்... 50 ஓவர் உள்ள இந்தப் போட்டிக்கு வெறும் 200 ரன்கள் என்பது இந்திய அணிக்கு ஒரு சாதாரண விஷயம் என்று கருதிக் கொண்டிருந்தனர். 

ஆனால் அந்த ஆணவத்தை உடைக்க இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற நிலை வருகிற போது, எப்படி பந்துகளை எதிர்கொள்ள வேண்டும், எவ்வாறு பொறுமையாக ஆட வேண்டும், எவ்வாறு வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற பாடத்தை இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலே தெரிந்து கொண்டு விட்டது.

என்னுடைய கணிப்பின்படி இனி ஒவ்வொரு ஆட்டங்களிலும்  அனைத்து வீரர்களும் வெற்றிக்கான நகர்வை  கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள். எப்படி பொறுமையாக ஆட வேண்டும், என்ற போராட்ட குணம் அனைவருக்குள்ளும் வந்திருக்கும். 

இந்த முதல் அடி தான் ஒவ்வொரு வெற்றியையும், அனைவரும் ஒன்று சேர்ந்து, பொறுமை காத்து  போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையை இந்திய அணிக்கு  எடுத்துரைத்திருக்கிறது.

விளையாட்டில் வெற்றி  தோல்வி என்பது சகஜம்தான். அதை எப்படி அடைகிறோம் என்பதில் தான் நமக்கான மதிப்பின் பங்கு இருக்கிறது. 

இந்தப் பாடத்தை களத்தில் நின்று எழுதிட முடியாத வரிகளில் அனைவருக்கும்  சொல்லிக் கொடுத்திருந்தார்கள் வீரட் கோலியும்... கே எல் ராகுலும்...

இனி வரும் ஆட்டங்களில்  இந்தியா ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக பொறுமையாக முன்னேறும்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஏனென்றால் கல்வியும் பாடமும் தான் ஒருவரை வாழ்க்கையில் மென்மேலும் உயர்த்துகிறது. சிலர் ஏட்டு பாடத்தை கற்காமல் வாழ்க்கை பாடத்தை படித்து உயர்ந்திருப்பார்கள். அதுவும் ஒரு வகையில் கல்வி தானே.

#கற்பது_முக்கியம்..
கவிதைவீதி சௌந்தர் 
09-10-2023.

23 December, 2012

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டெண்டுல்கரின் அண்மைய ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரலும் வலுத்தது. 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் டெண்டுல்கர், 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. 

இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமை சச்சினுக்கு உண்டு.




Sachin Tendulkar


Full name Sachin Ramesh Tendulkar


Born April 24, 1973, Bombay (now Mumbai), Maharashtra

Current age 39 years 243 days

Major teams India, Asia XI, Mumbai, Mumbai Indians, Yorkshire

Nickname Tendlya, Little Master

Playing role Top-order batsman

Batting style Right-hand bat

Bowling style Right-arm offbreak, Legbreak googly

Height 5 ft 5 in

Education Sharadashram Vidyamandir School

Sachin Ramesh Tendulkar
Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
Tests 194 320 32 15645 248* 54.32

51 66
67 114 0
ODIs 463 452 41 18426 200* 44.83 21367 86.23 49 96 2016 195 140 0
T20Is 1 1 0 10 10 10.00 12 83.33 0 0 2 0 1 0
First-class 299 474 48 24701 248* 57.98

79 112

184 0
List A 551 538 55 21999 200* 45.54

60 114

175 0
Twenty20 77 77 10 2440 100* 36.41 2008 121.51 1 15 313 31 24 0
Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
Tests 194 141 4186 2459 45 3/10 3/14 54.64 3.52 93.0 0 0 0
ODIs 463 270 8054 6850 154 5/32 5/32 44.48 5.10 52.2 4 2 0
T20Is 1 1 15 12 1 1/12 1/12 12.00 4.80 15.0 0 0 0
First-class 299
7551 4351 70 3/10
62.15 3.45 107.8
0 0
List A 551
10230 8478 201 5/32 5/32 42.17 4.97 50.8 4 2 0
Twenty20 77 8 93 123 2 1/12 1/12 61.50 7.93 46.5 0 0 0

29 April, 2011

உலக கோப்பை இறுதி போட்டியில் 'மேட்ச் பிக்சிங் - பரபரப்பு புகார்...



இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். மேட்ச் பிக்ஸிங்கை நாம் இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கும் ஏற்படும்.

 மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருவோரின் பெயர் விவரங்களை விரைவிலேயே வெளியிடுவேன். இந்த மோடி இன்று, நேற்று தொடங்கவில்லை. நீண்டகாலமாகவே உள்ள பிரச்சனை இது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த பிக்ஸிங் நடக்கிறது என்பதை உறுதியாகவே சொல்வேன்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்தப் போட்டியில் 4 வீரர்களை ஏன் கடைசி நேரத்தில் மாற்றினார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். மென்டிசை ஏன் மாற்றினார்கள்?, ரன்னே எடுக்காத கபுகேந்திராவை ஏன் சேர்த்தார்கள்?.

மேட்ச் பிக்சிங் இந்த நாட்டின் கிரிக்கெட்டில் சகஜமாகிவிட்டது என்கிறேன். இது இப்போது கேன்சர் மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது. இதை வெளியில் சொல்ல பலர், பலமுறை முயன்றனர். ஆனால், அவர்களுக்கும் பணம் தந்து வாயை அடைத்துவிட்டனர்.

எனது இந்தப் பேட்டியை அந்த மேட்ச் பிக்ஸிங் கும்பலும் படிக்கும். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். விரைவிலேயே, உங்கள் பெயர் விவரங்களையும் வெளியில் சொல்வேன். (தட்ஸ் தமிழ்)

இந்த மோசடியை இப்போதாவது, பொறுப்பில் உள்ளவர்கள் தலையிட்டு அடுத்த சில ஆண்டுகளிலாவது முறியடிக்க வேண்டும். ஊழலும், அரசியலும் நிறைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இதைச் செய்யத் தவறினால், பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும் என்றார் ஹசன் திலகரத்னே.

2003ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை 10 மேட்ச்களுக்கு இவர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்..

06 April, 2011

இந்திய அணிக்கு ஒபாமா விருந்தா?..


கிரிக்கெட்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அமெரிக்காவிலிருந்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து வந்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதனால் இந்திய கிரிக்கெட் அணியை அதிபர் ஒபாமா நேரில் அழைத்து பாராட்டி விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை நேற்று ரோமர் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியை, குறிப்பாக நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணி ஆகியோரைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

சச்சின் குறித்து ரோமர் கூறுகையில், கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது. அதேபோல எந்தவிதமான பிசிரும் இல்லாமல், மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் முடிவெடுக்கும் கேப்டன் டோணியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது.

கிரிக்கெட் ராஜாக்களின் இந்த சாதனையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா கேட் பகுதியில் நடந்த கொண்டாட்டத்தில் நானே கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நான் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். பிரகாசமான தொடக்கத்தை என்னால் காண முடிகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை மிகச் சிறப்பாக நடத்த இந்திய பாதுகாப்புப் படையினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அதையும் நான் பாராட்டுகிறேன் என்றார் ரோமர்.

இந்தியாவுடன் முன்பை விட அதிக அளவிலான நெருக்கத்தை தற்போது அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. ஒபாமாவின் நிர்வாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் நிறையப் பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்தியா மற்றும் இந்தியர்களுடன் மேலும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் டோணி தலைமையிலான இந்திய அணியினரை வாஷிங்டனுக்கு நேரில் அழைத்து ஒபாமா விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

22 January, 2011

டக்வோர்த் லூயிஸ்

நேற்று தென்னாப்பிரிக்கா எதிராக இந்தியா டக்வோர்த் லூயிஸ் முறையில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டு ஒரு சரித்திர நிகழ்வை தள்ளி வைத்திருக்கிறது.. தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதனைப்படைக்க அடுத்த ஆட்டம் வரை காத்திருக்கவேண்டும். தோனி தலைமையில் இந்த சாதனையும் இந்தியா நிகழ்த்தும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்..

அது என்ன டக்வோர்த் லூயிஸ் முறை (D/L mathod)  தெரிந்துக் கொள்ளுங்கள்..

