கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 April, 2011

உலக கோப்பை இறுதி போட்டியில் 'மேட்ச் பிக்சிங் - பரபரப்பு புகார்...



இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். மேட்ச் பிக்ஸிங்கை நாம் இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கும் ஏற்படும்.

 மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருவோரின் பெயர் விவரங்களை விரைவிலேயே வெளியிடுவேன். இந்த மோடி இன்று, நேற்று தொடங்கவில்லை. நீண்டகாலமாகவே உள்ள பிரச்சனை இது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த பிக்ஸிங் நடக்கிறது என்பதை உறுதியாகவே சொல்வேன்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்தப் போட்டியில் 4 வீரர்களை ஏன் கடைசி நேரத்தில் மாற்றினார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். மென்டிசை ஏன் மாற்றினார்கள்?, ரன்னே எடுக்காத கபுகேந்திராவை ஏன் சேர்த்தார்கள்?.

மேட்ச் பிக்சிங் இந்த நாட்டின் கிரிக்கெட்டில் சகஜமாகிவிட்டது என்கிறேன். இது இப்போது கேன்சர் மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது. இதை வெளியில் சொல்ல பலர், பலமுறை முயன்றனர். ஆனால், அவர்களுக்கும் பணம் தந்து வாயை அடைத்துவிட்டனர்.

எனது இந்தப் பேட்டியை அந்த மேட்ச் பிக்ஸிங் கும்பலும் படிக்கும். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். விரைவிலேயே, உங்கள் பெயர் விவரங்களையும் வெளியில் சொல்வேன். (தட்ஸ் தமிழ்)

இந்த மோசடியை இப்போதாவது, பொறுப்பில் உள்ளவர்கள் தலையிட்டு அடுத்த சில ஆண்டுகளிலாவது முறியடிக்க வேண்டும். ஊழலும், அரசியலும் நிறைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இதைச் செய்யத் தவறினால், பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும் என்றார் ஹசன் திலகரத்னே.

2003ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை 10 மேட்ச்களுக்கு இவர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்..

29 comments:

  1. ஆஹா அப்ப நம்ம கப்பு பரி போயிடுமா?

    ReplyDelete
  2. அந்த மேட்ச் பார்க்கும் போது அப்படி தெரியலையே

    ReplyDelete
  3. எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாய்ங்க

    ReplyDelete
  4. வச்சிட்டான்யா ஆப்பு

    ReplyDelete
  5. அப்போ அந்த அளவுக்கு நடிக்கணுமா ரொம்ப கஷ்டம்யா!

    ReplyDelete
  6. உண்மையில் கிரிக்கெட்டை வெறிகொண்டு பார்க்கும் ரசிகர்கள்தான் பாவம்....

    ReplyDelete
  7. ///
    Speed Master said... [Reply to comment]

    ஆஹா அப்ப நம்ம கப்பு பரி போயிடுமா?
    /////

    அப்படியெல்லாம் இல்லை..
    குற்றம் நிறுபிக்கப்பட்டால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..

    ReplyDelete
  8. ///
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    அந்த மேட்ச் பார்க்கும் போது அப்படி தெரியலையே
    ////

    பார்த்தால் தெரியும்படி இருக்காது..

    ReplyDelete
  9. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    அடப்பாவிகளா?
    ////

    கோவப்படாதிங்க..

    ReplyDelete
  10. ///
    கந்தசாமி. said... [Reply to comment]

    வச்சிட்டான்யா ஆப்பு
    /////

    இது உண்மைதான பொருத்திருந்து பார்ப்போம்..

    ReplyDelete
  11. மேட்ச் பிக்சிங் அப்பிடின்னா என்ன...

    ReplyDelete
  12. // ஊழலும், அரசியலும் நிறைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இதைச் செய்யத் தவறினால்,//

    அவனுக அப்பிடி தொடர்ந்து செய்துட்டுதான் இருப்பானுக....

    ReplyDelete
  13. நம்பரா மாதிரி சொல்லுங்கப்பா

    ReplyDelete
  14. //விரைவிலேயே, உங்கள் பெயர் விவரங்களையும் வெளியில் சொல்வேன். //
    அவருக்கு ஆபத்துதான்!

    ReplyDelete
  15. ஹிஹி நான் அதை பார்த்தேன்..கடும் வாதங்கள் இலங்கையில் அதைப் பற்றி,
    சந்தேகள் அனைவருக்குமே இருக்குது!!

    ReplyDelete
  16. வானம் விமர்சனம்...நம்ம ஏரியா 'ல !!

