கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 April, 2013

காங்கிரஸ்-அதிமுக கூட்டணி...! திமுக தலைவராகிறார் அழகிரி..! தமிழகத்தின் தற்போதைய பரபரப்புகள்..!

உலகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் பொய்யான தகவல்களைக் கூறி ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயல்வது சகஜம். மேலும் வதந்தி பரப்புவதற்கும் இந்த நாள்தான் உகந்தது என்பது மக்களின் கருத்தாகும்..

முதன் முதலில் பிரான்ஸில்தான் இந்த ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடியுள்ளனர். உண்மையில் இது முட்டாள்கள் தினமாக முன்பு இருந்ததில்லை.

ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் துவக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16-ம் நூற்றாண்டில் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 

1582-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13-ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன. ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. 

எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர். அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1-ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். 

இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படும் உண்டு. ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள கூறுகின்றனர். 

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1-ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள். 

அதோடு பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகள் போன்றவையும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி பொய் செய்திகளை வெளியிடுவதுண்டு. 

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005-ம் ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. 'மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்' என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை ஜோக் என்றது நாசா. 

அதேபோல் 2003-ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத்தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது. 

ஆனால், வரலாற்றில் ஏப்ரல் - 1 என்ற தினத்தில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஜி-மெயில் சேவையை அறிவித்தபோது அதை பெரும்பாலானவர்கள் நம்பவில்லை. முட்டாள்கள் தினத்தை ஒட்டி போலி அறிவிப்பை செய்வதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மையில் அதே தினத்தில் இருந்துதான் அந்த சேவை தொடங்கப்பட்டது. 

அதோடு இந்திய ரிசர்வ் வங்கியே இந்த நாளில் தான் 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆக, முட்டாள்கள் தினம் கடைப்பிடிப்பது உபயோகமற்ற ஒரு விஷயமாக பலர் கருதுவதுண்டு. 

ஆனால் முட்டாள் ஆகாமல் இருக்க ஒரு நாளைக்கு மட்டுமாவது நம்மால் முழு விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். (தொகுத்தவை).

டிஸ்கி : ஓ.. தலைப்பா...? உலகத்துல இம்பும்டு பேர் இப்படி செஞ்சியிருக்காங்க நான் ஒரு தலைப்பு இப்படி போடக்கூடாதா..?  ‌தேங்ஸ் பாஸீ...!

8 comments:

  1. பாஸு... ஏன் இப்படி...? ஆனாலும் நல்ல தொகுப்பு...

    தலைப்பு நிஜமாகலாம்...!

    ReplyDelete
  2. ஏதோ நம்மளால முடிஞ்சது...

    தலைப்பு கண்டிபாக நடக்கவும் வாய்ப்பிருக்கிறது...

    ReplyDelete
  3. ஆனந்த விகடன். ஜூனியர் விகடன், குமுதம், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன் போன்ற பலான பத்திரிக்கைகளுக்குதான் கருணாதி குடும்பத்தை வைத்து வியாபாரம் நடக்கிறது..உனக்கென்ன கேடு....வேறு விஷயங்கள் தமிழ்நாட்டில் இல்லையா?

    ஒன்னு கருணாநிதி மற்றும் அவர் குடும்பம்,இல்லையென்றால் தமிழ்பற்று என்ற பெயரில் அண்டைய நாட்டு விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்கி இன்டர்நெட் பேஸ் புக்கில் குரைப்பது ....தமிழ்பற்று வியாபார தேச துரோகம் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. நீங்க தலைப்பை பார்த்து எந்த தகவலை தெரிஞ்சிக்க வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...?

      Delete
  4. தகவல் தொகுப்பு நன்று!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...