டக்வோர்த் லூயிஸ் முறை (Duckworth-Lewis method) அல்லது ட/லூ முறை என்பது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் (ODI) மற்றும் இருபது20 (T20) போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ரன் இலக்கை கணிதவியலின் உதவியுடன் அறுதியிடும் (நிர்ணயிக்கும்) ஓர் முறையாகும். 

இது ஆங்கிலேய புள்ளியியலாளர்களாகிய பிராங் டக்வோர்த், டொனி லூயிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும். பன்னாட்டு துடுப்பாட்ட மன்றம் இதனை சீர்தரமாக (நியமமாக) ஏற்றுக் கொண்டுள்ளது.இது பொதுவாக நியாயமான, துல்லியமான இலக்கை அறுதியிடும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஆட்டம் இயல்பாக முடிந்திருந்தால் என்ன நடந்திருக்கலாம் என்று முன்னுரைக்க முயல்வதால் சிலநேரங்களில் சர்ச்சைகளை கிளப்புகிறது.

கணக்கிடும் தத்துவம்

ட/லூ முறையின் சாராம்சம் வளங்கள் ஆகும். ஒவ்வொரு அணியும் மிகுந்த கூடுதல் ஓட்டங்கள் எடுக்க இரு வளங்களைக் கொண்டுள்ளன; பெறவிருக்கும் ஓவர்களின் (அல்லது பந்துகளின்) எண்ணிக்கை மற்றும் இன்னும் விழாத விக்கெட்கள். எந்தமுறை ஆட்டத்திலும் எந்தநிலையிலும் ஓர் அணி கூடுதலாக எடுக்கக்கூடிய ஓட்டங்களின் எண்ணிக்கை இந்த இரு வளங்களைப் பொறுத்தே அமையும். பல்லாண்டு ஓட்ட எண்ணிக்கைகளை ஆராயந்தால் ஓர் அணியின் இறுதி எண்ணிக்கைக்கும் அந்த அணிக்குக் கிடைத்த இவ்விரு வளங்களுக்கும் இடையே ஓர் ஒப்பு இயைபு இருப்பதைக் காணலாம். இதனையே ட/லூ முறை பயன்படுத்துகிறது.

அச்சிடப்பட்ட அட்டவணைகளிலிருந்து, இவ்விரு வளங்களின் சதவீதத்தை மீதமிருக்கும் ஓவர்கள் (அல்லது பந்துகள்) மற்றும் விக்கெட்கள் இழப்பு இவற்றைக்கொண்டு அறிந்து மேற்பட்டு எழும் வளங்களின் குறைவிற்கு ஏற்ப மேலேயோ கீழேயோ சரிசெய்து ஓட்ட இலக்கினை அறுதியிட முடியும். இந்த சதவீதத்தைக் கொண்டு கணக்கிடப்படும் இலக்கு சமன் என்று கூறப்படும். இரண்டாவது அணி இதனை எட்டினால் வென்றதாக அறிவிக்கப்படும். அதே இலக்கை (கீழுள்ள முழு எண்ணிற்கு திருத்தப்பட்டது) அடைந்தால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாகக் கொள்ளப்படும்
.
இம்முறையில் ஆட்டத்தின் வெற்றிதோல்விகளை கணக்கிட ஒரு நாள் துடுப்பாட்டப்போட்டிகளில் குறைந்தது 20 ஓவர்களும் இருபது20 ஆட்டங்களில் குறைந்தது 5 ஓவர்களும் ஆடப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணங்கள்

முதல்முறை ஆட்டத்தின்போது ஆட்டம் தடைபட்டால்


2008 தொடரில் நான்காவது இந்தியா- இங்கிலாந்து ஒருநாட்போட்டியில் முதல்முறை ஆட்டமே மழையினால் இருமுறை தடைபட்டு ஒவ்வொரு அணியும் 22 ஓவர்களே விளையாடுமாறு அமைந்தது. முதலில் ஆடிய இந்தியா 166/4 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் ஓட்ட இலக்கு ட/லூ முறையில் 22 ஓவர்களில் 198 ஓட்டங்களாக அறுதியிடப்பட்டது.

