கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label Tamil Joks. Show all posts
Showing posts with label Tamil Joks. Show all posts

14 January, 2016

பிரியாணி மாஸ்டர் பொங்கல் செய்தா எப்படியிருக்கும்..!


பிரியாணி மாஸ்டர பொங்கல் செய்ய சொன்னது தப்பா போச்சு..

ஏம்பா? என்னாச்சு?

பொங்கல் பொங்கி முடிச்சவுடனே மூடிய வச்சி மூடி 
அதுமேல நெருப்போட அடுப்புகரியப் 
போட்டு 'தம்'முல வச்சிட்டாரு.!..
**************************************


"புரட்சி வெடிக்கப் போகுதுன்'னா 
தலைவருக்குப் புரிய மாட்டேங்குது! "

"என்ன பண்றார்? "

"ரெண்டு காதையும் பொத்திக்கிறார்! "

**************************************


ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: !!!!!!
**************************************


"இந்தக் கால பசங்க 24 மணி நேரமும் 
வாட்ஸ்அப்-ல அடிமையாயிட்டாங்க தலைவரே!":

"நான்லாம் அந்தக் காலத்துல லாக்அப்-லதான்
அடிமையா இருந்தேன்!"
**************************************


ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… 
ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?

நோயாளி : டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
**************************************


நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்

டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.

நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. 
அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?
**************************************


ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான 
காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. 
அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...

மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. 
நீங்க கவலைப் படாதீங்க.

**************************************


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

24 July, 2015

இப்படியும் இருக்குமா... அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை...


உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, "என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது.. ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் "வாலி"பன் அல்லவா?" என்றார். எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தாா்.

===========================


எதிர்க்கட்சித் தலைவர் அனந்தநாயகி : என்னை அரசு சி.ஐ.டி. வைத்து வேவு பார்க்கிறது. என்னை சிஐடி போலீசார் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்..


முதல்வர் கலைஞர் : உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?

===========================


கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..


"இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?


" எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.. நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை.. பாண்டிசேரியில் நிற்கப்போகிறேன்..!"


உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..


பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!"

====================



ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்.


விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.


அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தத உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அவ்வளவு தான் நடிகை துண்ட காணோம், துணிய காணோமுன்னு இடத்தை காலி செய்தாராம்.



====================




ஒருமுறை கலைவாணர் நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடமிட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிக்கும் காட்சி.

ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று கேட்க மந்திரி வசனத்தை மறந்து பேய் முழி முழிக்க, இதை அறியாத அரசர் இன்னுமொரு தடவை சத்தமாக கேட்டார்..


கலிங்க ராஜா என்ன கட்டினார்..?

கலைவாணர் உடனடியாக " வேஷ்டி" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.


====================



ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து சென்றாராம்.


வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்

=========================



ஆசிரியர் இல்லத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது..


நெருப்பில் சாம்பிராணியைப் போடும் பொறுப்பு அந்த மாணவனுக்கு. அளவு பாராமல் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.. அந்தக் காலத்தில் சாம்பிராணி அரிதாகக் கிடைக்கும் பொருள்..!


ஆசிரியர் சொன்னார்.. அப்பா.. கொஞ்சமாகப் போடு..! பின்னாளில் நீ சாம்பிராணி விளையும் நாடு எதையும் போரில் வென்று கைப்பற்றுவாயானால் அப்போது அள்ளிப் போடலாம்..!


ஆசிரியர் வாக்கு பொய்க்கவில்லை.. பிற்காலத்தில் அம்மாணவன் சிரியா நாட்டைக் கைப்பற்றி சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்களைக் கவர்ந்தான்.. அவற்றை முதல் வேலையாக தன் ஆசிரியருக்கு அனுப்பினான்.. கீழ்கண்ட குறிப்புடன்..


பெருமானே..! இனி பிரார்த்தனையின்போது தாங்கள் சிக்கனம் காட்ட வேண்டியிராது..!

அம்மாணவன்... மாவீரன் அலெக்சாண்டர்..!


=========================

11 September, 2012

பயங்கரமான டாக்டரும்..! பலே போலீஸ்காரரும்..!