    ReplyDelete
  17. உங்கள் படைப்பில்களில் தரம் கூடி வருகிறது. கொஞ்சம் தவறான ஒட்டுப்பிழைகளில் இருந்தாலும் கவிதை நன்றாக இருக்கிறது. உங்களிடம் திறமையிருந்தும் பிறரின் பின்னூட்டங்களில் வளவள என்று வாந்தி எடுப்பது போல வழிவது ஏன்? கொஞ்சம் இதை தவிர்த்தால் பிறர் பதிவினை வாசிக்க வரும் வாசகர்களின் எரிச்சலை மட்டுப்படுத்தலாமே! நீங்கள் இதுவரை ஏதேனும் உருப்பிடியான பின்னூட்டம் இட்டுள்ளீரா? இதை வேறுவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வலைத்தரம் உயர்த்த உங்கள் உயர்ந்த எண்ணம் வழிவிடும். கவிதை மழையில் குடையில்லாது நனைய ஆசைப்படுவர்களின் ஆதங்கம்.

    ReplyDelete
  18. ஆரம்பிச்சுட்டாங்கப்பா... என்னதான் நடக்கும் பார்க்க்லாம்.

    ReplyDelete
  19. ////
    விமர்சனம் said... [Reply to comment]

    உங்கள் படைப்பில்களில் தரம் கூடி வருகிறது. கொஞ்சம் தவறான ஒட்டுப்பிழைகளில் இருந்தாலும் கவிதை நன்றாக இருக்கிறது. //////////////

    தங்களின் வாழ்த்துக்கு மற்றும் உங்கள் எதிர்பார்ப்புக்கும் நன்றி..!

    ReplyDelete
  20. ///////விமர்சனம் said... [Reply to comment]

    உங்களிடம் திறமையிருந்தும் பிறரின் பின்னூட்டங்களில் வளவள என்று வாந்தி எடுப்பது போல வழிவது ஏன்? கொஞ்சம் இதை தவிர்த்தால் பிறர் பதிவினை வாசிக்க வரும் வாசகர்களின் எரிச்சலை மட்டுப்படுத்தலாமே! /////////////

    என்ன இது வாந்தி எடுப்பது போனாறா...

    எல்லா தளங்களிலும் அதுபோல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட நண்பர்களின் தளங்களில் மட்டும்தான்...
    இருக்கும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள. அந்த பதிவிற்கு ஏற்பத்தான் எனது பின்னுட்டங்கள் இருக்கும்...

    ReplyDelete
  21. ///
    விமர்சனம் said... [Reply to comment]

    நீங்கள் இதுவரை ஏதேனும் உருப்பிடியான பின்னூட்டம் இட்டுள்ளீரா?
    ////////


    என்ன உருப்படியான பின்னூட்டமா?

    அதிக தளங்கள் செல்வதற்காகவே பின்னூட்டத்தின் அளவு சிறியதாக இருக்கலாம் இருந்தாலும், ஒரு பதிவை படித்தும் அதற்கு நிறைய பின்னூட்டம் தர ஆசை இருந்தும் நேரம் கருதியே முடியாமல் போகிறது.....

    தாங்கள் பதிவுலகம் வந்து பதிவிடுங்கள்
    தங்களுக்கு கண்டிப்பாக உருப்படியான பின்னுட்டம் தருகிறேன்...

    ReplyDelete
  22. ///
    கவிதை மழையில் குடையில்லாது நனைய ஆசைப்படுவர்களின் ஆதங்கம். /////////

    இது வரை தாங்கள் என்னுடைய எந்த கவிதையும் படித்து பின்னூட்டம் தந்ததது போல் எனக்கு நினைவில்லை...

    தற்போது கூட பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டம்தான் தநதுள்ளீர் என்று கருதுகிறேன்...

    ReplyDelete
  23. குறைகள் கூடாதுதான், அதற்காக பதிவுலகம் என்பது குறைகளே இருக்க கூடாத ஒன்று அல்ல.. இங்கே கருத்துக்கும், ஆக்கத்திற்கும், கலந்துரையாடலுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று கருதுகிறேன்.

    பதிவுலகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற தங்களின் கருத்துக்கு கவிதை வீதி தலைவணங்குகிறது. தங்கள் மனநிலையில் இருந்துதான் நானும் பதிவுலகம் நுழைந்தேன் ஆனால் பதிவுலக அரசியல் என்னை அதே வழியில் வழிநடத்துகிறது...

    இருந்தும் என்னுடைய பதிவுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதிலும், அது படிப்பவர்கள் மனதை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக்கூடாது என்பதிலும் இது வரை கண்ணியமாக நடந்துக் கொண்டுவருகிறேன்.

    ReplyDelete
  24. //////
    விமர்சனம் said... [Reply to comment]

    /////////
    இந்த பதிலை தாங்கள் பார்ப்பீர்களோ இல்லையோ...

    தங்கள் பின்னூட்டம் என் மனதை மிகவும் வேதனையடையச் செய்திருக்கிறது. அதனால்தான் இந்த விரிவாக பதிலுரை..
    பின்னூட்டம் இடும் போதும் மிக நாகரீகமாக நடந்துக் கொள்ளுங்கள்..

    நன்றி...!

    ReplyDelete
  25. எனக்கு அப்பவே ஒரு டவுட்டு

    ReplyDelete
  26. திரைமறைவிலான விடயங்கள் சகோதரம்.. ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...