இந்த எடுத்துக்காட்டில் முதல்முறை ஆட்டம் தடைபட்டால் இரண்டாம் முறை ஆடும் அணியின் இலக்கு ட/லூ முறையில் எவ்வாறு கூடுதலாகிறது என்பதை விளக்குகிறது. இங்கிலாந்து அணிக்கு முன்னதாகவே 22 ஓவர்கள் மட்டுமே ஆடவேண்டும் என்பது தெரிந்திருந்தமையால் தடைபட்ட முதல்முறை ஆட்டத்தில் இந்தியா எடுத்த ஓட்டங்களை விட கூடுதலாக எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியுள்ளது. இங்கிலாந்து 22 ஓவர்களில் 178/8 எடுத்ததால் ஆட்டத்தை இந்தியா ட/லூ முறையில் 19 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது

இரண்டாம் முறை ஆட்டத்தின்போது ஆட்டம் தடைபட்டால்

2006ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் நடந்த முதல் ஒருநாள் போட்டி ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். முதலில் ஆடிய இந்தியா 49வது ஓவரிலேயே 328 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவதாக ஆடிய பாக்கித்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 47வது ஓவரில் ஒளிக்குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த எடுத்துக்காட்டில், பாக்கித்தானின் இலக்கு, ஆட்டம் தொடர்ந்திருந்தால் மூன்று ஓவர்களில் (18 பந்துகளில்) 18 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆட்டத்தில் எடுத்த ஓட்டவேகத்தைக் கணித்தால் இதனை பெரும்பாலான அணிகள் எட்ட இயலும். ட/லூ முறையின்படியும் ஓட்ட இலக்கு 47 ஓவர் முடிவில் 304 ஓட்டங்களாக இருந்தது. ஆகவே பாக்கித்தான் ட/லூ முறையில் 7 ஓட்ட வேறுபாட்டில் வென்றதாக பதியப்பட்டது.

12 January, 2011

சச்சினுக்கு டாக்டர் பட்டம்

பல்வேறு விருகளுக்கு சொந்தக்காரரான சச்சினை கௌரவப்படுத்தும் வகையில் அவருக்கு மைசூர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அறிவித்துள்ளது. 

சச்சின் டெண்டுல்கர், வீரப்பமெய்லி உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு அறிவித்துள்ள இவ்விருது இம்மாதம் இறுதியில் நடைப்பெறயிருக்கும் பட்டமளிப்பு விழாவில் சச்சின் வழங்கப்படஉள்ளது...
 
கிரிக்கெட் உலகின் பிதாமன் என்று அழைப்பாடும் சச்சின் இதுவரை பெற்றுள்ள பட்டங்கள் :
  • இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 2008 -க்கான பத்ம விபூஷன் (Padma Vibhushan)
  •  ஐசிசி ஒருநாள் சர்வதேச உலக கோப்பை XI (ICC World ODI XI): 2004, 2007
  • 2003 உலக கோப்பை கிரிக்கெட் (2003 Cricket World Cup) போட்டிகளில் தொடர் நாயகன்
  • 1997ஆம் ஆண்டுக்கான விஸ்டென் கிரிக்கெட் வீரர் (Wisden Cricketer of the Year) 
 
  • இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான 1999ல் பத்மஸ்ரீ விருது (Padma Shri)
  • கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான சாதனைகளுக்காக 1994 -ல் இந்திய அரசால் அர்ஜூனா விருதால் (Arjuna Award) கௌரவிக்கப்பட்டார்
  • விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக 1997-98 இந்தியாவின் உயர்ந்த கௌரவமான ராஜீவ்காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருது அளிக்கப்பட்டது

08 January, 2011

கங்குலிக்கு கல்தா - ஐபிஎல் வீரர் ஏலம் முழு விவரம்

ஐபிஎல் சீஸன் 4 போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் இன்று ஏலம் எடுத்தன. இன்றைய ஏலத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீரை அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு நடிகர் ஷாருக் கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) ஏலம் எடுத்துள்ளது. இதே அணி யூசுப் பதானை ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராபின் உத்தப்பாவை புனே சஹாரா வாரியர்ஸ் ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.