நோயாளியின் அறைக்குச் சென்ற டாக்டர் சிறிது நேரத்தில் வெளியே வந்து ”கொரடா இருக்குமா?” என்று கேட்டார்.

அதைப் பெற்றுக்கொண்டு கதவைச் சார்த்தி விட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியே வந்து அவர் ”திருப்புலி இருக்குமா?” என்று கேட்டார். அதையும் பெற்றுக் கொண்ட அவர் உள்ளே சென்றார்.

வெளியே காத்திருந்த அனைவரும் என்னவோ ஏதோவென்று தவித்தனர்.

மீண்டும் வெளியே வந்த டாக்டர். ”உளியும் சுத்தியலும் வேண்டுமே” என்றார்

“டாக்டர்! உண்மையைச் சொல்லுங்க. எங்க அப்பாவுக்கு என்ன? என்னென்னவோ கேட்கிறீங்களே..!” என்று அலறினான் மகன்.

“நான் கொண்டுவந்த பெட்டியைத் திறக்க முடியலே. அதைத்திறக்கத்தான் எல்லாப் பொருட்களையும் கேட்டேன். இன்னும் நோயாளியை நான் சோதிக்கவே இல்லை” என்று பதில் சொன்னார் டாக்டர்...

***************************************************************


போலீஸ்காரரைப் பார்த்த ஒருவர்,  “சார்! இங்கே காரை நிறுத்தலாமா?” என்று பேட்டார்.

“நிறுத்தக் கூடாது” என்றார் போலீஸ்காரர்.

“இங்கே பல கார்கள் நிற்கிறதே. அது எப்படி?” என்று கேட்டார் அவர்.

“அவர்கள் யாரும் என்னிடம் கேட்கவில்லை” என்று பதில் தந்தார் போலீஸ்காரர்.

***********************************************************


வழுக்கைத் தலையர் ஒருவர் முடி வெட்டும் நிலையத்திற்குள் நுழைந்தார். “முடி வெட்ட எவ்வளவு கட்டணம்?” என்று கேட்டார்.

“பத்து ரூபாய்” என்று பதில் வந்தது.

“சில முடிகளை வெட்டுவதற்குப் பத்து ரூபாயா?” என்று கேட்டார் அவர்.

“கட்டணம் முடி வெட்டுவதற்கு அல்ல. முடியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு” என்று உடனே பதில் வந்தது.

****************************
நன்றி..!

07 September, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்படி..! நித்தியானந்தா Vs சிரிப்பானந்தா

தோழி 1 : இன்னைக்கு எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் சண்டை...

தோழி 2 : கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா..?

தோழி 1 : இல்லை..! சமைக்காம போயிட்டாரு...!

**********************************************

முத்து : என் பையன் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிட்டான்..

சித்து : அப்புறம் என்ன படிக்க வைக்க போற..?

முத்து : இரண்டாம் வகுப்பு தான்...!

**********************************************
நோயாளி : சிஸ்டர்... பிளட் (Blood) பற்றின புத்தகம் ஏதாவது இருந்தா கெர்டுங்க..!

சிஸ்டர் : எதுக்குங்க..?

நோயாளி : எனக்கு நாளைக்கு பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னார்.. அதுக்காக ஏதாவது படிச்சி வைக்கத்தான்..!

நிருபர் : உங்க புதுப்படத்துக்கு ”டீ கடை” ன்னு பெயர் வச்சியிருக்கீங்களாமே?

டைரக்டர் : ஆமாம், படத்துல முக்கியமான நாட்டு நடப்பு, அரசியல் விவகாரங்களை நிறைய சொல்றோம்.. அதான்..

**********************************************
மாமியார் : அம்மாடி..! நல்ல புத்தகம் ‌கொடுத்தே போ...! சிரிச்சி சிரிச்சி பாதி உசுரே போயிடிச்சி..!

மருமகள்: அப்படின்னா இன்னும் ஒரு முறை படிங்க அத்தை...!

**********************************************

உங்க தூக்க மாத்திர பிஸினஸ் எப்படி இருக்குது...

 இப்ப தூங்குது..!

**********************************************


அய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!
Related Posts Plugin for WordPress, Blogger...