கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பழமொழிகள். Show all posts
Showing posts with label பழமொழிகள். Show all posts

11 December, 2010

கெ முதல் கோ வரிசை பழமொழிகள்

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
 * கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
 * கெடுவான் கேடு நினைப்பான்
 * கெட்டாலும் செட்டி செட்டியே,
  * கிழிந்தாலும் பட்டு பட்டே.
  * கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  * கெட்டும் பட்டணம் சேர்
 * கெண்டையைப் போட்டு வராலை இழு.
 * கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
 * கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
 * கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
 * கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
 * கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
 * கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
 * கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
  * கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
 * கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
 * கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  * கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
  * கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  * கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
 * கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
 * கையிலே காசு வாயிலே தோசை
 * கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
 * கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
 * கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
 * கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
 * கொடிக்கு காய் கனமா?
 * கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
 * கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
 * கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
 * கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
 * கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
 * கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
 * கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
 * கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
 * கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
 * கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
 * கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
 * கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
 * கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  * கோடி வித்தையும் கூழுக்குத்தான்
 * கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
 * கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
 * கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
 * கோபம் சண்டாளம்.
 * கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
 * கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
 * கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
 * கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
 * கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
 * கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  * கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

30 November, 2010

கி, கீ, கு, கூ வரிசை பழமொழிகள்

* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது;
* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

23 November, 2010

கா வரிசை பழமொழிகள்

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
 * காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
 * காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
 * காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
 * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
 * காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
 * காணி ஆசை கோடி கேடு.
 * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
 * காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
 * காப்பு சொல்லும் கை மெலிவை.
 * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
 * காய்த்த மரம் கல் அடிபடும்.
 * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
 * காரண குருவே காரிய குரு!
 * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
 * காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
 * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
 * காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
 * காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
 * காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
 * காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
 * காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
 * காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
 * காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
 * காற்றில்லாமல் தூசி பறக்குமா?
 * காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
 * காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

20 November, 2010

க வரிசை பழமொழிகள்

* கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
* கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
* கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
* கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
* கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
* கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
* கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
* கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
* கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
* கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
* கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
* கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
* கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
* கரணம் தப்பினால் மரணம்.
* கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
* கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
* கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
* கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
* கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
* கல்லாதவரே கண்ணில்லாதவர்.
* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
* கல்வி அழகே அழகு.
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

18 November, 2010

ஐ. ஒ. ஓ வரிசை பழமொழிகள்

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
* ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
* ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
* ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
* ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
* ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
* ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
* ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
* ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
* ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
* ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

16 November, 2010

எ ஏ வரிசை பழமொழிகள்

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
* எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
* எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
* எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
* எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
* எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
* எதார்த்தவாதி வெகுசன விரோதி.
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
* எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
* எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
* எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
* எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
* எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
* எலி அழுதால் பூனை விடுமா?
* எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
* எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
* எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
* எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
* எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
* எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
* எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
* எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
* எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
* எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.
* எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
* எறும்புந் தன் கையால் எண் சாண்
* ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
* ஏரி நிறைந்தால் கரை கசியும்.
* ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
* ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
* ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
* ஏழை என்றால் எவர்க்கும் எளிது
* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
* ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

15 November, 2010

உ. ஊ வரிசை பழமொழிகள்

* உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
* உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
* உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
* உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
* உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
* உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
* உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
* உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
* உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
* உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
* உரம் ஏற்றி உழவு செய்
* உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
* உலோபிக்கு இரட்டை செலவு.
* உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
* உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
* உளவு இல்லாமல் களவு இல்லை.
* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
* உள்ளது போகாது இல்லது வாராது.
* உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
* உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
 * ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
* ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
* ஊண் அற்றபோது உடலற்றது.
* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
* ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

14 November, 2010

இ ஈ வரிசை பழமொழிகள்

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
* இஞ்சி இலாபம் மஞ்சளில்.
* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
* இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
* இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
* இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
* இராச திசையில் கெட்டவணுமில்லை
* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
* இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
* இருவர் நட்பு ஒருவர் பொறை.
* இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
* இல்லது வாராது; உள்ளது போகாது.
* இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
* இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
* இளங்கன்று பயமறியாது
* இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
* இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
* இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
* இறங்கு பொழுதில் மருந்து குடி.
* இறுகினால் களி , இளகினால் கூழ்.
* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

* ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
* ஈர நாவிற்கு எலும்பில்லை.
* ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

ஆ வரிசை பழமொழிகள்

* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* ஆசை வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
* ஆடிப் பட்டம் தேடி விதை.
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
* ஆழமறியாமல் காலை இடாதே.
* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
* ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

அ வரிசை பழமொழிகள்

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
* அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
* அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
* அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
* அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
* அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
* அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
* அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
* அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்  திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
* அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
* அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
* அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
* அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறச் செட்டு முழு நட்டம்.
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
* அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
* அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
* அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அற்றது பற்றெனில் உற்றது வீடு.
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
* அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
Related Posts Plugin for WordPress, Blogger...