வீரரின் பெயர்ஏலம் எடுத்த அணிவாங்கப்பட்ட விலை
கெளதம் கம்பீர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.11.04 கோடி
யூசுப் பதான்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.9.66 கோடி
ரோஹித் சர்மாமும்பை இந்தியன்ஸ்ரூ.9.2 கோடி
ராபின் உத்தப்பாபுனே சஹாரா வாரியர்ஸ்ரூ.9.66 கோடி
ராகுல் திராவிட்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.2.26 கோடி
ஆடம் கில்கிறிஸ்ட்பஞ்சாப் லெவன்ரூ.4.08 கோடி
ஜாக் கல்லிஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.5 கோடி
ஆன்ட்ரூ சைமண்ட்ஸ்மும்பை அணிரூ.3.85 கோடி
குமார் சங்ககராடெக்கான் சார்ஜர்ஸ்ரூ.3.17 கோடி
யுவராஜ் சிங்புனே வாரியர்ஸ்ரூ.8.28 கோடி
மஹேல ஜெயவர்தனாகொச்சி அணிரூ.6.75 கோடி
டிவில்லியர்ஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.5.06 கோடி
ஜகீர் கான்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.4.14 கோடி
ரோஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.4.6 கோடி
இர்பான் பதான்டெல்லி டேர் டெவில்ஸ்ரூ.8.62 கோடி
தினேஷ் கார்த்திக்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 4.14 கோடி
டேவிட் ஹுஸ்ஸேகிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 6.44 கோடி
அபிஷேக் நாயர்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 3.68 கோடி
ஸ்டவுட் ப்ரோட்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 1.84 கோடி
ராஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.6 கோடி
ஜோகன் போத்னாராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.37 கோடி
விவிஎஸ் லட்சுமண்கொச்சி அணிரூ. 1.84 கோடி
பிரண்டன் மெக்கொல்லம்கொச்சி அணிரூ. 2.18 கோடி
ஸ்ரீசாந்த்கொச்சி அணிரூ. 4.14 கோடி
ஆர்.பி.சி்ங்கொச்சி அணிரூ. 2.3 கோடி
பார்தீவ் படேல்கொச்சி அணிரூ. 1.33 கோடி
ரவீநதிர ஜடேஜாகொச்சி அணிரூ. 4.37 கோடி
பிராட் ஹட்டின்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.49 கோடி
ஷாகிப் அல்ஹசன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.95 கோடி
டேவிட் ஜேக்கப்மும்பை இண்டியன்ஸ்ரூ. 87.4 லட்சம்
டேவிட் வார்னர்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 3.4 கோடி
நமன் ஓஜாடெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.24 கோடி
ஜேம்ஸ் ஹோப்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.16 கோடி
விரித்திமான் சாஹாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 46 லட்சம்
கிராம் ஸ்மித்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 2.3 கோடி
டிம் பெய்ன்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 1.24 கோடி
தில்ஷான் திலகரத்னேபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.99 கோடி
டேனியல் வெட்டோரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.6 கோடி
செளரப் திவாரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 7.36 கோடி
கெவின் பீட்டர்சன்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 2.99 கோடி
கேமரூன் ஒயிட்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 5.06 கோடி
ஷிகார் தவான்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ஜே.பி.டுமினிடெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ட்வைன் பிரேவாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 93 லட்சம்



கண்டுகொள்ளப்படாத கங்குலி!
கடந்த ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியையும் இந்த சீஸனில் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

கங்குலியும் சாதாரண வீரரல்ல. பல சாதனைகள் செய்தவர். இந்திய அணியின் கேப்டனாக நீண்ட காலம் பணியாற்றிவர். ஆனால் முதல் சுற்று ஏலத்தில் இவரை யாருமே கேட்கவில்லை.

ஆரம்பத்தில் இவரது விலை 2 லட்சம் டாலராக இருந்தது. ஆனால் கங்குலி திடீரென தனது விலையை 4 லட்சம் டாலராக்கிவிட்டதால், அவரை எடுக்க திட்டமிட்டிருந்த புனே அணி திட்டத்தைக் கைவிட்டது. இவர் முன்பு விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இவரை வேண்டாம் என வெளிப்படையாகவே கூறிவிட்டது

20 December, 2010

இந்திய அணியை தேர்வு செய்யுங்கள்...


 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்துக்குப் பின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்தார். 

அவற்றில் இடம் பிடித்துள்ள இந்தி அணியினர் விவரம்









இந்த 30 வீரர்களில் எந்த 15 பேர் 2011 உலககோப்பை போட்டிக்கு பொருத்தமாக இருபார்கள் தேர்வு செய்யுங்கள் பார்ப்போம்...

நான் தேர்ந்தெடுத்த இந்திய அணி

மகேந்திர சிங் தோனி,  வீரேந்திர சேவாக்,  சச்சின் டெண்டுல்கர்,  கெüதம் கம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்,  ரோஹித் சர்மா, யூசுப் பதான், பியூஷ் சாவ்லா, பிரக்யான் ஓஜா,  ஜாகீர்கான்,  ஸ்ரீசாந்த்,  பிரவீண் குமார் 

எப்பு...டி...

14 December, 2010

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவரை...

இதோ உலககோப்பை கிரிக்கொட் போட்டி துவங்க இன்னும் 
50 நாட்க‌ளே உள்ளது

அதற்கு முன்... இப்போட்டியில் இதுவரை கோப்பையை தனதாக்கியவர்களின்
பட்டியல்...



  Cricket World Cup Final Match 1975
Venue : Lords, England, 
Finals : Between West Indies led by Clive Lloyd and 
Australia led  by Ian Chappell on June 21, 1975. 
Winner : West Indies beat Australia for 17 runs 
Man of the match : Clive Lloyd scoring 102 runs off just 85 balls   .

**********************************************************************************
 
 Cricket World Cup Final Match 1979

 Venue : Lords, England, 
Finals : Between West Indies led by Clive Lloyd and 
England led by Mike Brearley on June 23, 1979. 
Winner : West Indies beat England by 92 runs, 
 Man of the match : Vivian Richards scoring an unbeaten 138 runs

**********************************************************************************

Cricket World Cup Final Match 1983

Venue : Lords, England..., 
Finals : Between West Indies led by Clive Lloyd 
and India led by Kapil Dev on June 25, 1983..., 
Winner : India beat West Indies by 43 runs..., 
Man of the match : Indian Vice Captain Mohinder Amarnath 
for picking 3 wickets for 12 balls. Also scored 26 runs
 
**********************************************************************************
Cricket World Cup Final Match 1987

Venue : Eden Gardens, Kolkata, India   . 
Finals : Between Australia led by Allan Border and England 
led by Mike Gatting on November 8, 1987.    
Winner : Australia beat England by 7 runs  
Man of the match : David Boon scored 75 runs
 
**********************************************************************************

  Cricket World Cup Final Match 1992

Venue : Australia   . Finals : Between Pakistan led by Imran Khan 
and England led by Graham Gooch on March 25, 1992.    
Winner : Pakistan beat England by 22 runs   
Man of the match : Wasim Akram, who picked up three wickets

**********************************************************************************

Cricket World Cup Final Match 1996

Venue : Lahore, Pakistan 
Finals : Between Srilanka led by Arjuna Ranatunga 
and Australia led by Mark Taylor on March 17, 1996.    
Winner : Srilanka beat Australia by 7 wickets...
Man of the Match : Aravinda da Silva
 
 **********************************************************************************

 
  
 Cricket World Cup Final Match 1999

 Venue : Lords, England   
Finals : Between Australia led by Steve Waugh 
and Pakistan led by Wasim Akram on June 20, 1999.  
Winner : Australia beat Pakistan by 8 wickets.  
Man of the match : Shane Warne
 
**********************************************************************************

Cricket World Cup Final Match 2003
 
Venue : Johannesburg, South Africa  
Finals : March 23  on 2003
Winner : Australia beat India by 125 runs.   
Man of the match : Ricky Ponting for scoring 140 runs from 121 balls
**********************************************************************************


 Cricket World Cup Final Match 2007

Cricket World Cup Final Match 2007    
Venue : West Indies  
Final : April 28' 2007    
Winner : Australia beat Sri Lanka by 53 runs  
Man of the match : Adam Gilchrist
 
**********************************************************************************
  Cricket World Cup 2011
வெள்ளப்போவது யாரு 
பொறுத்திருந்து பார்ப்போம்....

02 December, 2010

icc world cup cricket 2011 போட்டி அட்டவணை


கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் 
16 நாடுகள் பங்கு கொள்ளும் உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுப் ‌போட்டியான உலகக்கோப்பை  கிரிக்கெட் போட்டியின் அட்டவணை

Match Date Teams Venue
1 19 Feb India vs Bangladesh Dhaka
2 20 Feb New Zealand vs Kenya Chennai
3 20 Feb Sri Lanka vs Canada Hambantota
4 21 Feb Australia vs Zimbabwe Ahmedabad
5 22 Feb England vs Netherlands Nagpur
6 23 Feb Pakistan vs Kenya Hambantota
7 24 Feb South Africa vs West Indies New Delhi
8 25 Feb Australia vs New Zealand Nagpur
9 25 Feb Bangladesh vs Ireland Dhaka
10 26 Feb Sri Lanka vs Pakistan Colombo
11 27 Feb India vs England Kolkata
12 28 Feb West Indies vs Netherlands New Delhi
13 28 Feb Zimbabwe vs Canada Nagpur
14 1 Mar Sri Lanka vs Kenya Colombo
15 2 Mar England vs Ireland Bangalore
16 3 Mar South Africa vs Netherlands Mohali
17 3 Mar Pakistan vs Canada Colombo
18 4 Mar New Zealand vs Zimbabwe Ahmedabad
19 4 Mar Bangladesh vs West Indies Dhaka
20 5 Mar Sri Lanka vs Australia Colombo
21 6 Mar India vs Ireland Bangalore
22 6 Mar England vs South Africa Chennai
23 7 Mar Kenya vs Canada New Delhi
24 8 Mar Pakistan vs New Zealand Pallekelle
25 9 Mar India vs Netherlands New Delhi
26 10 Mar Sri Lanka vs Zimbabwe Pallekelle
27 11 Mar West Indies vs Ireland Mohali
28 11 Mar Bangladesh vs England Chittagong
29 12 Mar India vs South Africa Nagpur
30 13 Mar New Zealand vs Canada Mumbai
31 13 Mar Australia vs Kenya Bangalore
32 14 Mar Pakistan vs Zimbabwe Pallekelle
33 14 Mar Bangladesh vs Netherlands Chittagong
34 15 Mar South Africa vs Ireland Kolkata
35 16 Mar Australia vs Canada Bangalore
36 17 Mar England vs West Indies Chennai
37 18 Mar Sri Lanka vs New Zealand Mumbai
38 18 Mar Ireland vs Netherlands Kolkata
39 19 Mar Australia vs Pakistan Colombo
40 19 Mar Bangladesh vs South Africa Dhaka
41 20 Mar Zimbabwe vs Kenya Kolkata
42 20 Mar India vs West Indies Chennai
43 23 Mar First Quarterfinal Dhaka
44 24 Mar Second Quarterfinal Colombo
45 25 Mar Third Quarterfinal Dhaka
46 26 Mar Fourth Quarterfinal Ahmedabad
47 29 Mar First Semifinal Colombo
48 30 Mar Second Semifinal Mohali
49 02 Apr FINAL Mumbai

எது ‌எப்படி இருந்தலும் தற்போது நல்ல பார்மில் விளையாடிக் ‌கொண்டிருக்கும் நம்ம இந்திய அணி கோப்பையை வெல்ல நாமும் இந்த ‌கொண்டாடத்தில் பஙகொடுத்து நம்ம அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்..
நம்ம நம்பிக்கை நட்சத்திரம் சச்சின். அதிரடி நாயகன் சேவாக். இளம்புயல் காம்பீர். நாயகன் தோனி. வேகப்பந்து ஜாகீர். சுறாவளி அர்பஜன் ஆகியோரின் ‌செயல்பாடு சிறப்பாக இருக்கும் என நம்பினால்
இந்த கப்பு நமக்குதான்...


Related Posts Plugin for WordPress, Blogger...